COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 31, 2018

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பற்றி இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது, ஓர் அருந்ததியர் பெண் சமையலர்க்கு எதிராக சாதி ஆதிக்கம் மேற்கொண்ட புறக்கணிப்பை காண நேர்ந்தது. ஆதிக்கத்திற்கு எதிரான, கவிஞர் சுகிர்தராணியின் ‘தயவுசெய்து தற்கொலை செய்துகொள்’ என்ற சீற்றம் தெறிக்கும் கவிதையை சமூக ஊடகத்தில் வாசித்தேன். அதை மாலெ தீப்பொறி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

நாங்கள்
சமையலராக இருக்கிறோம்
நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்

நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்

செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்

பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்

பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டிடத்தை நீயே கட்டிக் கொள்

வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்

முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்

ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக் கொடு

ஓட்டுனராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்

கூலியாக இருக்கிறோம்
உன் சுமையை நீயே தூக்கிக் கொள்

மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்

சாக்கடை வாருபவர்களாக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்

கலப்பு மணம் புரிந்தவராக இருக்கிறோம்
உன்னை நீயே புணர்ந்து கொள்

நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவராக இருக்கிறோம்

இதுவும் உனக்கு
வேண்டாமெனில்

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

Search