மார்க்ஸ் 200: படிப்பு வட்டம் மற்றும் கருத்தரங்கம்
ஜுன் 3 அன்று சேலத்தில் மார்க்சிய படிப்பு வட்டம் மார்க்ஸ் 200அய் ஒட்டி ஒரு கருத்தரங்கம் நடத்தியது.
கோவை மார்க்சிய சிந்தனை மன்றத்தின் தோழர் எம்.சி.குமரன் ‘அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ‘19ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிவில் மய்யங்கொண்டிருந்த மார்க்சியம், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்குப் பொருந்துமா?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஜுன் 10 அன்று இதே தலைப்பில் பழனியில் இகக மாலெ நடத்திய மார்க்ஸ் 200 கருத்தரங்கிலும் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். இந்த உரைகளின் தொகுப்பு இங்கு தரப்படுகிறது.
மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஆகக் கூடுதலாக அய்ரோப்பா பற்றியே அறிந்திருந்தார். எழுதினார். அப்படி இருக்க 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கு இன்னமும் மார்க்சியம் எப்படிப் பொருந்தும்?
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை செயலிகள், தேடுபொறிகள், எந்திர மனிதர்கள் நிறைந்துள்ள, நிதி மூலதனமும் ஊக வணிகமும் கொடிகட்டிப் பறக்கிற இன்றைய உலகில், மார்க்சியம் எடுபடுமா?
சாதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்தியாவை, மார்க்ஸ் எவ்வளவு தூரம் அறிந்திருந்தார்? அவரது அய்ரோப்பிய மய்யப் பார்வை இங்கிலாந்தின் காலனி ஆட்சி இந்தியாவில் சாதக விளைவுகளைக் கொண்டு வந்ததாகத்தானே பார்த்தது?
மார்க்சின் பங்களிப்பு தொடர்பாக இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பொருட்களாகவும் சேவைகளாகவும் உள்ள பண்டங்களில், தாயும் தந்தையுமாக, உழைப்பும் இயற்கையும் இருக்கின்றன என வில்லியம் பெட்டி சொன்னதை மார்க்ஸ், ஏற்றுக்கொண்டார். முதலாளித்துவ பொருளுற்பத்தி நடக்கும்போதே லாபம்/உபரி மதிப்பு உருவாகிறது, அவை பண்டங்கள் சந்தையில் பரிமாற்றம் செய்யப்படும்போது ஏற்படுபவை அல்ல என, மார்க்ஸ் நிறுவினார்.
மூலதனச் சொந்தக்காரரிடம் பொருளுற்பத்தி துவங்கும் முன்பே, நிலம் ஆலை எந்திரங்கள், மின்சாரம், மூலப் பொருட்கள் என்ற மதிப்புகள், ஏற்கனவே உள்ளன. இவை மட்டுமே புதிய மதிப்பை உருவாக்காது. இவற்றின் மீது, மானுட உழைப்பு செலுத்தப்படும்போதே, புதிய மதிப்பு உருவாகிறது.
மூலதனச் சொந்தக்காரர், தமது மூலதனம் கொண்டு எப்படி நிலம் இயந்திரம் ஆலை மின்சாரம் மூலப்பொருட்கள் வாங்கினாரோ, அதே போல், அவற்றின் மீது செலுத்த, கூலித் தொழிலாளியின் உழைப்பு சக்தியையும், மூலதனம் கொண்டு வாங்குகிறார். பழைய நிலவுகிற மதிப்புக்கள் மீது உழைப்பு செலுத்தப்படு கிறது. புது மதிப்பு உருவாகிறது. நிலம் + ஆலை + மின்சாரம் + இயந்திரம் + மூலப் பொருட்கள் ரூ.1000 என்றால், தொழிலாளி உழைத்த பிறகு ரூ.1100 மதிப்புள்ள உற்பத்திப் பொருள் வருகிறது. உழைப்பு உருவாக்கிய புதிய மதிப்பு ரூ.100. ஆனால் உழைப்பு சக்திக்கு கூலியாகத் தரப்படுவது ரூ.20 என்றால், உபரி மதிப்பு/லாபம் ரூ.80. இதிலிருந்து, மூலதனத் திரட்சி உருவாகிறது.
கூலி உயர லாபம் குறையும். கூலி குறைய லாபம் உயரும். அதனால் மூலதனம் கூடுதலாகத் திரள, கூலி குறைத்து வைக்கப்பட வேண்டும்.
வேலையின்மை நிலவுவது, கூலியைக் குறைத்து வைக்க உதவும். ஆகவே வேலையின்மை, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோல், முன் நிபந்தனையாகும். மக்கள் தேவைகளுக்காக, அல்லாமல், சந்தைக்காக, லாபத்திற்காக, உற்பத்தி நடக்கிறது. இதில் இருந்து மூலதனத் திரட்சி வருகிறது. திரட்சிக்கான திரட்சி. இங்கே மனிதர்கள், அவர்கள் தேவைகள் விருப்பங்கள் ஒரு பொருட்டே அல்ல. பொருளுற்பத்தியின் மூலம் மட்டும் அல்லாமல், கருவூலக் கொள்ளை மூலம், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், கனிம வளங்கள் என வளங்களைப் பரித்தெடுத்தலின் மூலமான திரட்சிதான், சமகால யதார்த்தம். ஆக, திரட்சிக்காக திரட்சி என்ற முதலாளித்துவ சமூகத்தைச் செலுத்தும் விதி, அந்த விதி செயல்படுகிற முதலாளித்துவ உறவுகள் நிலைமைகளின் அடிப்படைகள், ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, அய்க்கிய அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா என அனைத்து கண்டங்களுக்கும், 19, 20, 21ஆம் நூற்றாண்டுகளுக்கும் பொதுவானவைதானே? அப்படி இருக்க 19ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் உருவான மார்க்சியம், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் நிச்சயம் பொருந்தும்.
மூலதனத் திரட்சியை நோக்கிய குறை கூலியால், மக்களின் வாங்கும் சக்தி அடிவாங்குகிறது. முதலாளித்துவ நெருக்கடிகள் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. முதலீடு செய்வதற்கான மூலதனம், தான் செயல்பட இடம் தேடினால், பொருளுற்பத்தித் துறைகள் கிடைப்பதில்லை. அதனால், சூதாடுகிறது. ஊக வணிகம் செய்கிறது. நிதி மூலதனம் பல்கிப் பெருகி, உற்பத்தி சார் மூலதனத்தை தனது மெலிந்த மிகச் சிறிய நிழலாக்கி விடுகிறது. மூலதன ஏற்றுமதிக்காக, உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்காக, மூலப் பொருட்கள் பெறுவதற்காக, ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்டுள்ள உலகை, ஏகபோகம் மற்றும் நிதி மூலதனத்துடன் ஏகாதிபத்தியமாய் மாற்றியுள்ள முதலாளித்துவம், மறு பங்கீடு செய்யப் பார்க்கிறது. விளைவு, போர் தவிர்க்க முடியாததாகிறது. லாப வெறியில் நிதானமிழந்து இயற்கையின் சம நிலையைக் குலைத்து, புவி வெப்பமயமாக்கல் மூலம் உலகை அழிவின் விளிம்பில் நிறுத்தி உள்ளது. இவைதான் 21ஆம் நூற்றாண்டில் நேர்ந்துள்ள மாற்றங்கள். இவை, முதலாளித்துவத்தின் அடிப்படை இயல்புக்கு, புறம்பானவை அல்ல.
கணினிகள், செயலிகள், தேடுபொறிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதர்கள் என்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தனி உடைமை சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி என்ற உறவுக்குள் செயல்பட்டு, செல்வ, வருமான ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கத்தான் பயன்படு கின்றன. நவீன தொழில்நுட்பம், தன் அளவில், முதலாளித்துவத்தை பலப்படுத்துமே ஒழிய பலவீனப்படுத்தாது. எல்லன் மெய்ஸ்கின் உட் என்ற தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளர், முதலாளித்துவத்தின் உற்பத்தி ஆற்றலுக்கும், குறை கூலி பெறுகிற, வாங்கும் சக்தியே இல்லாத, வாங்கும் சக்தி குறைவாக உள்ள முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் என்ற யதார்த்தத்துக்கும் இடையிலான முரண்பாடு சமகால உலகை இயக்குகிறது எனச் சொன்னது 21ஆம் நூற்றாண்டுக்கு நன்கு பொருந்தும். மானுடத் தேவைகளை நிறைவு செய்யும் முதல ôளித்துவ ஆற்றல், குறை கூலி யதார்த்தத்தால் முடக்கப்படுகிறது. இங்கேதான், திரும்பவும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள உற்பத்தி உறவுகளைத் தகர்ப்பதே புரட்சி என்ற மார்க்ஸ், நம் கவனத்தில் வருகிறார்.
மார்க்ஸ் இந்தியாவில் நிலவிய காலனியாதிக்கம் பற்றி சாதகமான மதிப்பீடு கொண்டிருந்ததாகச் சொல்வது சரி அல்ல. அவரைப் பொறுத்தவரை, இங்கிலாந்து, இந்தியாவின் முழு அமைப்பையும் சின்னாபின்னமாக்கி விட்டது. புத்தமைப்புக்கான அறிகுறி ஏதும் இதுவரை தோன்றவில்லை. புதிய உலகத்தைப் பெறாது, பழைய உலகத்தை இழந்து நிற்கும் இந்த நிலை, பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ள இந்துஸ்தானத்தை, அதன் பண்டைய மரபுகள் அனைத்தில் இருந்தும் கடந்த கால வரலாறு முழுவதிலும் இருந்தும் துண்டித்துவிடுகிறது. இந்த மதிப்பீட்டில் எங்கே வந்தது, இங்கிலாந்து ஆட்சி பற்றிய சாதகமான மதிப்பீடு? கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளிலிருந்து வளர்ச்சியின் அமிர்தம் பருகப்படுகிறது என மார்க்ஸ் சொன்னதுதானே, 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் நடக்கிறது.
சித்தாந்தவாதிகள் உலகை வியாக்கியானம் செய்தபோது மார்க்ஸ் உலகை மாற்றி அமைக்க கருத்தளவிலும் களத்திலும் போராடினார். பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, இந்தியாவில் உள்ள நகர்ப்புற நாட்டுப்புற தொழிலாளர்கள், விவசாயிகள் மேல் அழுத்தும் சுமையாக அமர்ந்துள்ள விவசாய நெருக்கடி, வேலையின்மை என்ற இரட்டை நுகத்தடியை வீசியெறிய, முதலாளித்துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல் வெல்வது மிக மிக முக்கியமானதாகும். மார்க்ஸ் 200ல் கார்ப்பரேட் மதவெறி பாசிசம் வீழ்த்த, மக்கள் இந்தியா படைக்க உறுதியேற்போம்.