நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை கோரி கந்தர்வகோட்டையில் முற்றுகை
ஜுன் 8 அன்று கந்தர்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தை இகக மாலெ, அவிகிதொச தலைமையில் முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வேண்டும் என்று கோரி விண்ணப்பங்கள் அளித்தார்கள்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற வறியர்வர்கள் 22,132 பேருக்கு நூறு நாள் வேலைத் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த ஓராண்டாக வேலை வழங்கப்படவில்லை என்று அரசு அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். அதற்கு முன்பு நடந்த வேலைகளுக்கும் ஜனவரி மாதம்தான் கூலி கொடுத்து முடித்ததாகவும் ஒப்புக்கொள்கின்றனர். வேலை செய்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் கூலி தரப்படவில்லை என்றால் 0.05% வட்டியும் சேர்த்துத் தரப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இது வரை எந்த கூலி பாக்கியும் தாமதமான காலத்துக்கான வட்டியுடன் தரப்பட்டதில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய தேதியில் கூலி பாக்கி இல்லை என்பது மட்டுமே ஆறுதல் தரும் விசயம்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த பட்ச கூலி நாளொன்றுக்கு ரூ.224 என உயர்த்தப்பட்டுள்ளதையும் இககமாலெ தோழர்கள் குறிப்பிட்ட பிறகே, அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
இந்தப் பின்னணியில்தான், ஏப்ரல் 24 அன்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சி இயக்ககம், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தின்படி, 65% தூர் வாரும் பணிகள் வேலை உறுதித் திட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கென நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.47,57,05,080 முறையாக செலவிடப்பட்டு கிராமப்புற தொழிலாளர்க ளுக்கு வேலையும் சட்டப்படியான குறைந்த பட்ச கூலி ரூ.224ம் தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கிராமப்புற தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும் என்றும், காலதாமதமானால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 15 நாட்களுக்குள் வேலை தரப்படவில்லை என்றால், சட்டப்படி தர வேண்டிய இழப்பீடான 25% கூலி தர வேண்டும் என்றும் முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ஒன்றிய அலுவலர், தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு, ஜ÷ன் 18 முதல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை தரப்படும் என உறுதியளித்தார். ஜ÷ன் 14ல் இருந்தே வேலைகள் துவங்கி, கிராமம்கிராம மாக விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை தரப்படுகிறது. ஜ÷ன் 8 அன்று விண்ணப்பம் கொடுத்த 600 பேருக்கு முதலில் வேலை தர அரசு நிர்வாகம் துவங்கியுள்ளது. விண்ணப்பம் தராத மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலை தர வேண்டும் என்று இகக மாலெ, அவிகிதொச தரப்பில் ஒன்றிய அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓராண்டு காலமாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை அளிக்கப்படவில்லை என்று அரசு அதிகாரிகளே ஒப்புக்கொள்கிற நிலையில், நூறு நாள் வேலைத் திட்ட இணை யதளத்தில், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஏப்ரல் 1 முதல் 3,814 பேருக்கு 38,241 மனித நாட்கள் வேலையும் சராசரியாக ரூ.185 கூலி யும் தரப்பட்டுள்ளதாகவும் ரூ.1.25 கோடி செலவிடப்பட்டு ரூ.81 லட்சம் அளவுக்கு கூலி தரப்பட்டுள்ளதாகவும் 15 நாட்களுக்குள்ளாகவே 100% கூலி தரப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வேலை அட்டைகள் எண்ணிக்கையும் ஒன்றிய அலுவலர் தரும் எண்ணிக்கையில் இருந்து வேறுபடுகிறது. ஒன்றிய அலுவலர் 22,132 அட்டைகள் இருப்பதாகச் சொல்கிறார். இணையதளம் 17,664 என்று சொல்கிறது. (வேலை அட்டைகளை குறைத்துக் காட்டினால், கூடுதல் மனித நாட்கள் வேலை தந்ததாகக் காட்ட முடியுமோ?)
நூறு நாள் வேலைத் திட்ட இணைய தளத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் நடந்திருக்க 100% வாய்ப்புகள் உண்டு. கழிப்பறைகள் கட்டும் பணி நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ்தான் செய்யப்படுகிறது. தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் வேலைகளில் ஈடுபட்டவர்கள் அட்டைகளில் வேலை நடந்த நாட்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ததாக பதிவு செய்து கூலி வழங்கியிருக்க முடியும். கழிப்பறையும் கட்டியதாகவும் வேலை உறுதியும் தந்ததாக வும் சொல்ல முடியும். (நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியின் தோல்விக்கு அடையாளம் என்று சொன்ன மோடி, தூய்மை இந்தியா திட்ட வெற்றியுடன் இந்த வேலைகளைச் சேர்த்துக் கணக்கு சொல்வதில் எந்த கூச்சமும் காட்ட மாட்டார்).
இது தவிர இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்ட வேலைகளும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் செய்யப்படுகின்றன. இந்த வேலைகளில் ஈடுபடுபவர்களையும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ததாக கணக்கு காட்ட முடியும். மாட்டு கொட்டகை, ஆட்டுக் கொட்டகை, கோழிக் கொட்டகை கட்டுவது போன்ற தனிநபர் பயன் பெறும் திட்டங்களில் நடக்கும் வேலைகளும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வருகின்றன.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பெரும் திரளாக வேலை கேட்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை தராமல், பசுமை வழிச் சாலை போல்லல்லாது, தூர் வாருதல், ஏரி, குளங்களை புனரமைத்தல், நீராதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கபூர்வமான வேலைகள் நடக்காமல், மத்திய அரசு பெருமை பேசுகிற திட்டங்களில் அங்குமிங்கும் மிகச் சிலருக்கு வேலை வாய்ப்பு என்பதாக முடித்து விட வாய்ப்புள்ளது. விவசாயத்துக்கும் குடிக்கவும் தண்ணீர் பஞ்சம் விரட்டுகிற தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 65% பணிகள் விவசாயம் தொடர்புடைய பணிகளாக இருக்க வேண்டும் என்று சொல்லும் ஊராட்சி வளர்ச்சி இயக்கக ஏப்ரல் 24 தேதிய கடிதம் பொருத்தமாக அமலாக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
கிராமப்புற தொழிலாளர்கள் அமைப்பாகி ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் என குரல் எழுப்பினால் மட்டுமே திட்டத்தின் உண்மையான நோக்கம் அமல்படுத்தப்படும் என்று கந்தர்வகோட்டை விவசாயத் தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் காட்டுகிறது.
எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என்று சொல்லும் சங் பரிவார் கூட்டம் இதைச் சற்று கவனிக்க வேண்டும். சட்டப்படிச் சொல்லப்பட்டுள்ள அடிப்படை வாழ்வாதார உரிமை ஒன்றை பெற வேண்டுமானாலும் தமிழ்நாட்டில், மோடியின் இந்தியாவில் போராட்டக் குரல் எழுப்பியாக வேண்டும். அப்போதுதான் சாதாரணமான வாழ்க்கை கூட சாத்தியம். மோடியின் பிட்னஸ், 56 இன்ச் எல்லாம் சேர்ந்திருந்தாலும், இந்திய வறிய மக்களுக்கு அவர் தந்த நல்ஆளுகை, நல்ல காலம் இவ்வளவுதான்.