யோகியின்
ஆட்சியில்
பணம் பெற்றுக்கொண்டு
என்கவுண்டர்
செய்யும்
காவல்துறை
ஜி.ரமேஷ்
‘எங்க போட்டி ஆள் ஒருத்தரை காலி பண்ணனும்’
‘அப்படியா
என் ஏரியாவுக்குள்ளன்னா, 5, 6 லட்சம் ஆகும். மற்ற ஏரியாவில் என்றால் மற்ற ஆட்களிடம் பேச வேண்டும். அதனால கூட 2 லட்சம் ஆகும். அதுக்கு மேல ஆகாது. நான் குறி வைத்து விட்டேன் என்றால் என்னிடம் இருந்து உயிர் தப்பவே முடியாது’
இது ஏதோ வியாபாரிகளுக்கும் தாதாவுக்கும் இடையே நடந்த உரையாடல் என கருதி விட வேண்டாம். உத்தரபிரதேசத்தின் சித்ராஹேட் காவல்நிலை யத்தில் வேலை பார்க்கும் காவல் உதவி ஆய்வாளர் சர்வேஷ் குமாருக்கும் வியாபாரிகள் போல் சென்ற இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர்களுக்கும் இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி. உரையாடல் தொடர்ந்து போகிறது.
‘நீங்க எப்படி அவரைக் காலி செய்வீங்க?’
‘நான் மூன்று காவல் நிலையங்களுக்குப் பொறுப்பு. என்னோட எல்லைக்குள் இரண்டு மூன்று வங்கிகள் இருக்கு, வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாச்
சொல்லி
பிடிச்சு
பின்னர்
அவனைச்
சுட்டுருவேன்’
‘சரி, வங்கிக் கொள்ளையே நடக்கவில்லை அல்லது அந்த ஆள் உண்மையில் எந்தவொரு கொள்ளையிலும் ஈடுபடவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க?’
‘வங்கிக்
கொள்ளைகள்
வழக்கமா
நடக்குறதுதானே.
என் ஏரியாவில் அல்லது
ஜெய்த்பூரில்
அல்லது
பாவில்.
அதெல்லாம்
போலீஸ்
வேலை. நான் 3 காவல் நிலையங்களுக்குப்
பொறுப்பு.
அதை நான் செட்அப் செய்திடுவேன். கொள்ளையில் சந்தேகப்படுபவர்கள் பட்டியலில் முதலில் அவன் பெயரைச் சேர்ப்போம். அவனிடம் ஏதாவது ஒரு அடையாள அட்டை இருக்குமல்லவா, அதைக் கொண்டு வந்து கொள்ளை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் காண்பிப்போம். பிறகு வழக்கமான என்கவுண்டர்தான். ஒன்று செத்துப் போவான். அல்லது படுகாயமுறுவான்’
உத்தரபிரதேசத்தில் காவிச்
சாமியார்
யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர் என்கவுண்டர்கள் வழக்கமான ஒன்றாகியுள்ளது. 2017 மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 1478 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 62 பேர் உயிரிழந்து விட்டார்கள். சுமார் 390 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 241 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. யோகி ஆதித்யாநாத் தன் ஆட்சி யில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற
ரவுடிகளை
ஒழித்துக்கட்டப் போவதாகச்
சொல்லிக்
கொண்டு
உத்தரபிரதேச
காவல்துறையைக்
கட்டவிழ்த்துவிட்டுள்ளார். விளைவு
பணத்திற்காக
என்கவுண்டர்
நடக்கிறது.
சீருடை
அணிந்த
தாதாக்களாக
படுகொலைகளைச்
செய்கிறார்
கள் உத்தரபிரதேச காவலர்களும் காவல் அதிகாரிகளும். பணத்திற்காக மட்டும் இன்றி, காவல்துறையில் பதவி உயர்வுக்காக, யோகி அரசு வழங்கும் பரிசுப் பொருளுக்காக, பிரபலமடைவதற்காக போலி மோதல் களை நிகழ்த்தி பச்சைப் படுகொலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். சாதாரண காவலராக இருப்பவர் என்கவுண்டரில் யாரையாவது சுட்டால், அவருக்கு உதவி ஆய்வாளராக, விரும்பும் நகருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. இதற்காகவே, சிறு குற்றங்களில் ஓரிரு முறை ஈடுபட்டவர்களை கொடிய குற்றவாளிகள் போல் சுட்டுக் கொல்கிறார்கள்; அல்லது ஏதுமே அறியாதவர்களை தங்கள் ஆட்கள் மூலம் அழைத்து வந்து வழக்கில் சேர்த்து பின்னர் என்கவுண்டரில் சுடுகின்ற னர் யோகியின் காவல்துறையினர்.
முதலமைச்சர்
யோகி, காவல்துறையினர் ஏதுமறியாதவர்களைக் கொல்லவில்லை, கொல்லவும் மாட்டார்கள், யாராவது போலீûஸச் சுட்டால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பதிலுக்குத்தான் போலீஸ் அவர்களைச் சுடுகிறது என்று சொல்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்வது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஸôய் ஜாக்னர் கிராமத்தின் காவல் நிலையத்தின் நிலைய அதிகாரி, காவல் ஆய்வாளர் ஜெதாம்பா சிங், பதவி உயர்வுக்காக பல போலீஸ் அதிகாரிகள் போலி மோதல்களை நடத்துகிறார்கள் என்று ஒப்புக்கொள்கிறார். ‘நிலைய அதிகாரி பதவிக்காக நிறைய பேர் கொலை செய்வது, லஞ்சம் கொடுப்பது என எதற்கும் தயாராக இருக்கிறார்கள். நீதிக்குப் புறம்பான கொலைகளும் அதிகார துஷ்பிரயோகமும் உத்தரபிரதேசத்தில் சகஜம். இந்தியாவிலேயே அதிக அதிகாரம் படைத்த போலீஸ் உத்த ரபிரதேச போலீஸ்தான் தெரியுமா? கைகளும் கால்களும் கட்டப்பட்டுள்ளன. முகம் மூடப்பட்டுள்ளது, ஆனாலும் உதைப்போம். அடிப்போம். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்கிறார்.
மாநகரப்
பகுதிக்கு
மாறுதல்
விரும்புகிற,
அதே காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் உதவி ஆய்வாளர் பல்பிர் சிங், சிட்டி ஏரியாவில் சிறை என்றாலும்கூட பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷனில் போட்டால், ஆய்வாளர் என்னை சிறை வேலைக்கு அனுப்பிவிட்டு, காசையெல்லாம் ஸ்டேஷன் அதிகாரியான அவரே எடுத்துக் கொள்வார் என்று காவல் நிலையங்களில் நடக்கும் லஞ்ச நடவடிக்கைகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.
இவர்கள்
சொல்வதில்
இருந்து,
நியாயமான,
நீதிக்கான
காவல்துறை
அதிகாரிகளுக்கு ஆதித்யாநாத்
ஆட்சியில்
இடமில்லை,
லஞ்ச, ஊழலில் திளைக்கும் அதிகாரிகளுக்கு தடையுமில்லை என்று தெரிகிறது.
அதே பல்பீர் சிங், சிட்டி கிடைத்துவிட்டால், ஒரு என்கவுண்டர் நடத்திருவோம் என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். தனது பணியிட மாற்றத்திற்காக ஒரு கொலையே கூடச் செய்யத் தயாராக இருக்கிறார் அவர். தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டுள்ள இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர், ‘ஒருத்தரைப் பிடித்து கொன்று விடுவீர்களா?’ என்று கேட்க, ஆமாம், திட்டம் போட்டுப் பிடித்து காரியத்தை முடித்துவிடுவோம், யாருக்கும் இந்த ரகசியம் தெரியாது என எந்தக் குற்றஉணர்வும் இன்றி பதிலளிக்கிறார். பல்பிர் சிங், அந்த நிருபரிடம், ‘நீங்கள் யாரையாவது கொல்ல வேண்டும் என்றால், அதற்காகவே இருக்கிற தொழில் முறை கொலைகாரர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்கிறார்.
அப்படியென்றால், யோகி சொல்வது போல் உண்மையான கொலைக் கும்பல்கள் யாரும் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை. முசாபர்நகர், சாம்லி, கைரானா, பராட், பாக்பட் ஆகிய இடங்களில்தான் அதிகமாக இந்த என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஒருவரின் சகோதரர் இனாம், ‘நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தை போலீஸ் துன்புறுத்துகிறது. ஒட்டுமொத்த குடும்பத்தையும் கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்துள்ளார்கள்’ என்கிறார் வேதனையுடன். இன் னொருவரின் தந்தை கரம்சிங் சொல்கிறார், ‘என் மகனைக் கொல்வதற்கு முன் சித்ரவதை செய்தார்கள். எங்களிடம் 4 அல்லது 5 லட்ச ரூபாய் கேட்டார்கள். தர முடியவில்லை. என் மகனை என்கவுண்டரில் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அதற்காக ஒரு கதையை அவர்களே உருவாக்கினார்கள். நாங்கள் இப்போது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என்று கேட்டுள்ளோம்’ என்கிறார். மிர் ஹசன், இவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இன்னொரு இளைஞரின் தந்தை. ‘போலீஸ் எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டார்கள், ஒரு மகனைக் கொன்று விட்டார்கள், மற்ற மகன்களையும் குற்றவாளிகள் என்று சொல்லி கொல்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், எங்கள் குடும்பத்தையே அழித்துவிட்டார்கள்’ என்று கதறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டைப் பார்த்தாலே, அவர்கள் ஏழ்மையானர்கள் என்று தெரிகிறது. தன் மகனை என்கவுண்டரில் இழந்த பக்ரூதின் சொல்கிறார்: ‘ஒரு வாரமாக என் மகனைத் தேடி போலீஸ் வந்து கொண்டிருந்தார்கள். அவனைப் பின் தொடர்ந்தார்கள். என் மகன் வீட்டிற்கு வருவதை திடீர் என நிறுத்திவிட்டான். என் மகனைக் கடத்திச் சென்று கொன்றார்கள். என் மகன் குற்றவாளி என்றால், அவனை ஜெயிலுக்குத்தானே அனுப்ப வேண்டும். ஒருவருடைய பிள்ளையைக் கொல்ல இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’
யோகி ஆட்சியில் நடைபெறும் என்கவுண்டர்கள் பற்றி இந்தியா டுடே டிவி நடத்திய இந்த ரகசிய புலனாய்வு நடவடிக்கையில், பேட்டியளித்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் தற்போது தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பேட்டி அளித்த மூன்று காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால், உத்தரபிரதேசத்தின் காவல்துறை புனிதமானதாகிவிடாது. பாஜகவின் தேசிய அதிகாரபூர்வ பேச்சாளர் நரேந்திர தனேஜா, அந்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மற்றபடி உத்தரபிரதேசத்தின் காவல்துறை உண்மையில் நேர்மையானது என்று மழுப்புவது மட்டுமின்றி, ஆதித்ய நாத் கடவுளுக்குப் பயந்தவர், அவர் ஆட்சியில் தவறு நடக்காது என்று சப்பைகட்டு கட்டுகிறார். உத்தரபிர தேசத்தின் முன்னாள் காவல் துறைத் தலைவர் விக்ரம் சிங், இவை என்கவுண்டர்கள் இல்லை. ஒப்பந்தக் கொலைகள் (ஸ்ரீர்ய்ற்ழ்ஹஸ்ரீற் ந்ண்ப்ப்ண்ய்ஞ்ள்) என்கிறார்.
உண்மையில்,
உத்தரபிரதேசத்தில் உள்ள அறியப்பட்ட கொடுங்குற்றவாளிகள் எல்லாம் சுதந்திர மாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக உலவ, காவல் துறை அதிகாரிகள் கையூட்டு வாங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. குற்றவாளிகளைக் கொல்வதாகவும் குற்றங்கள் குறைந்துவிட்டதாகவும் யோகி சொல்லிக் கொண்டிருக்க, பட்டப்பகலில் உத்தரபிரதேச ஆளுநர் மாளிகைக்கு அருகில் இரண்டு பேரைச் சுட்டு விட்டு, ரூ.6.4 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கும்பல் பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலம் உத்தரபிரதேசம்தான். என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் குடும்பத்தினர் மீதெல்லாம் கும்பல் பாலியல் வன்முறை பதிவு செய்துள்ளார்கள் போலும். ஒரே கல்லில் மூன்று மாங்காய். கும்பல் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடுவது, அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை நாங்கள் பிடித்துவிட்டோம் என்று காட்டிக் கொள்வது, மூன்றாவதாக, என்கவுண்டரில் கொல்லப்பட்ட குடும்பத்தினரை மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றிற்கு போக விடாமல் மிரட்டுவது.
கொல்லப்பட்ட
இளைஞர்கள்
பெரும்பாலும்
இஸ்லாமிய,
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ஃபர்கான், நவுசாத், சாமீன் என்றே பெயர்கள் இருக்கின்றன. பாக்கட் கிராமத்தைச் சேர்ந்த சுமித், காரை விரட்டிச் சென்றதில் கொல்லப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், சுமித்திற்கு காரே ஓட்டத் தெரியாது என்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினர். தற்போது சுமித்தின் குடும்பத்தினர் மீது கும்பல் பாலியல் வன்முறை வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிலர்,
யோகியைச்
சுற்றியிருக்கும் சில துதிபாடும் நபர்களின் தவறான ஆலோசனையினால்தான் அவர், இந்த என்கவுண்டர் நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளார் என்று சொல்லி அவரைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள். சாமியார் யோகி, போலி என்கவுண்டர் கள் ஒன்று கூட கிடையாது, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் பாதுகாப்புக்கும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன், குற்றவாளிகளும் தேச விரோதிகளும் உத்தரபிரதேசத்தில் சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டும், விளைவுகளைப் பாருங்கள், குற்ற வாளிகள் எல்லாம் காய்கறி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆதித்ய நாத் ஆர்எஸ்எஸ் வழி வந்தவர்; ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக தங்களுக்குத் தாங்களே வெடி வைப்பவர்கள். என்கவுண்டர்களிலும் மோடிதான் யோகிக்கு முன்னோடி. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதுதான், முதலமைச்சரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று சொல்லி, இஸ்ரத் ஜெகன் உள்ளிட்டவர்களை போலி மோதல் நடத்திக் கொ றார்கள். அதில், மோடியைக் கூட மத்திய புலனாய்வுத் துறை (சிபிஅய்) விசாரிக்க நடவடிக்கை மேற்கொ டது. ஆனால், அரசியல் காட்சிகள் மாறியதால் அது நடைபெறவில்லை என்று அந்தப் போலி மோதலில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட காவல் அதிகாரி வன்சாரா தெரிவித்துள்ளார். இஸ்ரத் ஜெகன் வழக்கில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் சேர்க்கப்பட்டு, மோடி பிரதமர் ஆனதைத் தொடர்ந்து, பின்னர் மத்திய புலனாய்வுத் துறையால் குற்றமற்றவர் என்று சான்றளிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வருவதற்காகவே, முசாபர்நகரில் கலவரங்களை, படுகொலைகளை நிகழ்த்திய சங்பரிவார் கூட்டங்கள், தாங்கள் ஆட்சியில்
இருக்கும்போது
தங்கள்
மீது இருக்கும் குற்ற வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அனைத்தும் செய்கிறார்கள். ஆனால், போலி மோதல் படுகொலைகள், அதுவும் பணம் பெற்றுக் கொண்டு, நடத்தப்படுகின்றன.
உத்தரபிரதேசம்
கோரக்பூர்
நாடாளுமன்றத்
தொகுதி
ஆதித்யநாத்தின் சொந்த தொகுதி. 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய அய்ந்து தேர்தல்களிலும் ஆதித்ய நாத்தான் வெற்றி பெற்றார். அவர் உத்தரபிரதேசத்தின் முதல்வரான பின்னர், அவரது ஆட்சியின் அவலங்கள் அம்பலப்படத் தொடங்கின. கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற டாக்டர் கபில்கானையே குற்றவாளியாக்கியது யோகி அரசு. உயர்நீதிமன்றம் டாக்டர் மீது தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறி பிணை வழங்கியது. பசுக் குண்டர்கள், ரோமியோ படை என சங்கிகள் தாக்குதல் மற்றும் கொலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். இவை இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. விளைவு ஆதித்யநாத் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் 2018ல் நடைபெற்ற கோரக்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதே கார்ப்பரேட் ஆதரவு மோடி, யோகிகள் முதன்மையான நோக்கம் என்பதால், காவல்துறையினரை கட்டுப்பாடின்றி செயல்படவிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது பாஜக அரசு.
பாஜககாரர்கள்
போற்றும்
மகாபாரதம்,
துறவி என்பார், வெயில் காலத்தில் மரத்தடியிலும் மழை காலத்தில் குகையிலும் தங்குவார், அவர் உடையில் ஒரு ஓட்டையாவது இருக்க வேண்டும், கையில் திருவோடைத் தவிர வேற பொருள்களே இருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்கிறது. ஆனால், இந்த யோகி ஆதித்யநாத், காவியுடையை மட்டும் அணிந்து கொண்டு கமாண்டோ படைகள் புடை சூழ, ஏசி காரில் பயணிக்கிறார். இந்தப் போலித் துறவியின் ஆட்சியில் போலி என்கவுண்டர்கள் இருக்கத்தான் செய்யும். போலிகளை மக்கள் விரைவில் தோலுரிப்பார்கள்.