தமிழ்நாட்டில் இகக, இகக(மா) வேட்பாளர்கள், மத்தியில் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஆட்சி அமைய தமக்கு வாக்களிக்கக் கோருகிறார்கள். அந்த வரையறைப்படி தமிழ்நாட்டில் தற்போது அண்ணா திமுக மற்றும் திமுக மட்டுமே மிஞ்சுவார்கள் என்பது தோழர்களுக்கு தெரியாததா? யாரெல்லாம் சேர்ந்து அந்த மாற்று ஆட்சியை அமைப்பார்கள்? இடது முன்னணி 2009ல் 24 இடங்களில் மட்டுமே வென்றது. அவர்களில் மிகவும் நம்பிக்கை நிறைந்த தோழர்கள் கூட, இந்த முறை, கேரளாவில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், திரிபுராவில் இரண்டு இடங்கள் கிடைக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் திரிணாமுலும் காங்கிரசும் தனித்தனியாய் நிற்பதால் தங்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் என்றும் சொல்லும்போதே, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறு எங்கும் ஓரிடம் கூட வெற்றி பெற தங்களுக்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களது அதிகபட்சக் கணக்கே நாற்பது தாண்டாது. எண் ஒன்று என்பது காங்கிரஸ் என்றால் எண் இரண்டு என்பது பாஜக என்றால், இவை தவிர்த்த, 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் மற்ற அனைவரும் மூன்றாவது மாற்றில் அதாவது காங்கிரஸ்/பாஜக அல்லாத மாற்றில் இடம் பெறுவார்களா?
பெரும்பாலான ‘இடதுசாரி’ அணிகளுக்கு இகக(மா) தலைமையின் நிலைப்பாடு பற்றி தெரியாது. தமிழ்நாட்டில், ஏப்ரல் 2014 சிஅய்டியு செய்தி, தமது கட்சி நிலைப்பாட்டிற்கு மாற்றான செய்திகளை வெளியிட்டுள்ளது. அது பற்றிப் பிறகு பார்ப்போம். முதலில், ஹார்ட் நியூஸ் மீடியாவிற்கு தோழர் பிரகாஷ் காரத் அளித்த நேர்காணலில் சில பகுதிகளைக் காண்போம். நேர்காணல் நாள் 06.03.2014. அவர் தேர்தலுக்கு முன்பே 11 கட்சிகள் காங்கிரஸ் பாஜகவிற்கு எதிராகப் போட்டியிடும் என்றார். அவை ஒரு மாற்றை முன்வைக்கும் என்றார். அந்த மாற்று, 1. ஜனநாயகத்தைப் பலப்படுத்துவது, 2. மதவாதத்தை எதிர்ப்பது, 3. மதச் சார்பின்மையைக் காப்பது, 4. மக்கள்சார்பு வளர்ச்சிப் பாதை ஒன்றை முன்வைப்பது என்ற அடிப்படையில் இருக்கும் என்றார். அந்த மாற்று, மாநிலங்கள் நலன் காக்கும் வகையில், மத்திய மாநில அரசு துறைகளை மறுகட்டமைப்பு செய்யும் என்றார்.
தேர்தலுக்கு முந்தைய மாற்று குறித்து தோழர் காரத் கட்டிய மணல்வீடு பற்றி அவர் பெருமிதமாகச் சொன்ன விஷயங்களைப் பார்ப்போம்! ‘ஆம், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், நாங்கள் ஒரே நேரம் காங்கிரசையும் பாஜகவையும் எதிர்ப்போம், ஒரே மாற்று மேடையை முன்வைப்போம்’ என தேசிய அளவில் வேறு வேறு கட்சிகள் சொல்கிறார்கள். இந்தக் கட்சிகளை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை பாஜகவை விட்டு விலகி நிற்கும் என நம்பலாம் என்கிறார். இந்த அளவுகோல் ஜெயலலிதாவிற்கும் பொருந்தும் எனவும், அவர் தேசிய ஜனநாயக முன்னணியை விட்டு விலகிவிட்டதாகவும் அவர் பாஜகவோடு உடன்பாடு காணும் எந்த தோற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை எனவும், அவரை நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் எனக் காணமுடியாது எனவும் சொல்கிறார். ஆனால் தேர்தலுக்கு முன், ‘ஆம் நாங்கள் இகக, இகக(மா), பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியுடன் அகில இந்திய அளவில் சேர்ந்து நிற்கிறோம்’ என்று சொல்ல வேறு எந்த கூட்டாளியும் வரவில்லை. தேர்தலுக்கு முன் காங்கிரஸ்/பாஜக அல்லாத மாற்றணி எதுவும் வரவில்லை. அப்படி இருக்க தோழர் காரத் சொன்ன 4 கோட்பாடுகளை யார் ஏற்றுக் கொண்டார்கள் என்று பார்க்கும் கேள்வியே எழவில்லை.
மணல்வீடு கட்டி, அது சரிந்தது பற்றி ஏதாவது சுய விமர்சனம் இருக்கிறதா?
ஜூனியர் விகடனுக்கு தோழர் காரத் அளித்த பேட் டியை தீக்கதிர் 08.04.2014 அன்று மறுபிரசுரம் செய்துள்ளது. கேள்வி: ஜெயலலிதாவைச் சந்தித்து கூட்டணி உறுதி செய்தீர்கள். ஆனால், அதிமுக உங்களை இறக்கிவிட்டுவிட்டு பயணத்தை தொடங்கி விட்டது. என்ன காரணம்?
பதில்: ‘எங்களது சிபிஎம் கட்சி, வருகிற மக்களவை தேர்தலுக்கு, காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கு மாற்றாக ஓர் அணி ஏற்படுத்தி மக்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பியது. இந்த முறையில் அதிமுகவை நாங்கள் தொடர்பு கொண்டோம். இதன்படி தில்லியில் நடத்திய கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பின்னர் அதிமுக எங்களோடு பேச்சுவார்த்தையைத் தொடரவில்லை. இதற்கான எந்தக் காரணத்தையும் எங்களுக்குச் சொல்லவில்லை. இடதுசாரிக் கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஅய் கட்சிகளுக்கு தலா ஒரு இடத்திற்கு மேல் தர முடியாது என்கிற முடிவின்படி எங்களுடனான கூட்டணியை அதிமுக நிராகரித்திருக்கும் என நினைக்கிறேன்! மற்றபடி அரசியல் ரீதியாக எந்தத் தகவலும் இல்லை’.
கேள்வி: இந்திய அளவில் ஒரே எண்ணங்கள் கொண்ட சில மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டினீர்கள். ஆனால் இந்தக் கட்சிகள் சில ஒரு சீட் கூட தர மறுத்து இந்தத் தேர்தலில் சிபிஎம்மை ஒதுக்கி விட்டார்களே?
பதில்: ‘எங்களுடைய செல்வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதுதான் காரணம். எங்களுடைய பலம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் உள்ளது. அய்க்கிய ஜனதா தளமோ, சமாஜ்வாதி கட்சியோ, அதிமுகவோ கேரளாவுக்கு வந்து போட்டியிட முடியாது. பீகாரில் அய்க்கிய ஜனதாதளம் சிபிஎம்மிற்கு இடம் தரவில்லை. ஒடிஷாவிலும் பிஜ÷ ஜனதா தளம் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என நம்புகின்றனர். எங்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. காங்கிரஸ் பிஜேபி அல்லாத இந்தக் கூட்டு முயற்சி என்பது தேர்தல் போட்டிக்கான உடன்பாடோ தொகுதிப் பங்கீடு செய்யவோ அல்ல!’
மோடி வெற்றி பற்றிக் கேட்டபோது, காரத் சொல்கிறார்: ‘........ மதச்சார்பற்ற, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் மோடியையும் பிஜேபியையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும். நீங்கள் அதனைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.’
தீக்கதிர் மறு பிரசுரம் செய்யும்போது, எந்த விமர்சனக் குறிப்பும் இல்லாமல் ஜூனியர் விகடன் தந்த முன்னுரையைப் போட்டுள்ளது.
வாசகர் கவனத்திற்காக அதை அப்படியே தருகிறோம்:
‘காங்கிரஸ் ஒரு பக்கம் கனல் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பிஜேபி இன்னொரு பக்கம் பின்னிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டும் வேண்டாம் என்று சொல்லி மாற்று அணியை அமைத்திருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். அதற்கு இந்தியா முழுவதும் 11 கட்சிகள் ஆதரவும் இருக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கம்யூனிஸ்ட்கள் கையில்தான் சக்கரம் சுழலும் என்று சொல்லப்படும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தை தில்லியில் சந்தித்தோம்!’
பேட்டியும், முன்னுரையும், நாட்டு நடப்புகளும் சொல்வது என்ன?
தேர்தலுக்கு முன், காங்கிரஸ் பாஜக அல்லாத எந்த மாற்றும் வரவில்லை.
‘மதச் சார்பற்ற’ கடவுள்களான நிதிஷ், முலாயம், நவீன், ஜெயலலிதா ஆகியோரின் பக்தர்களான இடது முன்னணியை, தேர்தலுக்கு முன் கடவுள்கள் கைவிட்டுவிட்டபோதும், இடது முன்னணி பக்தர்கள், கடவுளின் முடிவில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற கடவுள்கள் நாட்டைக் காப்பாற்றுவார்கள் என நம்புகிறார்கள்,
சில நேரங்களில் சாதாரண பக்தர்கள் முரட்டு பக்தர்கள் கூட கடவுளை நன்றாகத் திட்டுகிறார்கள். ஆனால், தோழர் காரத் வருங்கால நலன் கருதியபடி, ஜெயலலிதா, முலாயம், நவீன், நிதிஷ், பற்றி எதிர்மறையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தோழர் காரத், 1. ஜனநாயகத்தைப் பலப்படுத்துவது, 2. மதவெறியை எதிர்ப்பது, 3. மதச் சார்பின்மையை காப்பது, 4. மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையை முன்வைப்பது என்பதற்கும், நவீன், நிதிஷ், முலாயம், ஜெயலலிதா வகையறாக்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை, இப்போதும் சொல்ல மறுக்கிறார்.
விவாதம் இத்துடன் முடிந்து விடவில்லை. காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஓர் அரசாங்கத்தில் சிபிஎம் இணையுமா என்ற கேள்விக்கான தோழர் காரத்தின் பதில் மார்ச் 30 இந்துவில் பிரசுரமாகி உள்ளது.
‘அது வேறு வேறு விஷயங்கள் சார்ந்தது. அப்படி நடந்தால் என்ன அடிப்படையில் நடக்கும் என்று இப்போது பேச முடியாது. அது காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகள் எவ்வளவு இடம் பெறுகிறார்கள் என்பது தொடர்பானது. நாங்கள் என்ன மாற்று முன்வைக்கிறோம், அது எவ்வளவு தெளிவாக இருக்கும், ஒரு பொதுத் திட்டம் தொடர்பாக பொது உடன்பாடு காண முடியுமா என்பவற்றோடு தொடர்புடையது.’
‘இவை எல்லாவற்றையும் வைத்து கட்சி முடிவு செய்யும். இதில் இப்படித்தான் அப்படித் தான் என்ற எந்த இறுக்கமான விதியும் கிடையாது. விவகாரம், தேவை மற்றும் குறிப்பான சூழல் தொடர்பானது.’
இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான இடங்களே பெற வாய்ப்புள்ளபோது, நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் நுழைய எந்த வாய்ப்பும் இல்லாதபோது, மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசில் பங்கேற்பு பற்றி சிபிஎம் பேச வேண்டிய அவசர அவசியம் என்ன? தோழர் காரத் சொல்லும் விஷயங்கள், இடது திசைப் பயணத்தை உறுதி செய்யுமா அல்லது சந்தர்ப்பவாத புதைக்குழியில் மேலும் ஆழத் தள்ளுமா என நாடெங்கும் உள்ள இடதுசாரி அணிகள் யோசிக்க வேண்டும்.

சாதாரணமான நிலைமைகளில் இந்திய ஆட்சி அமைப்புமுறை கம்யூனிஸ்ட்டுகளை வெளிப்படையான, சட்டபூர்வமான நாடாளுமன்ற வழிமுறைகளில் செயல்பட அனுமதிக்கிறது. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான அய்க்கிய முன்னணி வழிக்கு பொருத்தமான, உரிய தேர்தல் செயல் தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்ட காலத்துக்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரமாற்ற கட்சி தயாராக இருக்க வேண்டும். தேர்தல் போராட்டத்தின் போக்கில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளாட்சி அமைப்புகளில் மாநில சட்டமன்றங்களில் கூட பெரும்பான்மை பெற சாத்தியம் உண்டு. நீண்டகால மற்றும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் மூலமாக, வர்க்க சக்திகளின் சமநிலையில் ஒரு சாய்வு ஏற்படுத்தும் அதேநேரம், வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிபடுத்தும் அளவுக்கு கட்சி, வலிமையானதாக இருக்கும் பட்சம், இது போன்ற சந்தர்ப்பங்களை சுதந்திரமாகவோ அல்லது ஒத்த கருத்து கொண்ட சக்திகளுடன் கூட்டு சேர்ந்தோ, பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறது.
எப்படியிருப்பினும், அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்களோடும்/ அரசாங்கங்களோடும், கட்சி கொண்டிருக்கும் உறவும் பாத்திரமும் பின்வரும் அடிப்படை கோட்பாடுகளால் வழிநடத்தப்படும்.
அ. கட்சி எப்போதும் என்ன நேரும்போதும், சுதந்திரமான அமைப்பு செயல்பாட்டையும் அரசியல் முன்முயற்சியையும் தக்கவைத்துக் கொண்டே ஆக வேண்டும்.
ஆ. உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள் கொண்டுள்ள அதிகாரம், தீவிரமான ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், மக்கள் உணர்வை, ஒரு புதிய ஜனநாயக மாற்றை உருவாக்குவதை நோக்கி, திசைவழிப்படுத்துவதற்கும், முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
இ. மய்ய அதிகாரம் வரையிலான அடுத்தடுத்த உயர்நிலை கட்ட அதிகாரங்கள் பொறுத்தவரை, அது போன்ற உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள், பரந்ததொரு புரட்சிகர எதிரணியில், பிரிக்க முடியாத அங்கமாக செயல்பட வேண்டும்.
ஈ. கட்சியும் அதனால் தலைமை தாங்கப்படும் உள்ளாட்சி அமைப்புக்களும் அரசாங்கங்களும் ஜனநாயக சக்திகளின், ஜனநாயக உணர்வின், ஜனநாயக இயக்கங்களின் சுதந்திரமான வளர்ச்சி, எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். (இகக மாலெ கட்சித் திட்டத்தில் இருந்து)
ஏப்ரல் சிஅய்டியு செய்தி
‘அதிமுக தொழிலாளர் பிரச்சனையில் தொடர்ந்து வஞ்சனை செய்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தை முடக்கம். தொழிற்சங்க உரிமை மறுப்பு, சங்கம் சேர்ந்தால் நடவடிக்கை, பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நிலை, நலவாரிய செயல்பாடுகளில் குளறுபடி, நலவாரியங்கள் முறையாக அமைக்காமை, அங்கன்வாடி ஊழியர்கள், பிரச்சனை கேட்பாரற்று கிடக்கும் நிலை, அங்கன்வாடி அமைப்பையே தனியார்மயமாக்க உத்தேசம், போன்றவைகளோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. எங்கேயும் எப்போதும் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, மொத்தத்தில் டாஸ்மாக் வியாபாரத்தைத் தவிர வேறு எதையும் கவனிக்காத மாநில அரசு டாஸ்மாக்கில் வரும் ரூ.20,000 கோடி வருமானத்தை வைத்து ஒரு சில சலுகைகளை அறிவித்து மக்களை மயக்க முயற்சிக்கும் அதிமுக அரசு, இருந்தும் அதிமுக இடதுசாரிகளுடன் கூட்டு எனக் கேட்டபோது மோடியின் வலையில் சிச்கிவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அதிமுகவுடன் கூட்டை இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டது. பின் மோடியுடன் சேர்ந்தே தீரவேண்டும் என அதிமுக முடிவு செய்ததன் அடிப்படையில் இடதுசாரிகள் கூட்டை முறித்துக் கொண்டது. அதிமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் மோடிக்கு அளிப்பதற்கு சமமானது. எனவே அதிமுகவை தோற்கடிப்பது என்பது, பிஜேபியை தோற்கடிப்பதாகும். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’. (ஏப்ரல் 2014 சிஅய்டியு செய்தி. பக்கம் 5)
சிஅய்டியு செய்தி சொல்வதற்கும் தோழர் காரத் சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும்.