COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

நீங்கள் பூக்கள் அனைத்தையும் வெட்டிவிடலாம்!


ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது!!
 
ஆங் சூ கியை கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சிறையில் வைத்தது மியான்மர் ராணுவம். அவரும், அவர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க, ஒரு சட்டம் போட்டது. தானே, தனக்காக, தன் தேர்தல் ஒன்றை நடத்தி வெற்றி பெற்று, பிறகு நவம்பர் 13 அன்று ஆங் சூ கியை விடுதலை செய்தது. மக்களை சந்தித்தார். நாம் இன்னும் உறுதியுடன், இன்னும் தீவிரமாக நமது போராட்டத்தை தொடர வேண்டும் என்றார்.


ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லும் மியான்மர் அரசாங்கம், ஆங் சூ கிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் விடுதலையான செய்தியை வெளியிட்ட 8 பத்திரிகைகளை தடை செய்தது. மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று விதிகள் போட்டிருக்கிறது. மட்டுமின்றி நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டம் ஏதும் நடந்தால் இரண்டாண்டுகள் சிறை என்றும் சொல்லியுள்ளது. ராணுவத்தின் பூட்ஸ் சத்தம்தான் மக்கள் தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படும் ஆட்சியில் கேட்கின்றன. ஆங் சூ கி அந்த ஆட்சியின் இடைவிடாத கண்காணிப்பில்தான் இருக்கிறார்.

சூ கிதான் விடுதலை செய்யப்பட்டாரே தவிர, மியான்மரில் ஜனநாயகத்துக்காக போராடியதற்காக சிறை வைக்கப்பட்ட 2,002 அரசியல் கைதிகள் இன்னும் சிறையில்தான் இருக்கின்றனர் (ஜ்ஜ்ஜ்.ண்ம்ல்ஹஸ்ரீற்ய்ர்ற்ற்ண்ய்ஞ்ட்ஹம்.ஸ்ரீர்ம்).

தேர்தல் நடந்து, ஆங் சூ கி விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் ஜனநாயகம் இன்னும் மியான்மர் மக்களை தொட்டுப் பார்க்க வில்லை.

முதலாளித்துவ ஜனநாயகம், முதலாளித் துவ சர்வாதிகாரத்தின் முலாம் பூசப்பட்ட பெயரே. உலகின் மிகப் பெரிய ஜனநாயகங்களில் ஒன்று என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்திய அரசு இந்தியாவில் ஜனநாயக உணர்வு கொண்டவர்களை தேசத் துரோகிகள் என்கிறது. அருந்ததி ராய், ஜீலானி, வரவர ராவ் என காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் மீது தேசத் துரோகம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி முதல் தகவல் அறிக்கை தந்துள்ளது.

இது பற்றி செய்தி அறிந்தவுடன் அருந்ததி சொன்னார்: ‘அவர்கள் ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்கு பதிவு செய்ய வேண்டும்’.

‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியா அரசாங்கமே இதை ஒப்புக்கொண்டுள்ளது’. இப்படிச் சொன்னதால், அருந்ததி தேசத் துரோகக் குற்றம் புரிந்தார் என்று இந்திய அரசு சொல்கிறது.

சட்டிஸ்கரில் மலைவாழ் மக்கள் உரிமை களுக்காக போராடியதற்காக மாவோயிஸ்ட் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வினாயக் சென். உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்புக்களுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டார்.

ஊழல் ராசாக்கள் எல்லாம் சுதந்திரமாக உலா வரும் நாட்டில் ஜனநாயகம் விரும்புவோர் சிறை வாசத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஈக்வடாரில் மக்கள் சார்பு பொருளாதார சீர்திருத்தங்களை அமலாக்கி வருகிறார் அதிபர் ரஃபேல் கோரியா. அவர் கொண்டு வந்த புதிய சட்டம் ஒன்று தமது வருமானத்தை பாதிப்பதாக எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை யினர் அவரை ராணுவ மருத்துவமனையில் சிறை வைத்த போது, பாப்லோ நெருடாவின் பிரபலமான வரிகளை நினைவு கூர்ந்தார்:

நீங்கள் பூக்கள் அனைத்தையும் வெட்டிவிடலாம்!

ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது!!

Search