COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

தொழில்துறை வேலை வாய்ப்பும்



பெண் தொழிலாளர்களும்
 
மொத்த தொழிலாளர்களில் பெண் தொழிலாளர் எண்ணிக்கையை, தொழிற்சாலையில் பணி புரியும் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை பிரதிபலிப்பதில்லை. பெண்கள் வீட்டுச் சிறையில் இருந்து விடுபட்டு வேலைக்கு வந்தாலும் அவர்களில் மிகச் சிலருக்கே தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கிறது.


பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் சேவைத் துறை அல்லது சுயதொழிலில் உள்ள ‘இழிவான’ வேலைகள் அல்லது ‘திறமை குறைவாக தேவைப்படும்’ வேலைகளுக்கே விரட்டப்படுகின்றனர்.

சேவைத் துறையிலும் பால்ரீதியான பாகுபாடு இருக்கிறது. தொழில் துறையில் பால்ரீதியான வேலைப் பிரிவினை இருக்கிறது. இதனால் தொழில் துறையிலும் பெண் தொழிலாளர்கள் மிகச் சில குறிப்பிட்ட வேலை களிலேயே சுருக்கி நிறுத்தப்படுகின்றனர்.

பெண்கள் தொழிற்சாலைகளில் கடின மான வேலைகளை செய்ய முடியாது என்றும், அவர்கள் அசெம்பளி அல்லது ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது. புனேயில் பஜாஜ் ஆட்டோ உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில் 30 - 40 சதம் மிஷினிஸ்டுகள் பெண்களே. புனே பெண் தொழிலாளர்கள் லேத்துகளில் வேலை செய்ய முடியும் என்றால் தமிழக பெண் தொழிலாளர்களால் முடியாதா?

ஆக, தொழில்துறை வேலைவாய்ப்பில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதென்றால், பெண் தொழிலாளர்கள் சில குறிப்பிட்ட வேலைகளில் மட்டுமே அமர்த்தப்படுகிறார்கள் என்றால், வேலை யளிப்பவர் மத்தியில், சமூகத்தில் உள்ள இது பற்றிய ஆணாதிக்க அணுகுமுறையே காரணம்.

2004ல் தொழிலாளர் பியூரோ வெளியிட்ட தொழிலாளர் புள்ளிவிவரங்கள் 2008 சொல்வது படி, தமிழ்நாட்டில் 34,535 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் இருந்தன. இவற்றில் 25,843 இயங்கின. இவற்றில் 21,430 தொழிற்சாலை பற்றிய விவரங்களை மாநில தொழிலாளர் துறை தந்தது. 21,430 ஆலைகளில் 12,83,000 தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர் களில் 3,59,831 தொழிலாளர்கள் பெண்கள் என்றும் சொன்னது. அதாவது, 2005ல் தொழிற்சாலை வேலைகளில் பெண் தொழி லாளர் வெறும் 28%. என்ஜினியரிங் தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை வெறும் 1.33%தான். இதுபோன்ற ஆலைகளில் கடுமையான ஆள்பற்றாக்குறை இருக்கும் போதும், பெண் தொழிலாளர்கள் இதுபோன்ற வேலைகளுக்கு அமர்த்தப்படுவதில்லை.

கேரளாவில் ஆண்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவிடுவதால், தொழிற்சாலை வேலைவாய்ப்பில் பெண் தொழிலாளர் எண் ணிக்கையே கூடுதல். ஆண் தொழிலாளர்கள் இங்கு 28% மட்டுமே. தனியார் துறையை மட் டும் எடுத்துக்கொண்டால் பெண் தொழிலாளர் எண்ணிக்கை ஆண் தொழிலாளர் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு.

கர்நாடகாவில் தொழிற்சாலை வேலை வாய்ப்பில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை 29%. ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் இது முறையே 8%, 6%. ஆணாதிக்க குஜராத்தில் 3%.

பெண் தொழிலாளர்களுக்கு திறமையான வேலைகளுக்கான படிப்பு இல்லாமல் போவது, பயிற்சி இல்லாமல் போவது, இவற்றுடன் ஆணாதிக்கக் சிந்தனைப் போக்குகள் சேர்ந்து கொண்டு தொழிற்சாலை வேலைவாய்ப்பு களில் இருந்து பெண் தொழிலாளர்களை பெருமளவில் வெளியே, திறமை குறைவான வேலைவாய்ப்புகளில் நிறுத்திவிடுகின்றன.

உதாரணமாக திருபெரும்புதூரில் தோல் பொருட்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 32 தோல் பொருட்கள் ஆலைகள் வந்த பிறகும் ஆள்பற்றாக்குறை காரணமாக உற்பத்தியை இன்னும் துவங்காமல் இருக்கின்றன. ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்ற மின்னணு பொருட்கள் உற்பத்தியில் பெண் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கை யில் இருந்தாலும். தோல் பொருட்கள் உற்பத்திக்கு அவர்கள் வரவில்லை.

தோல் தொடர்பான வேலைகளில் உள்ள நிலப்பிரபுத்துவ தப்பெண்ணம் தலித் அல்லாத பெண் தொழிலாளர்களை இது போன்ற வேலை வாய்ப்புக்களில் இருந்து விலக்கி நிறுத்தக் காரணமாக இருக்கலாம்.

மாதவரம், குரோம்பேட்டை பகுதிகளில் இருப்பது போல் தலித் பெண் தொழிலாளர்கள் இது போன்ற ஆலைகளில் வேலை செய்கின்ற னர். ஆனால் திருபெரும்புதூரில் தலித் பெண் தொழிலாளர்கள் கூட இந்த வேலை வாய்ப்பை நாடாமல் இருப்பதற்கு சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலப்பிரபுத்துவ பின்னணி காரணமாக இருக்கலாம்.

இது விசித்திரமானதாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில், பர்கா அணிந்த இசுலாமிய பெண்கள் கூட, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இதுபோன்ற தொழிற்சாலை வேலைவாய்ப்பில் பெரும் எண்ணிக்கையில் வந்துவிட்டனர். இந்தப் பகுதியில் இதுபோன்ற ஆலைகளை நடத்துகின்ற இசுலாமிய முதலாளிகள், இசுலாமிய பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்பும் விதம், ஒரு கட்டுப்பாடான ஆணாதிக்க வேலைச் சூழலை உருவாக்கியுள்ளனர்.

தொழிற்துறை ஆணாதிக்கப் போக்குகள் சுமங்கலித் திட்டத்தை உருவாக்குவது போல், சாதிரீதியான ஆணாதிக்கம் தலித் பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலை வேலை வாய்ப்பில் இருந்து விலக்கி வைக்கிறதா என்று பார்க்க வேண்டியுள்ளது.

ஆக, கிட்டத்தட்ட பாதி கூலியில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்றாலும், தொழிற்சாலை வேலை வாய்ப்பில் முதலாளிகள் பெண் தொழிலாளர் களை அமர்த்தாமல் இருப்பதற்கு காரணமாக உள்ள ஆழமான ஆணாதிக்கப் போக்குகளை எதிர்த்தாக வேண்டும்.

திறமையை வளர்ப்பது ஒரு பிரச்சனை என்று எடுத்துக்கொண்டாலும், ஆண்களை பயிற்சியாளர்களாக அமர்த்தி வேலையில் ஈடுபடுத்தி பயிற்சி தரும் ஆலைகள் ஏன் பெண்களை பயிற்சியாளர்களாக அமர்த்துவதி ல்லை? திறமையில்லாத ஆண் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என்றால், திறமையில்லாத பெண் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாதா? எல்எம்டபிள்யு போன்ற ஆலைகள் 100 சதம் ஆண்களையே பயிற்சியாளர்களாக எடுத்துக்கொண்டது. 1980களில் பல ஆலைகளில் இதுவே நிலைமை. 1990களில் அய்சிஎஃப் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் கூட ஆண்களைத்தான் பயிற்சி யாளர்களாக அமர்த்தின. பெண்களை எடுத்துக் கொள்ளவில்லை.

தனியார்மயமாகிவிட்ட தொழில்நுட்பக் கல்வியும் பெண்கள் தொழிற்சாலை வேலை வாய்ப்பு பெறுவதற்கு தடையாக உள்ளது. தமிழகத்தில் தொழிலில் முதலீடு அதிகரித்தாலும் அதற்கேற்ப திறன்பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவதில் பின்தங்கிய நிலையே உள்ளது. பெண் தொழிலாளர் திறன் வளர்ப்புக்கான குறிப்பான கொள்கைகள் இல்லை என்றால், பெண் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, ஊதியம் அதிகரிப்பு ஆகியவை முடக்கப்பட்டே இருக்கும்.

1990ல் வேலை வேண்டி பதிவு செய்தவர் கள் எண்ணிக்கை 99.3 லட்சம், 2004ல் இது 106.1 லட்சம் ஆனது. இதே கால கட்டத்தில் வேலை வேண்டி பதிவு செய்த பெண் தொழிலாளர் எண்ணிக்கை 24.6% என்பதில் இருந்து 26.2% என உயர்ந்தது. தமிழ்நாட்டில் வேலை வேண்டி பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒருவர் பெண் தொழிலாளி.

மத்திய தொழிலாளர் அமைச்சகம், வெளியிட்ட வேலை வாய்ப்பு அலுவலக புள்ளிவிவரங்கள் 2006படி, 2005ல் தமிழ்நாட்டில் வேலை கேட்டு பதிவு செய்தவர்கள் 36.8 லட்சம். அப்படியென்றால், கிட்டத்தட்ட 10 லட்சம் பெண்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

ஆணாதிக்க பாகுபாடு பொதுமைப் படுத்தப்பட்டதாக, வேலை அளிப்பவர்கள், அதிகார வர்க்கத்தினர், கொள்கை உருவாக்குபவர்கள், மற்றும் ஆண் தொழிலாளர்கள் மத்தியிலும் கூட நிலவுகின்றன. மூலதனத் துக்கு மலிவான உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மூலதனத்தால் இந்த ஆணாதிக்கத் தடையை தாண்டிச் செல்ல முடியவில்லை. தமிழ்நாடு அதன் நிலப்பிரபுத் துவ மரபுகளில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. ஆனால் அதற்கான பொருளாயத நிலைமைகள் கனிந்துள்ளன.

இந்தக் கட்டத்தை தாண்டி வர வேண்டு மானால், வேலைவாய்ப்பில், பயிற்சி அளிக்கப் படுவதில் பால்ரீதியான பாகுபாட்டில் இருந்து விடுபட வேண்டுமானால், ஆணாதிக்கக் கலாச்சாரத்திற்கு கடுமையான எதிர்த்தாக்குதலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் உட்பட அனைத்து மட்டங்களிலும் ஆணாதிக்க பழமை வாதத்துக்கு எதிரான சக்திவாய்ந்த கருத்தியல் போராட்டமும் அவசியம்.

Search