COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

இந்த அரசின் செயல்பாடுகள் ஏழைகளை மட்டுமில்லை,
ஓரளவு பொருளாதார வளம் மிக்க இந்திய சமூகத்தையும்
சீரழிக்கத் துவங்கி இருக்கிறது


(IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் 116 பேர் கையொப்பமிட்ட அறிக்கை) தமிழில் : கை.அறிவழகன்


அன்புள்ள பிரதமருக்கு,


அகில இந்திய அளவிலான மத்திய அரசு ஆட்சிப் பணித்துறையைச் சார்ந்த முன்னாள் அரசுப் பணியாளர்களின் குழுவாகிய நாங்கள் இந்திய அரசியலமைப்பில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், அரசியல் சார்புகள் ஏதுமில்லாமல் அரசியலமைப்பின் விதிகள் மீறப்படும் போதெல்லாம் உங்களுக்கும், பிற அரசியல மைப்பு அதிகாரிகளுக்கும் கடந்த காலங்களில் பல முறை கடிதம் எழுதி இருக்கிறோம்.
கோவிட் பெருந்தொற்று பரவலாகி இந்திய குடிமக்களின் வாழ்வை சிதைத்துப் போட்டி ருக்கும் இந்த வேளையில் மிகுந்த வேதனையோடும், கோபத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். பெருந் தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது, அது இந்தியர்களையும் விட்டுவிடப் போவதில்லை.
குடிமக்களை பாதித்திருக்கும் மருத்துவ உதவியோ, ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களோ மட்டும் எங்கள் மனதில் துயராகப் படியவில்லை, அதையும் தாண்டி ஒன்றிய அரசு இந்தக் கொடுமையான காலத்தை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறது, அது எவ்வளவு ஆழமாக ஒவ்வொரு இந்தியரின் உடல் மற்றும் மன நலத்தைப் பாதிக்கிறது என்பதை நினைத்து நாங்கள் கவலையடைகிறோம்.
தேய்ந்து காணாமல் போன அமைச்சரவை அமைப்பும், ஆட்சியமைப்பும் மட்டுமில்லாமல், மாநில அரசுகளுடனான உறவு சிதைந்து போயிருக்கிறது, குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுடனான உறவு கவலையளிக்கிறது, முறையாக அறிவிக்கப்பட்டுக் கூட்டப்படும் நிபுணர் குழுக் கூட்டங்கள் இல்லை, நாடாளுமன்றத் கூட்டுக் குழுவின் கூட்டங்கள் இல்லை, நிபுணர் குழுக்களின் ஆலோசனை கேட்கப்படாத, மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காத இந்த அர சின் செயல்பாடுகள் ஏழைகளை மட்டுமில்லை, ஓரளவு பொருளாதார வளம் மிக்க இந்திய சமூகத்தையும் சீரழிக்கத் துவங்கி இருக்கிறது.
பன்னாட்டு சமூகமும், நம்முடைய விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரித்த போதிலும் முதல் மற்றும் இரண்டாம் அலைக்கு இடைப்பட்ட காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்த அரசு தவறவிட்டிருக்கிறது. அவசர காலத் தேவைகள், மருத்துவப் பணியாளர் நியமனங்கள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் விநியோகம், வென்டிலேட்டர்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை ஏற்பாடு செய்வதில் இந்த அரசு முழுமை யான தோல்வி அடைந்திருக்கிறது.
உலகின் முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நாடாக இருந்தும், மன்னிக்கவே இயலாத வகையில் தடுப்பூசிகளுக்கான முன்னேற்பாடு கள் எதையும் இந்த அரசு மேற்கொள்ள வில்லை, இந்தத் துயரமான காலத்தில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் பொதுவெளிகளில் வெளிப்படுத்திய பொறுப்பற்ற தன்மை நிலைமையின் தீவிரத்தை திசை திருப்பிய தோடு மட்டுமில்லாமல் மாநில அரசுகளையும், பொதுமக்களையும் பெருந்தொற்றின் துயர் மிகுந்த காலத்தில் ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளி இருக்கிறது.
உங்கள் 'ஆத்மநிர்பார்' பாரதம் இன்று வெளியுலகை நோக்கி உதவிக்கரம் கோரும் ஒரு அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, ஆனால், இந்த நிலையை உங்கள் அரசுதான் மக்களின் மீது திணித்தது. மார்ச் 2020ல் தொற்று நோய் துவங்கிய காலத்தில் இருந்தே, நிலைமையை சமாளிக்க மாநில அரசுகளுக்குத் தேவைப்பட்ட நிதியை உங்கள் அரசு முறையாக வழங்கவில்லை.
ஏற்கனவே 'பிரதமரின் தேசிய அவசர கால நிதி' (Prime MInister National Relief Fund ) என்ற அமைப்பு செயலில் இருக்கும்போது PMCARES என்றொரு திட்டத்தை அறிமுகம் செய்தீர்கள், ஆனால், எவ்வளவு நிதி வசூல் செய்யப்பட்டது, எதற்காக செலவு செய்யப்பட்டது என்கிற எந்த விவரங்களும் இதுவரை இல்லை, இந்தத் திட்டத்தின் மூலம் பெருநிறுவனங்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் வசூல் செய்யப்பட்ட நிதி மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் போய்ச் சேர்ந்திருக்கும், அல்லது தொண்டு நிறுவனங்களிடமாவது போயிருக்கும்.
உங்கள் அரசு மாநில அரசுகளுக்கு சட்டப்படி சேரவேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியின் (GST) பங்குத் தொகையை முறையாக மாநிலங்களுக்கு வழங்கவில்லை, இந்த பேரிடர் காலத்தில் அந்த நிதி மாநிலங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந் திருக்கும், அதே வேளையில் உங்கள் அரசு 'சென்ட்ரல் விஸ்தா' என்ற பெயரில் அரசு மாளிகைகள் கட்டுவதற்கு பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது, பெருந்தொற்றின் பாதிப்புகளை சமாளிக்க அந்தப் பணம் உதவியாக இருந் திருக்கும், அதைவிட மோசமாக தொண்டு நிறு வனங்களை உங்கள் அரசு நடத்திய விதமானது சகிக்க இயலாதது, அவர்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகளை முடக்கியது உங்கள் அரசு.
இந்த இடர்க்காலத்தில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை தவிர்க்க இயலாது என்றாலும், பிரதமர் அவர்களே, நீங்களும் உங்கள் கட்சி நிர்வாகிகளும் எச்சரிக்கைகளை எல்லாம் மீறி வெவ்வேறு மாநிலங்களில் மிகப் பெரிய பொதுக் கூட்டங்களையும் பேரணி களையும் நடத்தினீர்கள்; முன்மாதிரியான கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் கூட்டங்களை நீங்கள் நடத்தி இருந்தால் நாடு முழுவதும் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருந்திருக்கும், கோவிட் மருத்துவ எச்சரிக்கையை மதிக்காமல் ஹரித்துவாரில் கும்பமேளாவை நடத்தினீர்கள், இந்த நிகழ்வுகள் இரண்டும் பெரிய அளவிலான இரண்டாம் அலை தொற்றுப் பரவலுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்ததுதான் துயரம், உங்கள் அலட்சியத்தால் நாட்டின் ஊரகப் பகுதிகள் அபாயகரமான தொற்றுப் பரவலை இன்று எதிர்கொள்கிறது.
உங்கள் அரசு சிக்கலான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஆட்சித்திறனை தம்பட்டம் அடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டியது, சோதனை விவரங்கள், நோய்த்தொற்றுப் புள்ளிவிவரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து உங்களுக்கு வழங்கப்பட்டாலும் தொற்று கண்டறியப்பட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்கள், இறப்பு எண்ணிக்கை போன்றவை வெளிப்படையாக வைக்கப்படவில்லை. மாநிலங்களின் தேவைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உங்கள் ரகசிய நடவடிக்கைகள் பாதித்தன. உங்கள் அரசின் கள்ளமௌனம் கோவிட் பரவலைத் தடுப்பதில் இருந்து மாநிலங்களைத் தடுத்தது. 
கீழ்க்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக இந்திய ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
1) உலகளாவிய தடுப்பூசி வழங்கலை இந்தியர் அனைவருக்கும் இலவசமாக உடனடி யாக வழங்குங்கள், இயன்ற எல்லா தயாரிப்பு மையங்களில் இருந்தும் தடுப்பூசிக் கொள்முதலை ஒற்றைச் சாளர முறையில் பெற்று முறையாக மாநில அரசுகளுக்கும், ஏனைய தடுப்பூசி வழங்கும் அமைப்புகளுக்கும் விநியோகம் செய்யுங்கள்.
2) ஒருங்கிணைந்த செயல்திறனோடு மாநில அரசுகளோடு தொடர்பு கொண்டு ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைப்புகள் போன்றவை தேவையான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
3) RT-PCR பரிசோதனைகளை நகர்ப்புற - ஊரக வேறுபாடுகள் இன்றி துரிதப்படுத்துங்கள்.
4) 'சென்ட்ரல் விஸ்தா' போன்ற தேவையற்ற செலவுகளை உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவ உள்கட்டமைப்பை உறுதி செய்யும் மாநிலங்களுக்கான பெருந்தொற்றுக்கால நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள்.
5) உபரியாக இருக்கும் உணவு தானியங்களை நாடு முழுவதும் வாழும் விளிம்பு நிலை மக்களுக்கும், வேலையிழந்து பசியால் வாடும் முறைசாராத அமைப்புத் தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்க திட்டமிடுங்கள், வாழ்வாதாரத்தைக் காக்கவும், பசியைப் போக்கவும் இந்த திட்டங்களே கைகொடுக்கும்.
6) மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுத் திட்டங்களை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், கூடுதலாக தாய்மார்களுக்கும் வழங்குங்கள், பள்ளி செல்லாத இளம் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்த வேண்டும்.
7) பொருளாதார அளவில் மிகுந்த பாதிப்படைந்திருக்கும் வகுப்பினருக்கு அவர்களின் மாதாந்திர பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் மாதாந்திர நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள், குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் பொருளாதார நிபுணர்கள் சொல்லி இருக்கும் 7000 ரூபாயை அவர்களுக்கு உடனடியாக வழங்குங்கள். அது அவர்களுக்கு இந்த நெருக்கடியான கால கட்டத்தில் உதவிகரமாக இருக்கும்.
8) தொண்டு நிறுவனங்கள் மீதான (ஊஇதஅ உட்பட) பல்வேறு கட்டுப்பாடுகளை உடனடி யாக நீக்கி அவர்கள் பல வெளிநாட்டு அரசு களிடம் இருந்தும், அரசு சாரா அமைப்புகளி டம் இருந்தும் பணம் பெற்று பெருந்தொற்றுக் கால சேவையாற்றுவதை அனுமதியுங்கள்.
9) பெருந்தொற்று தொடர்பானஎல்லா புள்ளிவிவரங்களை பொது வெளியில் வெளியி டுங்கள், அது ஆதாரப்பூர்வமான கொள்கை சார்ந்த முன்னேற்பாடுகளையும் திட்டங்களையும் தீட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
10) அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழுவை உருவாக்கி, அரசின் முடிவுகளை திருத்தி அமைக்கவும், நாடு முழுவதற்குமான ஆலோசனை வழங்கவும் அந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்குங்கள்.
அரசியல் - மேலாளுமை மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நேரத் தில், நாட்டின் நம்பிக்கையையும், உளவியலையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுங்கள், குடிமக்கள் மீதான நேசமும், அக்கறையும் தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்து துயரத்தில் இருக்கும் மானுடர்க்கு அவசரத் தேவை, வரலாறு தொடர்ந்து இந்த இக்கட்டான காலத்தில் நம் அனைவரையும் நினைவில்  வைத்திருக்கும்,
சமூகத்தையும், உங்கள் அரசையும், தனிப் பட்ட முறையில் (நரேந்திர தாமோதரதாஸ் மோடியாகிய உங்களையும்) இன்னும் எல்லாவற்றையும் காலம் கவனித்துக் கொண்டே இருக்கிறது. இந்த துயரமான இடர்க்காலத்தில் நாம் எப்படி செயல்பட்டோம் என்பதுதான் வரலாற்றில் நீதியாகவும், அநீதியாகவும் நிலைத்திருக்கும்.


சத்யமேவ ஜெயதே.


தங்கள் உண்மையுள்ள
CONSTITUTIONAL CONDUCT GROUP
19 மே 2021

Search