தொழிலாளர்களுக்காக தொழிலாளர்கள் நடத்தும் தொழிலாளர் பிரச்சாரம்
பொதுமக்கள் செல்போன் சார்ஜ் பண்ண பவர் இல்ல. ஆனால் செல்போன் கம்பெனி நோக்கியாவிற்கும் ஃபாக்ஸ்கானுக்கும் நோ பவர் கட். ஆஸ்பத்திரிகளுக்கு நர்ஸ்கள் பற்றாக்குறை, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை. அரசாங்கம் என்னடான்னா டாஸ்மாக் எண்ணிக்கையைத்தான் கூட்டிக்கிட்டே போகுது. 21000 கோடி ரூபாயை 11 சாராயக் கம்பெனிகளுக்கு தமிழக அரசு சம்பாதித்துக் கொடுக்கிறது. இப்படி இகக(மாலெ)யின் கோவை வேட்பாளர் தோழர் சந்திரன் பேசுவதை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் பிரச்சாரத்தை நின்று கேட்கிறார்கள்.
கோவையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள். மக்களுக்குத் தெரியாதவர்கள். சிபிஅய், சிபிஅய்எம் கட்சிகள் மீது அவர்களின் வால் பிடிக்கும் அரசியல் மீது கோவை மக்களுக்கு கோபம் உள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அதனாலேயே, முதலில் மாலெ கட்சியின் பிரச்சாரத்தைக் கேட்க மறுப்பவர்கள் இது வால்பிடிக்கும் கட்சி அல்ல. மக்கள் வாழ்க்கைக்காகப் போராடும் கட்சி என்பதைப் புரிந்தவுடன் பிரச்சாரத்தை அக்கறையுடன் கேட்கிறார்கள் என்கிறார் வேட்பாளர் தோழர் சந்திரன். பல பகுதிகளில் பிரச்சாரத்திற்குப் பின் வேட்பாளருக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இளைஞர்கள், தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் நாங்கள் இகக(மாலெ)யை ஆதரித்து வேலை செய்கிறோம் என்று அவர்களாகவே முன்வருகிறார்கள்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் உட்பட 3 பொதுக்கூட்டங்கள் இகக(மாலெ) வேட்பாளருக்கு வாக்கு கேட்டு நடத்தப்பட்டுள்ளன. 100க்கும் மேலான வாகனப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 சட்ட மன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் இதுவரை நடைபெற்றுள்ளது. குறிப்பாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் 90% பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது. ஒரு பைக்கிற்கு 2 பேர் என 25 பைக்குகளில் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 முதல் பைக்கில் இருவர் என 100 பைக்குகளில் வீதிவீதியாகச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்தியக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு இகக(மாலெ) வேட்பாளர் சந்திரனுக்கு வாக்குக் கேட்டு உரையாற்றினார்கள்.
பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் முன்னணியில் நின்று வழிநடத்த கட்டமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க ஒழுங்குடன் பிரச்சார வேலைகள் முன்செல்கின்றன. இதுவரை பிரச்சார வேலைகளில் 1000 பேர் வரை பங்கேற்றுள்ளனர்.