ஏழைத்தாயின்
மகனின்
ஆட்சியில்
ஏழைகள்
பட்டினியில்
சாக சாக
அம்பானிகள்
செல்வம்
குவிக்கிறார்கள்
மோடி இன்னும் ஒரு சுதந்திர தின உரை ஆற்றப் போகிறார். மீண்டும் கவர்ச்சிகர வெற்று வசனங்கள் பேசப் போகிறார்.
நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராத இன்னொரு உரை. ஆனால் முகேஷ் அம்பானி போன்றவர்கள் அவர் என்ன பேசப் போகிறார் என கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எழுதித் தந்ததைத்தான் பேசுகிறாரா, அல்லது மாற்றி எதுவும் படித்து விடுவாரா என்ற கண்காணிப்பு அது.
முகேஷ்
அம்பானி
ஆசியாவின்
முதல் பணக்காரராகியிருக்கிறார். சீனத்தின் அலிபாபா உரிமையாளர் ஜேக் மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டார். மோடியின் படத்துடன் விளம்பரம் செய்யப்பட்ட ஜியோ அலைபேசி சேவை, அம்பானி முதலிடத்தைப் பிடிப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
2018 வரவு செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டின் மொத்த வரவு ரூ.23,99,147 கோடி. மொத்த செலவு 24,42,213 கோடி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் 44.3 பில்லியன் டாலர் (ரூ.3,06,000 கோடி). நாட்டின் 130 கோடி பேருக்கு கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.38 லட்சம் கோடி. இது இன்னும் ஒரு ரூ.15,000 கோடி அதிகரிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. முகேஷ் அம்பானி ஒருவரது சொத்தை விட இந்த ஒதுக்கீடு குறைவு.
அதனால்தான்,
சில வாரங்களுக்கு முன் பாஜக ஆட்சி நடக்கிற ஜார்க்கண்ட்டில் சந்தோஷி என்ற சிறுமி பட்டினியால் செத்துப் போனாள். ஆதார் அட்டை இல்லாததால், அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை. அதனால் பட்டினி கிடந்து செத்துப் போய்விட்டாள்.
மான்சி,
ஷிகா, பருல். இவர்களுக்கு வயது முறையே எட்டு, நான்கு மற்றும் இரண்டு. டில்லியைச் சேர்ந்தவர்கள். ஜ÷லை 24 அன்று அவர்கள் மயங்கிக் கிடப்பதாகக் கருதி அக்கம்பக்கத்தார் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். உடல் கூறாய்வில் அந்தக் குழந்தைகள் பட்டினியால் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அந்தக் குழந்தைகளின் தந்தையைக் காணவில்லை. தாய் மனநலம் குன்றியவர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட்
சிறுமிக்கு
உணவு கிடைக்காமல் போனதற்கு ஆதார் இல்லாதது காரணம் என்று தெரிந்து கொள்ள முடிந்துள்ளது. டில்லி குழந்தைகள் பட்டினி கிடந்து செத்துப் போனதற்கு என்ன காரணம் என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் தலைநகர் டில்லியில், நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுறுகிற நேரத்தில், சுதந்திரம், குடியரசு, சட்டம் எதுவும் அந்த மூன்று குழந்தைகளுக்கு உதவிக்கு வரவில்லை.
மோடியின்
புதிய இந்தியாவில் மகள்களை பாதுகாப்போம் என்ற முழக்கம் சத்தமாகக் கேட்கிறது. ஒரு புறம் பாலியல் துன்புறுத்தலுக் கும் மறுபுறம் பட்டினிக்கும் பெண் குழந்தைகள் பலியாவது
தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது.
இந்த அரசாங்கம் பொறுப்பேற்றபோது ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் மார்ச் 2018ல் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முகுல் சோக்சி ரொம்ப நல்லவர் என்று சான்றிதழ் தந்து அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற வழி செய்தது மிகச்சமீபத்திய சாதனை என்றால், பட்டினிச் சாவுகள் வளர்ச்சி, வாராக் கடன் வளர்ச்சி, கார்ப்பரேட் வளர்ச்சி ஆகியவற்றை மோடி தனது சாதனை கிரீடத்தில் வைரக்கற்களாக இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் சேர்த்துக் கொள்ளலாம்.
பலர் பட்டினியில் செத்தாலும் அக்கறை இல்லை, ஆனால், ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிய வேண்டும் என்பதற்காகவே மோடி ஆட்சி நடத்துகிறார் என்பது குழந்தைகள் உணவின்றி மடிந்துவிடுவதிலும் முகேஷ் அம்பானி மேலும் மேலும் பணக்காரராவதிலும் தெரியும்போது, நான் ஏழைத்தாயின் மகன் என மோடி பசப்புவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.