COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


பிரிக்கால் தொழிலாளர்கள் குடும்பத்துடன்
பட்டினிப் போராட்டம், ஆகஸ்ட் 14, கோவை

கோவை பிரிக்கால் நிறுவனம் 01.07.2018 முதல் ஒப்பந்தம் போடாமல் இழுத்தடிப்பதற்கு எதிராகவும், தங்களுக்கு நிர்வாகம் இழைத்துள்ள அநீதிகளுக்கு எதிராகவும், பிரிக்கால் தொழிலாளர்கள் 14.08.2018 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்
. அன்றே பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் குடும்பத்தினருடன் பட்டினி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு அனுமதி வழங்கித் தந்த கடிதத்தில் காவல்துறை, அநியாயமான ஜனநாயக விரோதமான, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான பிரச்சனையில் முதலாளிக்கு ஆதரவாக, இரண்டு நிபந்தனைகளை விதித்தது. 1. சங்கம் பிரிக்கால் வாயிலுக்கு சென்று, எந்த தொழிலாளியையும் தடுத்து நிறுத்தி அழைத்துவர கூடாது. 2. தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களை மூளை சலவை செய்து அழைத்து வரக்கூடாது.
காவல்துறை, பிரிக்கால் முதலாளியின் தனியார் பாதுகாப்பு படையினர் போல் நடந்து கொண்டது, கண்டனத்துக்குரியது.
ஆகஸ்ட் 14, பட்டினிப் போராட்டத்திலும் வேலை நிறுத்தப் போராட்டத்திலும், நிர்வாகம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பிரிக்கால் நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழிலாளர்கள் முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திய சென்னை முற்றுகைப் போராட்டத்திலும் பிரிக்கால் தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் கலந்துகொண்டனர்.

Search