16ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவுகள் தொடங்கி விட்டன. பிரச்சாரங்களும் பிரச்சனைகளும் விந்தைமுரணான அறிக்கைகளும் பேச்சுக்களும் சூடுகிளப்பிக் கொண்டிருக்கின்றன. எதையாவது சொல்லி எப்படியாவது வாக்குகளை வாங்கி விட வேண்டும் என்பதில் போட்டிகள் நடக்கின்றன. ‘பாரத’ தேசத்தை ஆளத் துடிக்கும் பாஜக ஒரு வழியாக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. ஏன் இவ்வளவு காலம் என்றால், தேர்தல் அறிக்கையா முக்கியம், நாட்டின் வளர்ச்சியல்லவா முக்கியம், அது பற்றி மோடி ஏற்கனவே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாரே அதைவிட என்ன வேண்டும் என்று சனாதனக் கட்சிக்கு ஜால்ரா போடுவது, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ராம் விலாஸ் பஸ்வான். 60 வருடங்கள் காங்கிரஸிடம் நாட்டை ஆளக் கொடுத்தீர்கள், 60 மாதங்கள் என்னிடம் கொடுங்கள் என்கிறார் நரவேட்டை நரேந்திர மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கை தன் சங் பரிவார் விஷத்தை கக்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இளவரசர் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், இனி நாங்கள் நிச்சயமாக ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் என்கிறார். அய்முகூ ஆட்சி ஊழல் ஆட்சி என்பதை ஒப்புக்கொள்கிறார். 10 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லும் இந்த காங்கிரஸ் கடந்த பத்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்து?
முலாயம் சிங், பாலியல் பலாத்காரத்திற்கெல்லாம் தூக்குத் தண்டனையா, இளைஞர்கள் இயல்பாகச் செய்வதுதானே என்கிறார். இளைஞர்கள் ஓட்டை இப்படிக் கவருகிறார்.
கட்சி ஆரம்பித்து ஆறு மாதத்தில் ஆட்சியையும் அமைத்து அதிகம் தாக்குதலுக்குள்ளான தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலாகத்தான் இருக்க முடியும். தட்டிக் கேட்கப்பட வேண்டிய பலர் இஷ்டம்போல் உலாவிக் கொண்டிருக்க, இவருக்கு மட்டும் ஏனோ இப்படி நடக்கிறது. பாஜக இதை நாடகம் என்கிறது. உண்மையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்கு ஊழல் எதிர்ப்பு மட்டுமா காரணம்? ஆட்டோ ஓட்டுநர்கள், அரசாங்கம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் தங்கள் பணி முறைப்படுத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்புதான் காரணம். தற்போது, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கக்கூடாது என்று சொல்லும் அரவிந்த் கேஜ்ரிவால், முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர்களின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று சொல்லத் தயாரில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, கொல்லப்படுவது “தப்பான அடையாளத்தால்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆங்கிலப் பிரதியில் இருந்த இந்த சொற்றொடர் தமிழ் பிரதியில் நீக்கப்பட்டு விட்டது என்று பத்திரிகைகளில் வந்துள்ளது. அணுமின் திட்டங்களே வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கையில் இல்லை. தமிழக மீனவர் பிரச்சினை பற்றி, எழுவர் விடுதலை பற்றி, கூடங்குளம் அணுஉலை பற்றி ஆம் ஆத்மியின் அரைகுறை நிலைப்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க, நானே பிரதமர் என்று சொல்லி வந்த ஜெயலலிதாவுக்கு, “அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி வந்தால்” என்று சுருதி குறைய ஆரம்பித்துள்ளது. சொத்துக் கணக்கு அவரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்வெட்டு மிரள வைத்துள்ளது. “தமிழகத்தில் மின் பற்றாக்குறை திட்டமிட்ட சதி. செயற்கையாக மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி எனது அரசிற்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கும் சதிகாரர்களின் வேலை இது” என்று மின் வெட்டுப் பிரச்சனைக்கு மற்றவர் மேல் பழிபோடுகிறார்.
தன் கூட்டத்திற்கு விமானத்தில் வருவது, ஹெலிகாப்டரில் பறப்பது, கட்அவுட்கள், கரகாட்டம், கும்பாட்டம், குத்தாட்டம் என கோடிக் கணக்கில் செலவு செய்வது மட்டுமின்றி, பஸ்களை அமர்த்தி, ஆளுக்கு ரூ.200, 300 பிரியாணி பொட்டலம், குவாட்டர் கொடுத்து ஆட்கள் திரட்டி கூட்டம் சேர்க்கத் தண்ணியாகச் செலவு செய்கிறார். இச்செலவுகளைத் தேர்தல் கமிஷன் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று சொன்னவுடன், தேர்தல் கமிஷன் மீது பாய்கிறார். “வாக்காளப் பெருமக்களே நீங்களாகவே வண்டி ஏற்பாடு செய்து இந்த வேகாத வெயிலில் வருகிறீர்கள் அந்தச் செலவையும் என் கட்சி வேட்பாளர் கணக்கில் சேர்த்துவிடுவோம் என்று சொல்லி என் கட்சி வேட்பாளர் பெயரைக்கூடச் சொல்ல விடாமல் செய்துவிட்டது இந்தத் தேர்தல் கமிஷன். இது நியாயமா” என்று ஓங்கி ஓங்கி கேள்வி கேட்கும் ஜெயலலிதா, தான் வரும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக, பல ஆயிரம் மடங்கு மின்சாரத்தை விழுங்கும் ஒளி, ஒலி மேடை அமைப்புகளை, தோரணங்களை மட்டும் தவிர்க்கத் தயாரில்லை.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, அணுஉலைப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கக் கூடாது என்பதற்காக மின் வெட்டு செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் அத்தனைபேரும் கூறியபோது, அதை ஏற்க மறுத்து போராட்டத்தை ஒடுக்கி கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கச் செய்துவிட்டேன் என்று நூறாண்டு பேசும் சாதனையில் பெருமை பேசிய ஜெயலலிதா, தற்போது தனது நாற்பதுக்கு நாற்பது கனவில் மண் விழப் போகிறது என்றவுடன் மாற்றிப் பேசுகிறார். இது நாள் வரை முந்தைய ஆட்சியின் அவலம் என்று சொல்லி வந்தவர் இப்போது, தான் ஆட்சியில் இருக்கும்போதே சதி நடக்கிறது என்று அபாயக் குரல் எழுப்புகிறார். ஆளும் கட்சி தன்னுடைய கையாலாகாத்தனத்திற்கு மற்றவர்கள் மீது பழி போடுவதையும், ஆட்சியில் இருந்து கொண்டே எதிர்க்கட்சியைக் கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் அவலங்களையும் திராவிடக் கட்சிகள் ஆட்சியில்தான் பார்க்க முடியும்.
நரேந்திர மோடி எனக்கு நல்ல நண்பர் என்று நாற்பது நாட்களுக்கு முன்பு பேசிய கருணாநிதி இப்போது, சிறுபான்மையோர் ஓட்டைக் கைப்பற்ற, மோடி கல்யாணம் ஆனதையே மறைத்து விட்டார், இன்னும் என்ன மறைத்திருக்கிறாரோ என்று பாஜகவுக்கு எதிராக திருவாய் மலர்ந்துள்ளார். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதுபோல் 2ஜி அலைக்கற்றை ஊழல் புகழ் திமுக (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி) அம்மாவின் அய்யாயிரம் கோடி சொத்துக்களைப் பட்டியலிடுகிறார்.
தான் கேட்ட சீட்டுகள் கிடைக்காததால் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியும் முன்பே எல்லாரையும் தூக்கி எறிந்துவிட்டு இஷ்டத்திற்குப் பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜயகாந்த், தற்போது மோடி பிரதமரானால்தான் தமிழகம் வாழ்வு பெறும் இந்தியா வல்லரசாகும் என்று மோடிப் புராணம் பாடி வேடிக்கை காண்பிக்கிறார். பெரியார் பக்தனும் பெரியாரைச் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பிள்ளையார் பக்தனும் ஒரே மேடையில். சாதி ஆதிக்க வெறியர்களும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒளி விளக்கு என்று சொல்லிக் கொண்டவர்களும் ஓரே மேடையில். அதிமுக வெளியேற்றி விட்ட பின்பும் தோழர் தா.பாவிற்கு அம்மா பாசம் போகவில்லை போலும். தமிழக மீனவர் தாக்கப்படுவதைத் தடுக்கவும், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று கவுந்தம்பாடியில் பேசுகிறார். கருணாநிதியைப் போல், நாளைக்கு எந்த பஸ் வந்தாலும் ஏறிக் கொள்ள வசதியாக இன்றைக்கு துண்டு போட்டு வைக்கிறாரோ? இப்படி எண்ணற்ற விந்தை முரண்களோடு நகர்ந்து கொண்டிருக்கிறது 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல்.
தேர்தல் ஆதாயத்திற்கு அல்லாமல் மக்களின் உண்மையான நலன்களுக்காக, முதலாளித்துவக் கட்சிகளுக்கு வால் பிடிக்கும் அரசியலைப் புறந்தள்ளி களத்தில் நிற்கும் மாலெ கட்சியின் தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இருப்பினும் மக்கள் மாற்றுக்காக மக்களின் பேராதரவில் மூன்று நட்சத்திரச் சின்னத்தில் வாக்கு கேட்டு இந்திய வானில் உண்மையான சிவப்பு நட்சத்திரமாம் இகக (மாலெ) விடுதலை பீடுநடை போடுகிறது.