COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, April 13, 2014

திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி - கல்வி வியாபாரிகளை எதிர்கொள்ளும் புரட்சிகர இளைஞர் கழக வேட்பாளர்

தமிழ்நாட்டில் இருக்கிற நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே மிகப்பெரிய தொகுதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. அந்தத் தொகுதியின் மக்களைச் சந்தித்து வாக்குக்கேட்க, CPI-ML வேட்பாளர் தோழர் கு.பாரதி கட்சித் தோழர்களுடன் தினமும் நடந்தே செல்கிறார்.

இரண்டு பொதுக் கூட்டங்கள் நடந்துள்ளன. கூட்டங்களில் CPI-ML அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், இரணியப்பன், பழனிவேல் ஆகியோர் CPI-ML வேட்பாளருக்கு ஆதரவு தரக் கேட்டு உரையாற்றினர்.

அம்பத்தூர், திருபெரும்புதூர், மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபயணமாகவே வேட்பாளர் வாக்கு சேகரித்தார். இதுவரை பிரச்சார வேலைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இருவருமே கல்வி வியாபாரிகள். பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அய்முகூ அரசில் அமைச்சராக இருந்தவர்.

தொகுதியில் போட்டியிடும் ஒரே இடதுசாரிக் கட்சி CPI-ML மட்டுமே. AICCTU, CITU, AITUC தொழிற்சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் கூடிப் பேசி திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் CPI-ML வேட்பாளர் தோழர் பாரதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரச்சாரம் முடிந்து வந்தபின்னர், பிரச்சாரத்தினைக் கேட்ட பலர் வேட்பாளரைத் தொலைபேசியில் அழைத்து, தங்கள் பகுதியில் CPI-ML க்கு ஆதரவாக வேலை செய்யப்போகிறோம் என்று தெரிவிக்கிறார்கள். தொழிலாளர்கள் பலர் தோழர் பாரதிக்கு ஆதரவுதெரிவித்து அவர்களாகவே முன்வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

110 நாட்களையும் தாண்டி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றப் போராடிக் கொண்டிருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் இளம் தொழிலாளர்கள் ஒரு பக்கம் போராட்டம் என்றும் இன்னொரு பக்கம் தோழர் பாரதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது, வாக்கு சேகரிப்பது என முன்னணி பாத்திரம் வகிக்கிறார்கள். ஹூண்டாய் தொழிலாளர்கள் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுவருகின்றனர். இவர்களுடன் ஹூண்டாய் துணை நிறுவனங்களின் தொழிலாளர்களும்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் மின்சார ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். ஏப்ரல் 15 அன்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

Search