பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அரசுக் கட்டுப்பாட்டில் வர வேண்டும்!
சென்னையின் பெருமைமிகு கல்வி நிலையங்கள் என்று அறியப்படுகிற பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் குற்ற முடை நாற்றம். செய்திகள் வெளி வர வெளி வர குமட்டுகிறது. பள்ளிகளின் பெயர்களை முழுவதுமாகக் கூட சொல்லாமல், பத்ம சேஷாத்ரி, செட்டிநாட், மகரிஷி என்று அந்தப் பெயர்களை 'ஷார்ட்டாக' 'ஸ்வீட்டாக' 'ஸ்டைலாக' சொல்வார்கள். அந்த நாற்றம் பிடித்த பிம்பத்தை இத்தனை ஆண்டுகளாக தூக்கிப் பிடித்து பாதுகாத்திருக்கிறார்கள்.