COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


நீதித்துறை அவமதிக்கப்பட்டதற்கெதிராக

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி, ஆளுநர் மாளிகையில் 12.08.2018 அன்று பதவியேற்றபோது, நீதித்துறையினர் அவமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு 13.08.2018 அன்று ஒரு கடிதம் எழுதியது. கடித நகல்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தரப்பட்டுள்ளன.


பெறுநர்
பதிவாளர்,
சென்னை உயர்நீதிமன்றம்

அய்யா,
நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களின் பணி மூப்பு மறுக்கப்பட்டுள்ள விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற விவரமும் இந்தச் செயல் மத்திய அரசு அப்பட்டமான முறையில் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும் நீதித்துறை அறிந்த விஷயமாகும்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி 12.08.2018 அன்று பதவி ஏற்றபோது அரசியல்வாதிகளும் காவல்துறை அதிகாரிகளும் முதல் இரு வரிசைகளில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பின்னால் மூன்றாம் வரிசையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்த்தப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிய வருகிறோம். இதே போல் சில நாட்கள் முன்பு, மதுரை கோவில் திருவிழா ஒன்றில் நடந்துள்ளது. இந்தச் செயல் நீதித் துறையை சிறுமைப்படுத்தி அதன் குரலை நசுக்கும் முயற்சியாகும்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், இந்த அநீதிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மாநில அரசாங்கம் மன்னிப்பு கோருவதோடு, இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

தங்கள் உண்மையுள்ள
கு.பாரதி
(மாநில அமைப்பாளர்)
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்

Search