பாசிசத்தை மறைக்கும் முகமூடி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று காங்கிரசும் பிற கட்சிகளும் அச்சத்தில் இருக்கின்றன என்று பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். உண்மைதான். காங்கிரசுக்கும் பிற கட்சிகளுக்கும் மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே அச்சம் தான். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் எஞ்சியுள்ள ஜனநாயக அம்சங்களுக்கும் ஆபத்தாகிவிடும்.
பாஜகவின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல், தானாக முன்வந்து நிற்கிறது. நாட்டில் இளஞ் சிவப்பு புரட்சி நடப்பதாக பீகாரில் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். அரசியல் சாசன பிரிவு 370, பொது சிவில் சட்டம், ராமர் கோயில் எல்லாம் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நரவேட்டை நாயகனுக்கு, போலி மோதல் படுகொலை விற்பன்னருக்கு, நாய்க்குட்டி கார் விபத்தில் மாட்டிக் கொள்வதும் மாட்டிறைச்சி உண்ணப்படுவதும் பெரும்பிரச்சனையாக இருக்கிறது. மனித வதைக்கு கலங்காதவர் மாட்டு வதைக்கு மனமுடைந்து போகிறார். அவர் மனத்தை உடையச் செய்யும் வதைகளும் அவற்றைத் தடுப்பதாக அவர் பேசுவதும் நிச்சயம் நாட்டு மக்களுக்கு, இந்துவானாலும் இசுலாமியரானாலும் அச்சத்தையே தரும். அந்த அச்சத்துக்கு ஆதாரமான காரணங்கள் இருக்கின்றன. குஜராத் முதலமைச்சராக, நரேந்திர மோடி ஒரு பெண்ணை வேவு பார்க்க அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டதை அம்பலப்படுத்திய கோப்ராபோஸ்ட் இணையதளம் பாபர் மசூதி இடிப்பு பற்றி சில அதிர்ச்சி தரும் உண்மைகளை, நாடு பொதுத்தேர்தலை சந்திக்கிற நிலையில் வெளிப்படுத்தியுள்ளது.
கோப்ராபோஸ்ட் இணை ஆசிரியர் கே.அஷீஷ், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று, பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா, வினய் கத்தியார், மஹந்த் வேதாந்தி உள்ளிட்ட முக்கியமான 23 பேரை சந்தித்து, தான் ஓர் ஆய்வாளர் என்று சொல்லி நேர்காணல் செய்து, அவர்கள் சொன்னதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். கோப்ராபோஸ்ட் இணையதளத்தில் அவற்றை வெளியிட்டுள்ளார். இவர்களில் சிலர் மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய புலனாய்வு துறை குற்றம் சாட்டியுள்ளது. லிபரான் கமிசனும் இவர்களில் சிலரை குற்றவாளிகள் என்று சொல்லியுள்ளது. பாஜககாரர்கள், அது கோப்ரா போஸ்ட் அல்ல, காங்கிரஸ் போஸ்ட் என்று சொன்னதைத் தாண்டி அந்த விவரங்கள் பற்றி வேறு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மசூதி இடிப்பில் ஈடுபட்ட முக்கிய பாஜக தலைவர்களின் நேர்காணல்கள் அடிப்படையில் கோப்ராபோஸ்ட் தருகிற விவரங்கள்படி,
பாபர் மசூதி இடிப்பு, பாஜக சொல்லி வருவதுபோல், கரசேவைக்கு வந்து, அங்கு கூடியிருந்தபோது, உணர்ச்சி மேலிட்ட இளைஞர்களால் நடத்தப்பட்டது அல்ல. ஆபரேசன் ஜென்மபூமி என்ற பெயரில், சங்பரிவாரின் வெவ்வேறு அமைப்புக்கள் பல மாதங்களாக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு நடவடிக்கை.
இதற்காக பலருக்கு பயிற்சி அளிக்கப்பட் டது. கட்டிட இடிப்பு நடவடிக்கைகளில் திறன் பெற்றவர்கள், அந்த உணர்ச்சி மேலிட்ட கும்பலின் மத்தியில் இருத்தப்பட்டனர். ஒரு வேளை அவர்கள் இடிக்க முடியாமல் போனால், வெடிகுண்டு வைத்து மசூதியை தகர்க்க வெடிகுண்டுகளுடன் தயாராகவும் சிவசேனாவின் ஒரு குழு அங்கு இருந்தது.
1992 ஜ÷ன் மாதத்தில் குஜராத்தில் 38 இளைஞர்களுக்கு பஜ்ரங் தள் ஒரு மாத கால பயிற்சி அளித்துள்ளது. பயிற்சி அளித்தவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள். பிரவீண் டொகாடியாவும் அசோக் சிங்காலும் கருத்தியல் பயிற்சி அளித்திருக்கின்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு 1992 நவம்பர் வரை அந்த பயிற்சி மசூதி இடிப்புக்குத்தான் என்று தெரியாது.
அத்வானி, அசோக் சிங்கால், முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் முன் மஹந்த் வேதாந்தி, இந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு இங்கு ராமர் கோயில் கட்டுவோம் என்ற உறுதிமொழியைச் சொல்லி, கரசேவகர்கள் உறுதி மொழி ஏற்றதும் மசூதி இடிப்பு துவங்கியது.
முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மசூதியில் செங்கற்களுக்கு இடையில் பெட்ரோல் குண்டு வைத்ததை தான் பார்த்தாக ஒரு கரசேவகர் சொல்கிறார்.
தலைவலி பிடித்த இந்த மசூதியை அகற்றுங்கள் என்று கூடியிருந்த கரசேவர்கர்களிடம் உள்ளூர் நிர்வாகம் சொல்லியுள்ளது.
அத்வானி உள்ளிட்ட பாஜக உயர்மட்ட தலைவர்கள், அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோருக்கு மசூதி இடிப்பு திட்டம் முன்னரே தெரியும்.
1990ல் பாபர் மசூதிக்குச் சென்ற கரசேவகர்கள் சிலர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலே. ஏனென்றால், இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டால்தான் இயக்கம் சூடுபிடிக்கும் என்று அசோக் சிங்கால் சொன்னதை தான் கேட்டதாக சாக்ஷி மஹராஜ் சொல்லியுள்ளார். கரசேவகர்கள் கொல்லப்பட்டதற்கு வினய் கத்தியார்தான் காரணம் என்று உமா பாரதி சொல்லியுள்ளார்.
இந்த கடப்பாரை, வெடிகுண்டு கும்பல், கூட இருப்பவர்களையே கொல்லத் தயங்காத கொலைகார கும்பல், ஆட்சிக்கு வரும் என்றால், இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் சாசனப்படி ராமர் கோயில் கட்டுவதாக பாஜக தேர்தல் அறிக்கை சொல்கிறதென்றால் அச்சப்பட்டுத்தான் ஆக வேண்டும். மசூதியை மட்டும் அவர்கள் இடிக்கவில்லை. நாட்டின் மனசாட்சியை இடித்தார்கள்.
2002 குஜராத் மனிதப் படுகொலைக்கு மோடிதான் பொறுப்பு. அவர் ஆட்சியில்தான் நடத்தப்பட்டது. இசுலாமியர்கள் துண்டுதுண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவங்கள் இன்னும் நீதி கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகு 2007ல் சம்ஜ÷வாதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் அய்தராபாத் மெக்கா மசூதி மற்றும் ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புச் சம்பவம், 2008ல் மலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் என பல இந்துத்துவ பயங்கரவாத சம்பவங்கள் நடந்துவிட்டன. சம்ஜ÷ வாதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அசீமானந்த் அது பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஒப்புதலுடன்தான் அது நடந்தது என்றும், ஆனால், தாக்குதலை ஆர்எஸ்எஸ்ஸ÷டன் தொடர்புப்படுத்தக் கூடாது என்று அவர் சொன்னதாகவும் கேரவான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார். முசாபர் நகரில் இசுலாமிய வெறுப்பு நெருப்பை பற்ற வைத்து இசுலாமியர்களை கொன்று குவித்த அமித் ஷா, இசுலாமியர்களை பழிதீருங்கள் என்று வெளிப்படையாகச் சொல்லி, இப்போது அடுத்த சுற்று வன்முறைக்கு அடிபோடுகிறார். இவ்வளவு நடந்துள்ளபோது, சங் பரிவார் சக்திகள் ஆட்சிக்கு வந்தால் அச்சப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
அரசியல் சாசனத்திலேயே சொல்லப்பட்டிருக்கிற, நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றி வருகிற பசு வதைத் தடை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச வேண்டிய அவசியமே இல்லை. குஜராத்தில் நாளொன்றுக்கு 1000 ஆடு மாடுகள் வெட்டப்படுகின்றன. மாமிச உற்பத்தியில் முதல் பத்து மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. 2003 - 2004ல் பாஜக ஆட்சியில் இருந்தபோது 3.5 லட்சம் மெட்ரிக் டன் மாமிசம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், இசுலாமியர்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள், அதற்காக கால்நடைகளைக் கொல்பவர்கள், இசுலாமியர்கள் என்றால் வன்முறை என்று அடையாளப்படுத்த, ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு அரசியலை பரப்ப, ஆடு மாடுகளை போஷிக்கும் யாதவர்கள் அதிகம் இருக்கிற பீகாரில் இளஞ்சிவப்பு புரட்சி பற்றி பேசுகிறார். பாஜக பசுமைப் புரட்சிக்காக நிற்பதாகவும் காங்கிரஸ், இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு மான்யம் தந்து இளஞ்சிவப்பு புரட்சி செய்வதாகவும் விஷவிதை தூவுகிறார்.
இசுலாமியர்கள் மாமிசம் உண்பதால்தான் உடல் வலிமையுடன் இருப்பதுடன் கொடூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்று குஜராத் இந்து இளைஞர்கள் நம்புவதாக அவர்களுடன் 2007ல் உரையாடிய சிவம் விஜ் சொல்கிறார். 2010ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தபோது, வெளிநாட்டினருக்கு மாட்டுக்கறி கொடுப்பதாக புகார் செய்த மோடி, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த வெளிநாட்டினருக்கு நாங்கள் மாட்டுக்கறி தரவில்லை என பெருமை பேசிய மோடி, மரக்கறி உண்பவர்கள் மேலானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்று தலித்துகள், இசுலாமியர்கள், மாமிச உணவு முறை கொண்டவர்கள் என பெரிய சமூகப் பிரிவை அந்நியப்படுத்தி காலடியில் வைக்கப் பார்க்கும் சனாதன தர்மம் பற்றி பெருமை கொள்கிறார். (ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று சொன்னதற்கே தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை சற்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்).
அரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை எடுத்த தலித்துகள் அய்ந்து பேரை அவர்கள் இசுலாமியர்கள் என்று தவறாக கருதி, விஸ்வ இந்து பரிசத் கும்பல் ஒன்று அடித்தே கொன்றதை நாடு பார்த்தது. அந்த அய்ந்து பேரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டு காவல் நிலையத்தின் அருகிலேயே காவல்துறையினர் கண்முன்னேயே அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
குஜராத்தின் தொடர் மூன்று பதவிக்காலம் முதலமைச்சராக இருக்கிற நரேந்திர மோடி, இதற்கு முன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் வேட்பு மனுவுடன் தரப்பட்ட பிரமாண வாக்குமூலத்தில் சொல்லாத ஒரு விசயத்தை இப்போது, 2014 தேர்தல்களுக்கு வதோதரா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொல்லியுள்ளார். மணமாகாதவர் என்ற பிம்பத்துடன் இதுவரை உலாவிய மோடி இப்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனைவியின் பெயர் யசோதாபென் என்று பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியையே பார்த்துக் கொள்ளாதவர், நாட்டை எப்படி பார்த்துக் கொள்வார், இந்த ரகசியம்போல் வேறென்னென்ன ரகசியங்கள் இருக்கின்றன என்று இந்த விசயத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேவையற்ற விவாதங்கள் கட்டப்படுகின்றன.
முதலாளித்துவ குடும்ப அமைப்பில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தவில்லை என்பது ஒரு விசயம் அல்ல. எப்படியாயினும் அது அவர் தனிப்பட்ட விசயம். அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால், அவரும், அவரை முன்னிறுத்தியிருக்கிற பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸ÷ம் தனிப்பட்ட விசயங்களில் தலையிடாமை என்பதற்கு புறம்பாகவே நடந்துகொள்கிறார்கள். ஓர் ஒட்டு மொத்த சமூகத்தின் தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கை சொல்கிறது. மோடிக்கு ஒரு நியாயம், ஒட்டு மொத்த இசுலாமிய சமூகத்துக்கும் வேறொரு நியாயம் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
பொது சிவில் சட்டம் என்ற முழக்கமே பெண்ணுரிமையை பாதுகாக்க என்று பாஜக சொல்கிறது. பொது சிவில் சட்டத்தின் பின் பாஜகவுக்கு இருக்கிற நோக்கம் ஊரறிந்தது. அது சிறுபான்மை இசுலாமியர்கள் மீது பெரும் பான்மை இந்துத்துவ நடைமுறைகளை, பழக்க வழக்கங்களைத் திணிப்பது. பெண்ணுரிமையை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெண்களை வேவு பார்த்து பாதுகாப்பார். அவருடைய வலது, இடது கைகளான அமித் ஷா போலி மோதல் படுகொலை செய்து பாதுகாப்பார். சங்பரிவாரின் பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று மிரட்டி பாதுகாக்கும். அசாராம் போன்றவர்கள் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து பெண்களை பாதுகாப்பார்கள். குஜராத் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி இந்து இளம்பெண்கள் ‘உயிருள்ள வெடிகுண்டுகள்’ என்பதால், அவர்களை இசுலாமிய ஆண்கள் மயக்கி அழைத்துச் சென்று விடாமல் இலவச சேவை செய்து பாதுகாப்பார். அவரைப் பொறுத்தவரை ஓர் இளம்பெண்ணை பாதுகாப்பது, 100 பசுக்களை பாதுகாப்பதற்கு சமம். வேறு விதமாகச் சொல்வதென்றால் பெண்கள் வெறும் மாடுகள். அதுவும் சாதுவான பசுக்கள். பெண்களை யாரும் ‘பாதுகாக்க’ வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்க போராட்டங்கள் நடக்கும் சூழலில், இப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய வரலாறு கொண்ட பாஜக, பொது சிவில் சட்டம் கொண்டு வந்து சமூகத்தை கூறு போடுவேன் என்று சொன்னால் மக்கள் அச்சப்படத்தான் வேண்டும்.
இந்த மொத்த நிகழ்ச்சிநிரலில் போலி மோதல் படுகொலைகள் எல்லாம் உடன்விளை சேதங்கள்.
ஆர்எஸ்எஸ்ஸ÷க்கும் அதன் மதவெறி பிடித்த அமைப்புக்களுக்கும் தெரிந்ததெல்லாம், கடப்பாரை, வெடிகுண்டு, தீ வைத்து எரிப்பு, அடிதடி போன்றவைதான். இவைதான் சங்பரிவார் பற்றி வரலாற்றில் பதிவாகியுள்ளன. எங்காவது மக்கள் மகிழ்ச்சியுறும்படி, நலம் பெறும்படி இந்த மதவெறி பாசிச கும்பல் ஏதாவது செய்ததாக நாடு கேட்டறியவில்லை.
பீகாரில் அரசியல் உரிமைகளை அறுதியிட்ட தலித் மக்களை கொன்றுகுவித்த ரன்வீர் சேனாவின் தலைவர் தான் ஆர்எஸ்எஸ்காரர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார். ஓவியர் எம்.எஃப்.ஹ÷சேன் சொந்த நாட்டில் இருக்க முடியவில்லை. நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். ஒடிஷாவில் பாதிரியார் ஸ்டெயின் உயிருடன் எரிக்கப்பட்டார். நாட்டில் ஒரு புத்தகம் விற்க முடியவில்லை. மனதுக்குப் பிடித்த ஆணையோ, பெண்ணையோ, சுதந்திரமாக காதலிக்க முடியவில்லை. அரசுக்கு அடுத்ததாக, இந்துத்துவ அமைப்புகள் வெளிப்பாட்டு உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று 2014 ஏப்ரலில் ஆய்வுகள் சொல்கின்றன.
பாஜக, ஆட்சியில் இல்லாதபோதே, சங் பரிவார் அமைப்புக்கள் நாட்டின் ஓர்மையைக் குலைக்க தொடர்ந்து சதி நடவடிக்கைகளில் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றால், பாஜக ஆட்சிக்கும் வந்துவிட்டால்.... அஞ்சுவது அஞ்சாமை பேதமை.