COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

ÀLôo 2010

பீகார் ஸ்தம்பிக்க வைக்கும் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதிகாரத்தில் இருந்த ஓர் ஆட்சி 85% பெரும்பான்மையுடன் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது உலகெங்கும் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் அரிதான ஒன்றே. இப்போது சட்டமன்ற அரங்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் செயல்படும் பீகாரில் அதுபோன்ற ஒன்று நடந்துள்ளது உண்மையில் குறிப்பிடத்தக்கது.


243 இடங்கள் கொண்ட அவையில், தேஜமு 143ல் இருந்து 206 என தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டுள்ளது. பாஜக பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. விளைவாக மொத்த எதிர்க்கட்சிகளும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெற்றுள்ள இடங்கள் 54ல் இருந்து 22ஆகக் குறைந்துள்ளன. அதன் புதிய கூட்டாளியான லோக் ஜன சக்தி கட்சி, சென்ற முறை தனியாக போட்டியிட்டு 9 இடங்களை வென்றது; இந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவு இருந்தும் 3 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சி அமைப்பது என்ற அறைகூவலு டன் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பீகார் சட்டமன்றத்தில் உறுதியான இடதுசாரி எதிர்க்கட்சியான இகக மாலெவுக்கு, 1990ல் இருந்து முதல்முறையாக சட்டமன்றத்தில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் போகும்.

வளர்ச்சி பற்றிய நிதிஷ்குமாரின் வாக்குறு திக்கு ஆதரவாக ஒரு மேலோங்கிய, அனைத்தும்தழுவிய சமூக நகர்வு இருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. பீகார் லாலு விடமோ, காங்கிரசிடமோ நிச்சயம் பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. கிட்டத் தட்ட ஒரு முழுமையான தேக்க நிலைக்கு வந்துவிட்டது போன்ற ஒரு மாநிலத்தில், ‘சட்டம், ஒழுங்கு’ பாதுகாக்கப்பட்டதன் அறிகுறிகள், மற்றும் மாற்றமும் வளர்ச்சியும் ஓரளவு ஏற்படும் என்ற நம்பிக்கை ஆகியவையே இந்த மிகப் பெரிய சமூக நகர்வை ஏற்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் மேலோங்கியதாக, நீடித்ததாக இருந்த லாலுவின் ‘சமூக நீதி’ ஆட்சியில் புறக்க ணிக்கப்பட்டதாக அல்லது ஒடுக்கப்பட்டதாக உணர்ந்த சமூக அடையாளங்களை எல்லாம் தூண்டிய, சக்தியூட்டிய அதே பழைய சாதிய வடிவமைப்புதான், இந்த நகர்வை முன்தள்ளி யுள்ளது.

நிதிஷ்குமாரின் வளர்ச்சி மாதிரிக்குள் ளேயே இருக்கிற முரண்பாடுகள், முரட்டுத் தனமான யதார்த்தம் மற்றும் முனைப்பான வாய்வீச்சு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் உண்மையில் விசையுடன் மேலெழுந்து வரவேண்டியுள்ளது. வளர்ச்சி என்ற பிரச்சனையிலேயே நிதிஷ்குமாருக்கு சவால் விடுத்த ஒரே கட்சி இகக மாலெதான். அரை - நிலப்பிரபுத்துவ ஒழுங்கை மறுஉறுதி செய்கிற, மலிவான உழைப்பு பீகாரிலும் பீகாரில் இருந்து வெளியேற்றப்பட்டும் விடாமல் சுரண்டப்படுவதை துரிதப்படுத்த, மூடி மறைக்க மட்டுமே ‘வளர்ச்சியை’ பயன்படுத்துகிற மேலோங்கிய நவதாராளவாத மாதிரிக்கு எதிரான, உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள், பீகாருக்குள்ளேயே உற்பத்தி சக்திகளின் அனைத்தும் தழுவிய வளர்ச்சி என்ற நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் மாற்று ஜனநாயக மாதிரி என்ற வளர்ச்சியின் இரண்டு எதிரெதிர் கருத்தாக்கங்கள் மற்றும் மாதிரிகளுக்கு இடையிலான போராட்டத்தின் மீதுதான் மாலெ கட்சியின் தேர்தல் பிரச்சாரம் துணிச்சலுடன் கவனம் குவித்தது. இதுதான் நிச்சயமாக எழுந்து முன்வருகிற போராட்டம்; இந்த மிக முக்கியமான போராட்டத்தின் போக்கில் புரட்சிகர இடதுசாரி தன்னை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

ஊடக ஆய்வாளர்கள் நிதிஷ் குமார் நிகழ்வுப்போக்கின் அளவு மற்றும் அலையில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கின்றனர். ஒடுக்கப் பட்டோர் அரசியலின் இறுதிக் காட்சி என்று சமீப காலம் வரை லாலு விந்தையை கொண்டாடியவர்கள், ‘சாதி’யின் யதார்த் தத்தை கணக்கில் கொள்வதில்லை என்று கம்யூனிஸ்டுகளை சாடியவர்கள், இன்று அரசியலின் புதிய மந்திரம் ‘வளர்ச்சி’ என்று மும்முரமாக போதனை செய்து கொண்டிருக் கிறார்கள். ‘சமூக நீதி மந்திரத்தை’, வர்க்கப் போராட்டத்தின் தர்க்கத்துடனும், சமூக மாற்றம் என்ற பதாகையுடனும் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டார்கள். வர்க்கப் போராட்டத்தின் கடுமையான பாதையில் முன்செல்வதன் மூலம், மக்கள் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் பதாகையை துணிச்சலுடன் உயர்த்திப் பிடிப்பதன் மூலம், வளர்ச்சியின் அரசியல் என்ற நிதிஷ் குமாரின் பெருங்கூச்சலையும் அவர்கள் எதிர்கொள்வார் கள். வளர்ச்சி பற்றிய பீகாரின் உழைக்கும் மக் களின் விரு ப்பங்களின் எழுச்சி உண்மை யானது; அது இப்போது நிதிஷை பரி சோதனைக்கு உட்படுத்தி யுள்ளது.

இகக மாலெயின் தேர்தல் செயல் பாடுகள் பொறுத்த வரை, பிப்ரவரி 2005ல் 6 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெற்று 7 இடங்களில் வெற்றி பெற்றது; இதுவரையிலும் பெற்ற தேர்தல் வெற்றிகளில் இது மிக கூடுதலானது. நவம்பர் 2005ல், கட்சி 2 இடங்களையும் கிட்டத்தட்ட 50,000 வாக்குகளையும் இழந்தது; 5 இடங்களில் வெற்றி பெற்றது; 5,60,000 வாக்குகள் பெற்றது. 2010 தேர்தல்களில், 5 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தாலும் அனைத்து இடங்களையும் இழந்தது. நிதிஷ் நிகழ்வுப் போக்கின் எழுச்சியும் வளர்ச்சியும் அவற்றின் விளைவை ஏற்படுத்தியுள்ளன; கட்சியின் வலுவான பகுதிகளில் கூட வெற்றிபெறும் வாய்ப்பை மழுங்கச் செய்துள்ளன. வளர்ச்சி என்ற பிரச்சனையிலும் எங்கும் மலிந்துள்ள கொள்ளை, எழுந்து வருகிற எதேச்சதிகார ஆட்சி, வெகுமக்கள் முழுமையாக ஏதிலிகளாக்கப்படுவது உட்பட, பீகாரில் எழுந்து வருகிற அதன் அனைத்து சிக்கல் களிலும், கட்சி புதிய ஆட்சியை அம்பலப் படுத்த, எதிர்கொள்ள துவங்கியுள்ளது. கட்சி இப்போது தன் மொத்த துணிச்சலுடனும் உறுதியுடனும் இந்தப் போராட்டத்தை ஆழமாகவும் பரந்து விரிந்ததாகவும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஸ்தம்பிக்க வைக்கும் தேர்தல் முடிவுகளும் ஆரவார பெரும்பான்மைகளும் வெகுமக்கள் போராட் டங்களின் மிகப்பெரிய எழுச்சிகளுக்கு கட்டியம் கூறுபவையாக அமைந்துள்ளன. 1971ல் இந்திரா காந்தியின் கண்கவர் எழுச்சி, 1984ல் ராஜீவ் காந்தியின் அசாதாரண பெரும் பான்மை, 1991ல் தமிழ்நாட்டில் ஜெய லலிதாவின் மிகப்பெரிய வெற்றி, 2006ல் மேற்கு வங்கத்தில் இககமாவின் பெருவெற்றி ஆகியவற்றை நினைவு கூர்ந்தால், வெகுமக்கள் போராட் டங்களின் வெப்பத்தில் பெரும் பான்மைகள் எவ்வளவு துரிதமாக வெறும் காற்றாக மறைந்து போகும் என்று நமக்கு தெரியும். எனவே, 2010 தேர்தல்கள் புரட்சிகர இடதுசாரிகளுக்கு சொல்லும் செய்தி உரத்ததாகவும் தெளிவான தாகவும் உள்ளது:

Search