கிராமப்புற வறியவர் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் இகக மாலெ வேட்பாளர்
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இகக(மாலெ)வின் தேர்தல் பிரச்சாரம் நாள்தோறும் மக்கள் நேரடி சந்திப்பு என்பதாக நடக்கிறது. விழுப்புரத்தில் அதிமுக, திமுக, தேமுதிக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் எவரும் மருந்துக்குக்கூட மக்கள் இயங்கங்கள் எதிலும் தலை காட்டாதவர்கள்.
அதிமுக வேட்பாளர் அந்தக் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர். அவர் வசிப்பது சென்னை. அவருக்கும் விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறார்கள் மக்கள். திமுக வேட்பாளர் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது தவிர அவருக்கும் பகுதி மக்களுக்கும் இடையே வேறு எந்நத் தொடர்பும் கிடையாது என்கிறார்கள். இந்த நிலையில் கடைசி வரைக்கும் அம்மா திமுக கூட்டணிக்காகக் காத்திருந்து விட்டு இப்போது தனியாகக் களம் கண்டிருக்கும் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் பற்றி மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதைக் காண முடிகிறது.
இரண்டு பொதுக்கூட்டங்கள் இகக(மாலெ) வேட்பாளர் தோழர் வெங்கடேசனை ஆதரித்து நடந்துள்ளன. இந்தக் கூட்டங்களில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தம், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.கே.எஸ்.ஜனார்த்தனன், இளங்கோவன் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி கலந்து கொண்டனர். வேட்பாளர் நடைபயணமாக சென்று வாக்காளர்களைச் சந்திக்கிறார். இதுவரை 10 பஞ்சாயத்துக்களில், 200 பேர்கள் கலந்து கொள்ள, வேட்பாளர், வாக்காளர்களைச் சந்தித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டைச் சட்டமன்றத் தொகுதி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிகளில் வேன் பிரச்சாரம் நடந்தது. 20 கிராமங்களுக்கு 10 பேர் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று மக்களைச் சந்தித்து தோழர் வெங்கடேசனுக்காக வாக்கு சேகரித்தார்கள். விக்கிரவாண்டியில் 5 பஞ்சாயத்துக்கள் 3 நகராட்சி வார்டுகளில் வீடு வீடாகச் சென்று வேட்பாளர் மக்களைச் சந்தித்தார். அதேபோல திண்டிவனத்தில் தினசரி வாக்கு சேகரிப்பு ஒரு வாரத்திற்கு நடைபெற்றது. பாப்பாக்குறிச்சி நகரத்திலும் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கப்பட்டது.
ஏப்ரல் 11 அன்று 10 மய்யங்களிலும் 12 அன்று 5 மய்யங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் தோழர் வெங்கடேசனுக்கு ஆதரவு தரக் கோரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசினார். ஏப்ரல் 14 அன்று உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கோட்டைக்குப்பம் பகுதிகளில் வீதி வாக்குச் சேகரிப்பு நடைபெறுகிறது. இரவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டு தோழர் வெங்கடேசனை ஆதரித்துப் பேசினர்.