‘தமிழகத்தின் ஒரு குடும்பம் வாழ
மற்ற எல்லாக் குடும்பங்களும் துன்பப்பட வேண்டுமா?’
©¬dLôp ùRô¯Xô[o ÏÓmTj §Ú®Zô®u TpúYß ¨LrÜL°p JÚ Ød¡VUô] AeLm L[BnÜ. L[Bn®tLôL áPÛôo FWôh£«p Es[ 10 YôoÓLs úRokùRÓdLlThP]. JqùYôÚ Yôo¥Ûm Ïû\kRThNm 10 ùRô¯Xô[oLs Bn®p TeùLÓlTÕ G] Ø¥Ü ùNnVlThPÕ. 4BYÕ Yôo¥p SPkR Bn®u A¥lTûP«p Tϧ UdLs Yôr¨ûX ùRôPoTô] £X AmNeLs CeÏ RWlTÓ¡u\].
4ஆவது வார்டில் நடந்த ஆய்வில் 6 பேர் முதல் 13 பேர் வரை 5 நாட்கள் ஈடுபட்டனர். தோழர்கள் மு.ஜெயப்பிரகாஷ்நாராயணன் ஆர்.நாகராஜன் இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கினர்.
302 குடும்பங்கள் ஆய்விற்குட்படுத்தப் பட்டன. 1104 பேர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களில் 381 பேர் தொழிலாளர்கள்; 28 பேர் சுயதொழில் செய்பவர்கள்; 395 பேர் வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள், வயதான வர்கள் மற்றும் குழந்தைகள்; 300 பேர் எல்கேஜி முதல் எம்பிஏ வரை படிக்கும் மாணவர்கள்.
தொழிலாளர்கள்: தொழிலாளர்களில் 292 பேர் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள். இவர்கள் பிரிக்கால் , எல்எம்டபுள்யூ, சால்ஜர், சர்வால், டெக்ஸ்மோ, சுபா பிளாஸ்டிக்ஸ், நுôற்பாலைகளில் வேலை செய்யக்கூடிய நிரந்தர மற்றும் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள். அரசு ஊழியர், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்பவர்கள் என இவர்களில் நிரந்தர தொழிலாளர்கள் 184 பேர்.
தற்காலிக தொழிலாளர்கள் 108 பேர். இவர்களில் பலர் நுôற்பாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள். ஆலைகள் மூடப்பட்டதால், இப்போது தினக்கூலியாக வேறுவேறு ஆலைகளுக்கு சென்றுகொண்டு இருப்பவர்கள். பலர் எல்எம்டபுள்யூ போன்ற ஆலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள். பிறர் வேறு சிறிய ஆலைகளில் சராசரி 150 முதல் 200 ரூபாய் தினக்கூலி பெறுபவர்கள். கட்டுமான தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்கள் 89 பேர் பகுதியில் உள்ளனர்.
குடியிருப்பு: 302 குடும்பங்களில் 172 குடும்பங்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் 130 குடும்பங்கள். சொந்தவீடு உள்ளவர்களில் பலர் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் குறைந்த பட்சம் 1000 முதல் 3000 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.
கடன்: 302 குடும்பங்களில் கடன் இல்லை என்று சொன்னவர்கள் 131 பேர். 5000 முதல் 50,000 ரூபாய் வரை கடன் உள்ளவர்கள் 28 பேர்; ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் உள்ளவர்கள் 35 பேர்; ரூ.1,00,000 முதல் ரூ.10,00,000 வரை 108 பேர்; ரூ.50,000த்திற்குக் கீழ் கடன் உள்ளவர்கள் பெரும்பாலும் தற்காலிக மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கள். இவர்களில் சிலர், கந்துவட்டி கடனில் சிக்கியுள்ளனர்.
கட்டுமான வேலை செய்யும் பெண் தொழிலாளியிடம் கடன் எவ்வளவு என்று கேட்டபோது, அவர் கண்ணீர் வடித்துவிட்டார். அவர் கணவர் 6 மாதங்கள் முன் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் வாகன ஓட்டுநராக இருந்தவர். ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியவர்கள் வீடு, திருமணம் ஆகிய செலவுகளுக்கு கடன்பட்டவர்கள். இவர்களில் ஒருசிலர் தனியாரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தாலும் பெருமளவில் வங்கிக் கடனே அதிகம்.
மூடிய நுôற்பாலைகளில் வேலை செய்து கணக்கு முடிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் சொந்த வீடு கட்டியுள்ளனர். ஆனால், பெருமளவில் கடனில் சிக்கியுள்ளனர். சிலர் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்கின்றனர். பலர் வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
மருத்துவம்: ரூ.10,000க்கும் மேல் குடும்ப வருமானம் கொண்டவர்கள் தனியார் மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். மாதம் ரூ.500 முதல் ரூ.2000 வரை மருத்துவத்துக்கு செலவு செய்கின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை எல்லைக்குள் உள்ள மருத்துவ வசதிக்குள் நின்றுவிடுகிறார் கள். இஎஸ்அய் வசதியுள்ள தொழிலாளர்கள் கூட முதன்மையாக தனியார் மருத்துவ மனையை நம்பியுள்ளனர்.
நலவாரியமும் அமைப்புசாரா தொழிலாளரும்: இந்த வார்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் சிதறலாக உள்ள னர். பெருமளவில் நலவாரியப் பயன்களை அறியாதவர்களாக உள்ளனர். நலவாரியம் பற்றி சொன்னபோது 22 பேர் நலவாரிய அட்டைகள் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.
பொதுவிநியோகம்: உயர் வருமானம் உள்ள சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ரேசன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். 20 கிலோ அரிசி என்று கூறினாலும் ரேசன் கடையில் 10 முதல் 15 கிலோதான் வழங்கப்படுகிறது என்கிறார்கள். இந்த ஆய்வு எல்லைக்குள் ஒரு குடும்பம் மட்டும் 35 கிலோ அரிசிக்கான அட்டை வைத்திருக்கிறது. ரேசன் அரிசி தரம் பற்றிய மேலோங்கிய குரல், ‘தரமற்ற அரிசி’என்பதாக இருந்தது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் 20 கிலோ அரிசி போதாது என்கிறார்கள்.
எல்லா ரேசன் அட்டைகளுக்கும் இலவச அரசு தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்படவில்லை. ரூ.50,00,000 மதிப்புள்ள வீடு உள்ளவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு இல்லாத குடிசையில் வாழ்பவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு: ஏறுகிற விலைவாசியில் எப்படி உங்கள் வருமானத்தில் வாழ்க்கை செலவை சமாளிக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டவுடன், இதுவரை ஆம் அல்லது இல்லை என்ற பாணியில் சொன்னவர்கள் கூட அரசின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
சரவணன் என்பவரைக் கேட்டபோது, ‘எழுதிக் கொள்ளுங்கள் என் பெயரை. ஒரு குடும்பம் வாழ மற்ற எல்லாக் குடும்பங்களும் துன்பப்பட வேண்டுமா? ஒரு குடும்பம் என்று நான் கருணாநிதி குடும்பத்தைத்தான் குறிப்பிடுகிறேன்’ என்றார். பலர், இப்படியே இருந்தால் வரும் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றனர்.
அடிப்படை வசதிகள்: குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற விவரங்களைக் கேட்ட போது அரசிற்கு எதிராகவும் உள்ளாட்சித் துறை நிர்வாகத்திற்கெதிராகவும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இங்கு பேரூராட்சி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்குகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை உப்பு தண்ணீர் கிடைக்கிறது. புதிய குழாய் இணைப்புகள் மறுக்கப்படுகின்றன. குடிநீர் இணைப்பு வசதி கிடைத்த சிலர் குடிநீரை சேமித்து வைக்க தொட்டி வசதி இருப்பதால் தப்பித்துள்ளனர்.
அந்த வசதியில்லாதவர்களுக்கும் பொதுக் குழாயை பயன்படுத்துபவர்களுக்கும் குடிநீர் என்பது படுதிண்டாட்டமே. பாதிக்கப்பட்டோர் வாழும் பகுதியில் தெருவிளக்குகளும் சாலை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டுமா என்று கேட்டதற்கு மாற்றித்தான் ஆக வேண்டுமென்றனர். ஆய்வுக் குழுவினரை அவர்கள் துயரத்தை, சீற்றத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகப் பார்த்தனர்; இவற்றை எல்லாம் கேட்க சிலர் உள்ளனர் என்று ஆறுதல் பெற்றனர்.
விலை உயர்வுக்கெதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து நடந்த கள ஆய்வு மக்கள் மத்தியில் பிரிக்கால் தொழிலாளர் பற்றிய கூடுதல் பரிச்சயம் உருவாக்கியுள்ளது.
மக்கள் மாற்றத்திற்கு தயாராக இருக்கின்றனர். ஆய்வுக் குழுவினரும், மாற்று சக்தியாக மாற்றத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர்.
(பிற வார்டுகளில் நடந்த ஆய்வு விவரங்க ளுடன் இறுதி அறிக்கை வெளியிடப்படும்)