கொள்ளையர்களிடம் இருந்து கொலைகாரர்களிடம் இருந்து
தாய்நாட்டை மீட்க வேண்டியுள்ளது
எட்டு வழிச்சாலைக்கு 90 சதம் நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன, 9 சதம் பேர்தான் நிலம் தர ஆட்சேபணை தெரிவித்துள்ளனர் என்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் பழனிச்சாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
எட்டு வழிச்சாலைக்கு தனது நிலம் அளக்கப்பட்டதால் மனமுடைந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார். எங்கள் பிணத்தின் மீது சாலை போடுங்கள் என பாதிக்கப்படும் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் செய்தே காட்டிவிட்டார். மக்களைக் கொல்லும் என்று தெரிந்தே ஒரு திட்டத்தை அமல்படுத்த தீவிரமாகச் செயல்படும் கொலைகார பழனிச்சாமி அரசு தமிழ்நாட்டு விவசாயிகள் மீது, மக்கள் மீது தொடுத்துள்ள எட்டுவழிச்சாலை போரில் முதல் கொலை நடந்துவிட்டது. வெட்கமின்றி நட்டஈடு அறிவிப்பார்கள். தாமரை மலர காத்திருப்பவர்கள், மத்திய, மாநில அரசுகளின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளால் நடந்த இந்த கொலையை கொச்சைப்படுத்துவார்கள். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பிரச்சனையை திசைதிருப்ப, திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பி, மூத்த அரசியல்வாதி நலம் பெற்று வருகிறார் என்று நாடகம் போடுவார்கள்.
நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன் சில நாட்கள் மீண்டும் ஒரு வருமான வரிச் சோதனை நடக்கிறது. முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புதிய 2000 ரூபாய் தாள்கள் பதுக்கி வைத்திருந்ததை, தங்கக்கட்டிகளை அடுக்கி வைத்திருந்ததை, எவற்றுக்கும் முறையான கணக்குகள் இல்லாததை கண்டுபிடிக்கிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சி மீது நம்பிக்கை தெரிவித்து அதற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். பின்னர் அந்த சோதனை, அந்தப் பணம், அந்தத் தங்கக் கட்டிகள் என்னவாயின என்று ஒரு செய்தியும் இல்லை. இதற்கு முன்பு இதுபோல் நடந்த எந்த சோதனைக்கும் மக்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எல்லாம் மக்கள் பணம்.
எல்லாம் நலம் என்று கொலைகார ஆட்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்க, அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட முரண்பாடு வழிமாறி, அதிபுனிதமான ராணுவ ரகசியம் ஒன்று வெளியாகி நாடு முழுக்க நாற்றம் அடிக்கத் துவங்கியது. ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்த கடுமையான விதிகள் இருக்கும் என்று நினைத்தேன், அது ஓலா, உபேர் போல கால் டாக்சி சேவைதானா என கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேள்வி எழுப்ப ராணுவ ரகசியம் மேலும் நாறியது. ரஃபேல் ஒப்பந்தம் பற்றி நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் சொன்ன பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ கால் டாக்சி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. மோடி வழக் கம்போல், ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிவிட்டு உகாண்டா, ருவாண்டா போய்விட்டார். கருணாநிதி உடல்நிலையை தமிழ்நாட்டில் தலைப்புச் செய்தியாக்கி, மக்கள் கேள்விகளுக்கு இதுதான் பதில், எல்லா பிரச்சனைகளுக்கும் இதுதான் தீர்வு என்றார்கள். எல்லையில் வீரர்கள்.... என மோடி அரசாங்கம் சொல்லிக் கொண்டிருப்பதுபோல், மருத்துவ மனையில் மூத்தத் தலைவர் என்று பழனிச்சாமி அரசாங்கம் சொல்லத் துவங்கிவிட்டது.
அறிவிக்கப்படாத அவசரநிலை, வாழ்வாதாரம் பறிப்பு, மாநில உரிமைகளை அடகு வைத்து பதவியை, சொத்துக்களை, சொந்தங்களை காப் பாற்றுவது என்ற அனைத்தும் தழுவிய துயரத்தில் மக்களை தள்ளியுள்ள பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜுலை 22 முதல் ஜுலை 28 வரை இயக்கம் நடத்த இகக மாலெ முடிவு செய்தது.
பிரசுர வெளியீட்டுக்கே அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த இயக்கத்துக்கு காவல்துறை தலைவரிடம் மனு தரப்பட்டு, பிறகு மாவட்ட கண்காணிப்பாளருக்குத் தரப்பட்டு, பிறகு உள்ளூர் காவல் நிலையங்களுக்கு ஒரே மாதிரியில் அனுமதி கடிதங்களும் தரப்பட்டன. அறிவிக்கப்படாத அவசரநிலை இருந்தாலும் தெருமுனைக் கூட்டம் நடத்த பிரச்சனை இருக்காது என எதிர்ப்பார்த்து இந்த வடிவம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த குறைந்தபட்ச வடிவத்திலான எதிர்ப்பைக் கூட நசுக்கச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவு உள்ளதென அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது.
திருபெரும்புதூர் காவல்நிலையம் பகுதியின் தொழிலாளர்களைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்களின் காவல்நிலையமாகவே இயங்குகிறது. இயக்கத்தின் துவக்க தினத்தன்றே அங்கு அனுமதி மறுத்தனர். கடிதம் கேட்டபோது, அதையும் கொடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட தோழர்கள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு மய்யங்களில் நடத்த இருந்த மூன்று கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டு காவல்நிலையங்களில் அச்சு பிசகாமல் ஒரே மாதிரி மறுப்பு கடிதம் தரப்பட்டது.
இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவை துடியலூரில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு 11.07.2018 அன்று கடிதம் தரப்பட்டது. அன்றே அய்ஜிக்கும் எஸ்பிக்கும் தகவல் சொல்லப்பட்டது. ஏற்பாடுகளும் பிரச்சாரமும் முடிந்த நிலையில், 27.07.2018 அன்று பின்மாலையில் அனுமதி மறுப்பு கடிதம் தந்தனர். கடிதத் தேதி 24.07.2018 என போடப்பட்டு, 24.07.2018 அன்றே கையொப்பமானதாக இருந்தபோதும் 27.07.2018 பின்மாலைதான் கடிதம் தயாராகி இருக்க முடியும். போக்குவரத்து நெரிசலான பகுதி, ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமை அதிகக் கூட்டம் இருக்கும் என்று தவறாக காரணம் சொல்லி, அனுமதி மறுக்கப்பட்டது. இந்த இடம் வழக்கமாக கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும் இடம். 28.07.2018 அன்று அஇஅதி முகவினர் செயல்வீரர் கூட்டம் துடியலூரில் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு நடக்க இருந்ததுதான் அனுமதி மறுப்புக்கு உண்மையான காரணம் எனத் தெரிகிறது.
புதுக்கோட்டையில் இரண்டு மய்யங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. கறம்பக்குடியில் அனுமதி மறுப்பை மீறி தோழர்கள் கூட்டம் நடத்தினர். சேலம், நெல்லை மாவட்டங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டது. விழுப்புரத்தில் கோரிக்கை மாநாடு நடத்தக் கூடாது, மனு தரலாம் என்றனர். நாமக்கல், திண்டுக்கல், கரூர், நாகை, தஞ்சை, கடலூர் என பல மய்யங்களில் எதிர்ப்பியக்கம் நடத்தப்பட்டது.
காவல்துறையின் கெடுபிடிகளையும் மீறி, பழனிச்சாமி அரசே பதவி விலகு என்ற முழக்கத்துடன் தமிழ்நாடெங்கும் 40க்கும் மேற்பட்ட மய்யங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. போராடிப் பெற்ற சுதந்திரத்தை முடக்கும், மறுக்கும் மோடி, பழனிச்சாமி அரசுகள் மக்களுக்கு இழைக்கிற துரோகங்களுக்கு எதிரான இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்த இகக மாலெ முயற்சிகள் மேற்கொள்கிறது. இன்றைய கொள்ளையர்களிடம் இருந்து தாய்நாட்டை மீட்க, உழைக்கும் மக்கள் மீண்டும் ஒரு சுதந்திரப் போருக்கு தயாராக உறுதி ஏற்க வேண்டியுள்ளது.