கோவை பிரிக்காலில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தொழிலாளர் மத்தியில் இருந்து எதிர்ப்பு எழுந்த பிறகு, ஒரு வாரம் விடுமுறை என நிர்வாகம் அறிவித்தது. எல்டியுசி சங்க உறுப்பினர்களின் ஊதியத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்தைப் பிடித்து நிவாரண நிதியாக தரும் நிர்வாகத்தின் முயற்சியும் தொழிலாளர்களின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.