COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 31, 2018

நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இன்று, பேஸ்புக் பக்கங்களை நீங்கள் ஆக்கிரமித்திருக்கிறீர்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தோழர்கள் உங்கள் பெயர்... உங்கள் நிழல்படம்.... உங்களுடனான உரையாடல்கள்... விவாதங்கள்... அவர்கள் உங்கள்பால் கொண்டுள்ள அன்பு, மரியாதை... இரங்கல் செய்திகள்... உணர்வுகள் என அந்தப் பக்கங்களை நிறைத்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தோழர்கள் உங்களைப் பார்த்து உங்களுக்கு வலுவூட்ட இங்கு வந்து கொண்டிருந்தார்கள். இது கடைசி போர் என்பது அவர்களுக்கு தெரியும். ஆயினும் அவர்கள் உங்களுக்காக உங்களுடன் நின்றார்கள். அந்த கடைசி போரை விடாப்பிடியாக தொடர அர்ப்பணிப்புடன் உங்களுக்கு ஆதரவாக நின்றார்கள். நேற்று நள்ளிரவில் அந்தப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், உங்கள் போராட்டம்.... உங்கள் வாழ்க்கை.... உங்கள் அனுபவங்கள்... உங்கள் தத்துவம்... உங்கள் அரசியல்... வரும் நாட்களில் பல போர்களை எதிர்கொள்ள அவை எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
அவை வெறும் நினைவுகள் அல்ல... உங்களது விடாப்பிடியான போராட்டம் எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்... எல்லா போராட்டங்களையும் நடத்த எங்களுக்கு எல்லா வலிமையும் தரும்.
எல்லா மரணங்களும் சமமல்ல!
செவ்வணக்கம் தோழரே!
- மதுரிமா பக்ஷி

Search