COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இதற்கு யார் பொறுப்பு?


பக்கம் 167 - 177, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு


.....சென்ற இதழ் தொடர்ச்சி


சொத்து சம்பந்தப்பட்ட வரையிலும் ஒரு மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மனு தாழ்த்திவிட்டார்.


9. 416. ஒரு மனைவி, ஓர் மகன், ஓர் அடிமை - இந்த மூவருக்கும் சொத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பாதிக்கும் செல்வம், அது யாருக்கு சொந்தமானதோ அவருக்காகப் பெறப்படுகிறது.
ஒரு மனைவி விதவையாகும்போது, அவளுக்கு பராமரிப்புச் செலவை ஜீவனாம்சத்தை மனு அனுமதிக்கிறார். அவள் அவளுடைய குடும்பத்திலிருந்து தனித்திருந்தாளேயானால், அவளுடைய கணவனின் சொத்தில் அது விதவையின் பாதுகாப்புக்குரிய சொத்தாகிறது. ஆனால் சொத்தின் மீது அவளுக்கு எந்த ஆதிக்கத்தையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
மனுவின் சட்டங்களின்கீழ் ஒரு பெண் கொடிய உடலுக்கு ஊறுவிளைவிக்கும் தண்டனைக்குரியவளாகிறாள். தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதற்கு அவளுடைய கணவனை மனு அனுமதிக்கிறார்.
8. 299. தவறுகள் செய்த ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை, ஒரு மாணவர், ரத்த சம்பந்தமுடைய ஒரு இளைய சகோதரர் ஆகியோர் ஒரு கயிற்றினாலோ, அல்லது ஒரு மூங்கில் கழியினாலோ அடிக்கப்படலாம்.
மனுவின் விதிப்படி ஞானம் (அறிவு) பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை. வேதம் படிப்பதற்கு அவளுக்கு உரிமை இல்லை என்று மனு தடை செய்கிறார்.
2. 66. ஒரு பெண்ணுக்கும்கூட சமஸ்காரங்களை நிறைவேற்றுவது அவசியமாகும். ஆனால் அவள் வேத மந்திரங்களை கூறாமல் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
பலியிடுவது மதத்தின் உள்ளார்ந்த ஆத்மா வாகும் என்று பிராமணீயம் கூறுகிறது. ஆனால் பலியிடும் நைவேத்தியத்தைப் பெண்கள் செய்யக் கூடாது என்று மனு தடை செய்கிறார். மனு இவ்வாறு விதிக்கிறார்
11. 36 - 37 வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அன்றாட நைவேத்தியங்களை ஒரு பெண் செய்யக்கூடாது. அவள் அதைச் செய்தால் நரகத்திற்குப் போவாள்.
அத்தகைய நைவேத்தியங்களைச் செய்வதை அவளுக்கு இயலாமல் செய்வதற்கு, அவள் ஒரு பிராமணப் புரோகிதரின் உதவியையும் சேவைகளையும் பெற முடியாமல் மனு தடை செய்கிறார்.
4. 205 - 206. பெண்கள் செய்யும் நைவேத்தியத்தின்போது வழங்கப்படும் உணவை ஒரு பிராமணன் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. கடவுளுக்கு ஏற்புடையதல்ல. எனவே, அவை தவிர்க்கப்பட வேண்டும்.
இறுதியாக ஒரு பெண்ணின் முன் மனு வைப்பதற்கு முயன்ற வாழ்க்கை இலட்சியத்தை பற்றி ஒரு வார்த்தை. அவருடைய சொற்களிலேயே அதைப் பார்க்கலாம்:
5. 151. அவளுடைய தந்தை அவனை அல்லது அவளுடைய சகோதரர், தந்தையின் அனுமதியின் பேரில் அவளை யாருக்குத்தாரை வார்த்துக் கொடுக்கிறாரோ அவர் உடனிருக்கும் வரையில் அவள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; அவர் மரணமடைந்தால், அவருடைய நினைவுக்கு அவள் அவமரியாதை செய்யக் கூடாது.
5. 154. நல்ல பண்புகள் இல்லாதபோதிலும் அல்லது கணவன் வேறிடங்களில் இன்பம் தேடினாலும் சிறந்த குணங்கள் இல்லாதவனாக இருந்த போதிலும் ஒரு விசுவாசமான மனைவி கணவனைக் கடவுளைப் போன்று இடைவிடாது வழிபட்டு வர வேண்டும்.
5. 155. பெண்கள், தங்களுடைய  கணவர்களையல்லாது எந்த படையல் வைப்பதோ எந்த சபதம் மேற்கொள்வதோ, எந்த உபவாசம் மேற்கொள்வதோ செய்யக்கூடாது. ஒரு மனைவி தனது கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அந்தக் காரணத்திற்காகவே அவள் சுவர்க்கத்தில் போற்றப்படுவாள்.
பின்னர் மிகவும் பொருக்குமணியான வாசகங்கள் வருகின்றன. பெண்களுக்கு மனு வரையறுத்துக் கூறுகிற இந்த லட்சியத்தின் சாரம்சம் இதுதான்:
5. 153. புனிதமான மந்திரங்கள் உச்சாடனத்தோடு அவளைத் திருமணம் செய்துகொண்ட கணவன் எப்போதும், இந்த உலகிலும், மறு உலகத்திலும் அவனுடைய மனைவிக்கு மகிழ்ச்சியின் மூலாதாரமாக இருக்கிறான்.
5. 150. அவள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டும். தனது வீட்டு விவகாரங்களை நிர்வகிப்பதில் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். தனது பாத்திரங்களை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். செலவு செய்வதில் சிக்கனமாக இருக்க வேண்டும். இதை ஒரு பெண்ணுக்கு மிகவும் உன்னதமான லட்சியம் என்று இந்துக்கள் கருதுகின்றனர்!!!
பெண்களின் இயலாமைகள் என்ற அவருடைய கம்பீரமான நினைவுச் சின்னத்தின் மீது ஒரு அடையாளக் கல்லை வைப்பது போன்று மனு, ஒரு பெண்ணை கொல்வதானது ஓர் உபபாதகம் மட்டுமே, அதாவது ஓர் அற்பமான குற்றமேயாகும் என்ற ஒரு புதிய விதியை பிரகடனம் செய்தார்.
11. 67. மது (அருந்துதல்), பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் அல்லது சத்திரியர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களே ஆகும்.
ஒரு சூத்திரன், வைசியன் அல்லது ஒரு சத்திரியனைக் கொல்வது ஒரு உபபாதகம் மட்டுமே என்று ஏன் மனு கூறினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு பிராமணன் இவர்கள் அனைவருக்குமே மேலானவன் என்றும், ஒரு பிராமணனைக் கொல்வதுதான் மகாபாதகம் என்றும் நிலைநிறுத்துவதற்கு அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால் அதே விதியை பெண்களுக்கு ஏன் பிரயோகப்படுத்த வில்லை? ஏனெனில் மனுவின் பார்வை பார்வையில் ஒரு பெண் ஒரு மதிப்பும் இல்லாத ஒரு பொருள் என்பதே இதற்குக் காரணம்.
இந்த மேற்கோள்களை முன்னிட்டு, இந்தியாவில், பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்கு மனுவே காரணமாகும் என்பதை யாராவது சந்தேகப்பட முடியுமா? பெரும்பாலான மக்கள் இதை ஒருவேளை அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரியாது என்று தோன்றுகிறது. மனு விடம் வினோதமானது என்ன இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. பெண்களைப் பற்றிய மனுவின் சட்டங்களில் புதியவையோ அதிர்ச்சியளிக்க தக்கவையோ ஒன்றுமில்லை. இந்தியாவில் பிராமணீயம் தோன்றியது முதல் பிராமணர்களின் கருத்துகள் இவையேயாகும். மனுவுக்கு முன்னால் அவை சமூகத் தத்துவம் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன. ஒரு சமூக தத்துவமாக இருந்ததை அரசின் சட்டமாக மாற்றியதுதான் மனு செய்த வேலையாகும். பெண்களின் மீது இந்த இயலாமைகளை மனு சுமத்துவதற்கு இட்டுச்சென்ற காரணத்தை அவர்கள் அறியாதது இரண்டாவது விஷயமாகும். புத்தரின் சமயத்தில் வந்து சேர்ந்து அதன் மூலம் பிராமணீய மதத்தின் அஸ்திவாரத்தையே தகர்ப்பதற்கு பெரும் கும்பலாக வந்த ஆரிய சமூகத்தின் இரு முக்கிய பகுதிகள் சூத்திரர்களும் பெண்களுமாவர். புத்த சமயத்தின்  திசையில் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த பெண்களின் பிரவாகத்தை தடுத்து நிறுத்துவதற்கு மனு விரும்பினார்.
இதற்காகத்தான் மனு இந்த இயலாமைகளைப் பெண்களின் மீது சுமத்தி, அவர்களை நிரந்தரமாக முடமாக்கினார். இதை சந்தேகிப்பவர்கள் மனு ஸ்மிருதியில் அடங்கியுள்ள கீழ் வரும் ஆண்களை கவனித்துப் பார்க்கட்டும்:
5. 88. ஒரு நபர் இறந்த போது செய்யப்படும் ஈமச் சடங்குகளும் இறுதிக் காரியங்களும் - அவர் கலப்பு மணத்தின் பேரில் பிறந்தவராக இருந்தாலோ, துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவராக இருந்தாலோ, தற்கொலை புரிந்து தமது வாழ்க்கையை முடித்துக் கொண்டவராக இருந்தாலோ - அந்த ஈமக்கடன்கள் வாபஸ் பெறப்படும்.
5. 89 மதப்பற்றில்லாதவர்களின் குழுவில் சேர்ந்த பெண்கள், குழந்தை தாயின் கருவிலிருக்கும்போதே அதற்குக் காயம் ஏற்படுத்திய பெண்கள் அல்லது தமது கணவன்மார்களுக்கு காயம் ஏற்படுத்திய பெண்கள், கூடுதல் சுதந்திரமாகத் திரிந்தவர்கள் மற்றும் ஒயின் குடிக்கிறவர்கள் ஆகிய பெண்களுக்கும் ஈமச்சடங்குகள் ரத்து செய்யப்படும்.
இந்த ஆணை, மற்றவர்களோடு, அதாவது (1) துறவு மனப்பான்மை உடையவர்கள் (2) மதப் பற்றில்லாதவர் குழுவினரோடு சேர்ந்த பெண்களுக்கு எதிராக குறிவைத்துள்ளதாகும். இந்த ஆணையில் துறவு மனப்பான்மையானது பரிவர்ஜகர்களைக் குறிப்பிடுகிறது - அதாவது, தமது இல்லங்களை விட்டு வெளியேறி சந்நியாசத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் மதப்பற்றில்லாதவர் குழுவை பற்றிக் குறிப்பிட்டது, புத்த சமயம்தான் மனுவின் மனதிலி ருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே ஒரு துறவிக்கு, அல்லது மதப்பற்றில்லாத குழுவில் சேர்ந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு ஈமச்சடங்குகள் நடத்தப்படக் கூடாதென்று மனு அறிவிக்கும்போது, புத்தரின் சமயத்தில் சேர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தின் நபருக்கு - ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் - ஈமச் சடங்குகள் செய்யப்படுவதைத் தடை செய்வதே மனு செய்துள்ளார். வேறு சொற்களில் கூறுவதெனில் அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டவர்கள், இனி ஒரு போதும் குடும்பத்துடன் சேர்ந்தவர்களல்ல என்றே கருதப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மனுதான் புத்த சமயத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பாளர். பெண்களுக்கு எதிராகப் பல அநீதிகளை அவர் சுமத்தியதன் ரகசியம் இதுவேயாகும். ஏனெனில், புத்த சமயத்தின் படையெடுப்பிலிருந்து குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் பெண்ணைத்தான் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதை அவர் செய்தார் எனவே இந்தியாவில் பெண்ணின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்குமான எல்லாப் பொறுப்பும் மனுவின் மீதுதான் சுமத்தப்பட வேண்டுமேயன்றி, புத்தரின் மீது அல்ல.
ஒரு சில பக்கங்களின் எல்லைக்குள் இந்துப் பெண்ணின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வரலாற்றை எடுத்துக் காட்டுவதற்கு நான் முயன்றுள்ளேன். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம், அவர் ஏன் அதை ஏற்படுத்தினார் என்பது சம்பந்தமான விளக்கத்தை தருவதற்கும் நான் முயன்றுள்ளேன். தப்பெண்ணம் (துவேஷம்) இல்லாத மற்றும் பாரபட்சமில்லாத ஒவ்வொருவரும் பெண்கள் சம்பந்தமான சோகத்திற்குப் பொறுப்பானவர் புத்தர் அல்ல என்பதை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் உண்மையில் பெண்ணை உன்னதமானவளாக்குவதற்கு புத்தர் முயன்றார் என்றால், அது அவளை ஆணின் மட்டத்திற்கு உயர்த்துவதற்குதான்!

Search