ஏழை என்றால்
உயிர் வாழக் கூடாதா....?
நல்ல காலம் வந்துவிட்டது என்று சொல்பவர்களும் அம்மா ஆட்சி தருவதாகச் சொல்பவர்களும் மக்கள் விரோத நடவடிக்கைகள்,
ஒடுக் முறை, குற்றமய அலட்சியம் என்ற தங்களது ஆட்சி முறையை சற்றும் மாற்றாமல் மறுபுறம் சற்றும் அசராமல் வெற்று அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று மட்டும்தான் இன்னும் அவர்கள் சொல்ல வேண்டும்.
விவசாய நெருக்கடி மேலும் மேலும் தீவிரமாகும்போது, இந்த வெற்று அறிவிப்புகளிலும் விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் என்ற ஒரு பிரிவுக்கான திட்டங்கள் இடம் பெறுவதில்லை. நூறு நாள் வேலைத் திட்டம் ஊழல் திட்டமாக, ஏட்டில் மட்டும் சுருங்கிவிடும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
விவசாய நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கின்றன என்று நேரில் கண்டறிய, தோழர்கள் இளங்கோவன், மருது, தமிழ்ச்செல்வன், ராகுல், மஞ்சுளா ஆகியோர் கொண்ட இககமாலெ குழு கொள்ளிடம் ஒன்றியத்தின் திருமுல்லைவாசல் ஊராட்சியில் உள்ள தாழந்தொண்டி, தாண்டவன்குளம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர், சீர்காழி ஒன்றியத்தின் நெம்மேலி ஆகிய கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து உரையாடியது.
திருமுல்லைவாசல் கிராமத்தில் மொத்த மக்கள் தொகை 13,745. இவர்களில் 1,503 பேர் தலித்துகள். மொத்த மக்கள் தொகையில் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் 4,873 பேர். பிரதான வேலைகள், 6 மாதங்களுக்கும் மேல், செய்பவர்கள் 3,970. இவர்களில் பெண்கள் இல்லை. 6 மாதங்களுக்கும் குறைவாக ஓரஞ்சார வேலை செய்பவர்கள் 903 பேர். ஆண்கள் 413. பெண்கள் 490.
தாண்டவன்குளம் கிராமத்தில் மொத்த மக்கள் தொகை 5,040. இவர்களில் 1,510 பேர் தலித்துகள். மொத்த மக்கள் தொகையில் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் 2,334 பேர். பிரதான வேலைகள், 6 மாதங்களுக்கும் மேல், செய்பவர்கள் 1,153. இவர்களில் பெண்கள் இல்லை. 6 மாதங்களுக்கும் குறைவாக ஓரஞ்சார வேலை செய்பவர்கள் 1,181 பேர். ஆண்கள் 674. பெண்கள் 507.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரும் இந்த விவரங்களில் இருந்து ‘பிரதான’ வேலை, செய்பவர்கள் யார், ‘ஓரஞ்சார’ வேலை செய்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
வறுமை தாண்டவத்தின் சீற்றத்தில் சிக்கியுள்ள இந்த ஓரஞ்சார வேலை செய்பவர்களுடன் ஜ÷ன் 18 - 20 தேதிகளில் இகக மாலெ குழு உரையாடல் நடத்தியது.
இவர்களில் மிகச்சில குடும்பங்கள் தவிர மற்றவை குடிசை வீடுகளில் வசிக்கின்றன. அரசு திட்டங்களில் கட்டப்பட்ட சில கான்கிரீட் வீடுகளும் அரைகுறையாய் நிற்கின்றன. தனி நபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் சில வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தண்ணீர் வசதியில்லை. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை சராசரியாக 5 என்று வைத்துக் கொள்ளலாம். மூன்று பேர் முதல் எட்டு பேர் வரை உள்ள குடும்பங்கள் ஒரே குடிசையில் வசிக்கின்றன. மின்இணைப்பு, தொலைக்காட்சி, கேபிள் இணைப்பு எல்லா குடிசைகளிலும் உள்ளன. சமையல் எரிவாயு இணைப்பு பெரும்பாலான வீடுகளில் உள்ளன. எல்லா குடும்பங்களுக்கும் மாதமொன்றில் 15 கிலோ முதல் 20 கிலோ வரை விலையில்லா அரிசி கிடைக்கிறது.
இந்த நிலைமைகளை கிட்டத்தட்ட பொதுவான நிலைமைகளாகக் கொள்ளலாம். இதற்கு மேல் என்ன வேண்டும் என்றுதான் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். இந்த நிலைமைகள் மட்டும் இருந்தால், இந்தக் கேள்வியை கேட்பவர்கள் இருந்துவிடுவார்களா என்ற எதிர்கேள்வி நம்மிடம் இருக்கிறது. ஆயினும் ஆட்சியாளர்கள் கேட்கும் கேள்வியை அவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். கிட்டத்தட்ட ஒரே பதில் வந்தது: வேலை வேண்டும்.
விவசாயம் இல்லை. எனவே விவசாய வேலைகள் இல்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் 2017 தீபாவளி சமயத்தில் ஒரு வாரம் வேலை தரப்பட்டதாகவும் அதற்கு முன்பு பல மாதங்களும் அதற்குப் பிறகும் நூறு நாள் திட்ட வேலை தரப்படவில்லை என்றும் சொல்கின்றனர்.
என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் மிகவும் இயல்பாக விவசாய வேலைகள் என்று சொல்கிறார்கள். என்ன விவசாய வேலை என்று அடுத்து கேட்கும்போதுதான் எங்கே விவசாய வேலை கிடைக்கிறது என்று சீற்றமும் துன்பமும் கலந்த குரலில் பதில் கேள்வி கேட்கிறார்கள்.
திருமுல்லைவாசல் தலித் குடியிருப்பில் உள்ள ஏழு தெருக்களில், இரண்டு தெருக்கள் மேல்புறத்திலும் அய்ந்து தெருக்கள் கீழ்புறத்திலும் உள்ளன. கீழ்புறத்தில், முதலில் பார்த்த தெருவில், குடிசைகளுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களிடம் குடும்ப வருமானம் பற்றி கேட்கத் துவங்கினோம்.
இந்தத் தெருவில் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி, பல் மருத்துவமனையில் தொழில்நுட்பப் பணி, அரசு மருத்துவ மனையில் துப்புரவு பணி, சத்துணவு கூடத்தில் பணி, நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணி தளப் பொறுப்பாளர் பணி, ரேசன் கடை உதவி யாளர் பணி என சில குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு இருந்தது. ரூ.10,000 முதல் ரூ.14,000 வரை மாத வருமானம் இருப்பதாகச் சொன்னார்கள். இந்தக் குடும்பங்கள் அந்தப் பகுதியைப் பொறுத்தவரை வசதி படைத்த குடும்பங்களாக தங்களைத் தாங்களே கருதிக் கொள்கிறார்கள். இந்த வருமானம் பற்றி வெளியில் சொன்னால் அது பறிபோய்விடும் என்பது போல் அது பற்றி பேச தயங்குகிறார்கள்.
அந்தத் தெருவில் உள்ள பிற குடும்பங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக கடமை நிறைவேற்றும் முகவராக ஒரு பெண், சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் செவிலியராக ஒரு பெண் என்று ஓரளவு மாத வருமானம் இருந்த குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. வழக்கறிஞர் ஒருவர் இருந்தார்.
இவர்கள் தவிர இன்னும் ஒரு 21 குடும்பங்களிடம் பேசியபோது, ஆண், பெண் இருவரும் கட்டுமான வேலைகளுக்குச் செல்வது தெரிய வந்தது. மாதத்தில் ஆளுக்கு 10 முதல் 15 நாட்கள் வேலை இருக்கும் என்று சொல்கிறார்கள். ரூ.300 முதல் ரூ.700 வரை கூலி கிடைக்கும் என்கிறார்கள். சராசரியாக அதிகபட்சமாக ரூ.1,000 என்று வைத்துக்கொண்டாலும், மாதம் ரூ.15,000 வருமானம் வருகிறது. சென்னை போன்ற இடங்களிலேயே கட்டுமானப் பணிகளில் மாதம் முழுவதும் வேலை கிடைப்பது இல்லை. இவர்கள் சொல்வதில் ஒரு கிராமத்தில் இருந்தே இத்தனை பேர் கட்டுமானப் பணி எனச் செல்லும்போது, அனைவருக்கும் 15 நாட்கள் வேலை கிடைப்பது சாத்தியமில்லை.
டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் குடும்பம் தவிர மற்ற குடும்பங்கள் குடிசை வீடுகளில் குடியிருக்கின்றன. அவர்களை சந்திக்க அவர்கள் வீட்டு வாசலுக்கு வருபவர்களை, மனம் இருந்தாலும், உள்ள வாங்க என்று அழைக்கும் வாய்ப்பை அவர்களுக்குத் தராத குடிசைகள் அவை. (மோடி நடைபயிற்சி செய்வதற்கே அவ்வளவு பெரிய புல்வெளி இருக்கும்போது, உழைத்துப் பிழைக்கும் இவர்கள் ஏன் உச்சிவெயில் நேரத்திலும் தெருவில் உட்கார வேண்டும் என்று கேட்டால் நாம் சமூக விரோதியாகி விடுவோம்).
அய்ந்து பேர் கொண்ட, ரூ.15,000 வரை மாத வருமானம் கொண்ட குடும்பம் கிராமப்புறத்தில் வாழ்ந்து விடலாமே என்று கருதிவிட முடியாதபடி, அவர்கள் வருமானத்தை இரண்டு பெரும் பூதங்கள் பிடுங்கிவிடுகின்றன. தெருவுக்குள் இருக்கக் கூடாது என்று மக்கள் விரட்டிவிட்ட டாஸ்மாக் கடை இன்னும் சற்று நடந்து சென்று வாங்கும் தூரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமான வேலை செய்வதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஆண் வருமானத்தில் டாஸ்மாக்குக்குத்தான் முதல் மரியாதை என்றனர்.
இன்னொரு பூதம் கடன். அவர்களுக்கு நிரந்தரமாக வேலை இல்லை என்றாலும் நிரந்தரமாக கடன் இருக்கிறது. ஆண்டொன்றில் 25 முதல் 30 தேவைகளுக்கு, உறவினர், நண்பர் வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல நேரும். குறைந்தது ரூ.200 அன்பளிப்பு தர வேண்டும். உறவினர் என்றால் செய்முறை இருக்கும். அது அவர்களை கடனில் இழுத்து விடுகிறது. விதிவிலக்கு இல்லாமல் எல்லா குடும்பங்களும் குழு கடன்கள் வாங்கியிருக்கிறார்கள். ஒரு குழுவுடன் கடன் வாங்குவது நிற்பதில்லை. அதிகபட்சமாக மூன்று குழுக்கள் வரை கடன் வாங்குகிறார்கள். வாரத் தவணை கட்டுகிறார்கள். இது சில குடும்பங்களில் ரூ.400 முதல் ரூ.600 வரை வந்து விடுகிறது. மாதம் ரூ.1,600 முதல் ரூ.2,400 வரை அசலும் வட்டியுமாக தவணை கட்டுகிறார்கள். கட்டியே ஆக வேண்டும். குழு கடன் பாக்கி வசூலிக்க வருபவர்கள் கடன் தந்தால்தான் அங்கிருந்து நகர்வார்கள் என்கிறார்கள். கடன் வாங்கியாவது கடன் பாக்கி கட்டி விட வேண்டும். ஒரு கடன் முடிந்தால் அடுத்த கடன் வாங்க ஏதாவது அவசியம் முன் வந்து நிற்கும். திருமணம் போன்ற நிகழ்வுகள் கடன் வாங்கி மட்டுமே நடத்தப்படுகின்றன. திருமணத்துக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என்கின்றனர். கடன் வாங்கிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.
டாஸ்மாக் மற்றும் கடனுக்கான அசல் மற்றும் வட்டி தவணை என்று பெரும்பகுதி அந்த ரூ.15,000ல் போய்விடுகிறது.
இந்த ரூ.15,000, அரசுப் பணி, மாத வருமானம் எல்லாம் இந்த முப்பது வீடுகளில் முடிந்து விடுகிறது. இந்தத் தெருக்களின் எதிர் பக்கம் உள்ள தெருக்கள் வேறு சித்திரம் தருகின்றன. இங்கு ஒரு குடும்பத்தின் வருமானம் மற்றும் செலவு பற்றி சற்று நெருக்கமாக கேட்டபோது வறுமையின் தீவிரம் வெளிப்பட்டது.
இந்த குடும்பத்தில், தாய், தந்தை, மகன், மருமகள், அவர்களது மூன்று குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட மகள் என பெரியவர்கள் அய்ந்து பேர், குழந்தைகள் மூன்று பேர் உள்ளனர்.
இந்த குடும்பத்தில் இரண்டு பேர், தாய் ஒரு வீட்டிலும் மகள் இரண்டு வீடுகளிலும் வீட்டு வேலை செய்து மாதம் ரூ.2,700 பெறுகிறார்கள். ஆண்கள் இருவரும் வேலைக்குச் செல்லவில்லை. வேலை கிடைக்கவும் இல்லை. தாய் இறால் பிடித்து விற்று அதில் ரூ.20 முதல் ரூ.50 வரை நாளொன்றுக்கு கொண்டு வருகிறார். இந்த வருமானத்தை கணக்கில் கொள்ள முடியாது. வரலாம். வராமல் போகலாம். இதில் 10 நாட்களுக்கு ரூ.300 என்று எடுத்துக்கொண்டாலும் 8 பேர் உள்ள இந்த குடும்பத்தின் மாத மொத்த வருமானம் ரூ.3,000. (இது ஒரு வருமானமா?) இதில் மொத்த குடும்பமும் பிழைக்க வேண்டும்.
இவர்களுக்கு நாளொன்றில் குறைந்தபட்சம் என்ன செலவு செய்ய வேண்டியிருக்கும்?
மூன்று பேருக்கு வெற்றிலை பாக்கு பழக்கம் உள்ளது. நாளொன்றுக்கு அதற்கு ரூ.30 வேண்டும். குழந்தைகள் இருப்பதால் காலை தேநீருக்கு பால் பாக்கெட் ரூ.12, தேயிலை பாக்கட் ரூ.2, பிஸ்கெட் ரூ.10 வேண்டும்.
இந்த குடும்பத்துக்கு பரமஏழை அட்டை உள்ளதால் ரேசன் அரிசி 35 கிலோ கிடைக்கும். இது போக, 15 கிலோ வரை வெளிச்சந்தையில் அதே ரேசன் அரிசியை ரூ.17 கொடுத்து வாங்க வேண்டும். பருப்பு, எண்ணெய், உப்பு, புளி, மிளகாய், தேங்காய் எண்ணெய், காய்கறி, குளிக்க, துவைக்க சோப் என இன்னும் ரூ.100 நாளொன்றுக்கு செலவு உண்டு.
அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
இவற்றுக்கு மேல், கேபிள் டிவி, மின்கட்டணம், வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், உறவினர் வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு உடை என கூடுதல் செலவுகள் உள்ளன. குழு கடனுக்கு தவணை செலுத்த வேண்டும்.
இந்த குடும்பத்தில் பெரியவர்கள் இரண்டு வேளைதான் உணவு உண்கிறார்கள். குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவு. அவர்களுக்கும் வீட்டு உணவு இரண்டு வேளைதான்.
குடிசை போன்ற ஒன்று உள்ளது. சமையல் எரிவாயு வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் சொல்கிற விவரங்கள்படி, மாதம் ஒன்றில் குறைந்தபட்ச செலவினங்களுக்கு, அதுவும், இரண்டு வேளை மட்டும் உண்பதற்கு, ரூ.7,000 வேண்டும். ஆனால், அந்த குடும்பத்துக்கு ரூ.3000 வரைதான் வருமானம் உள்ளது. இது இன்னும் சற்று கூடுதலாக ரூ.4,000 போகலாம். ரூ.5,000 என்று கூட வைத்துக் கொள்வோம். எட்டு பேர் கொண்ட குடும்பம் மாதம் ஒன்றில் ரூ.5,000 வருமானம் ஈட்டுகிறது என்றால், சராசரியாக பார்த்தால், ஒரு நபருக்கு ஒரு நாளில் ரூ.20தான் செலவிடப்படுகிறது. இதுவும் மாத வருமானம் ரூ.5,000 என கணக்கிட்டால் மட்டுமே. ரூ.5,000 மாத வருமானம் வரவும் நிச்சயம் வாய்ப்பில்லை. ஆண்டில் ஆறு மாதங்களுக்கும் குறைவான கால வேலை வாய்ப்பு கொண்ட குடும்பங்கள் என்று அரசு கணக்கே சொல்கிறது. அந்த குடும்பத்தின் வாழ்நிலை எப்படி கவுரவமானதாக இருக்க முடியும்?
இந்த நிலைமைகள் பானை சோற்றுக்கு பதம். இந்தத் தெருவிலும் அதற்கு அடுத்த தெருவிலும் உள்ள குடும்பங்களின் வாழ்நிலைமைகள் கிட்டத்தட்ட இதுபோலவே உள்ளன.
இந்தத் தெருவில் இந்திராகாந்தி குடியிருப்பு திட்ட வீடுகள் கட்டத் துவங்கி முடிக்கப்படாமல் உள்ளன. இதற்கு மேல் கட்ட பணமில்லை என்கின்றனர். அந்த அரைகுறை வீட்டுக்குப் பக்கத்தில் குடிசை வீட்டில் குடியிருக்கின்றனர். குடிசைகளில் மண்சுவர்தான் உள்ளது.
இவர்களது வாழ்நிலைமைகள் மேல் என்று கருத வைக்கும் நிலைமைகள் தாண்டவன்குளத்தில் உள்ள தலித் குடியிருப்பில் உள்ளன. இந்தப் பகுதியை அண்ணாநகர் என்று அழைக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணச் சொன்னவர் பெயரில் குடியிருப்பு. அவரது வாரிசுகள் அய்ம்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகும் இறைவனைக் காண்பதில்லை என்று உறுதியாக இருக்கின்றனர். இங்கிருப்பவர்கள் முகங்களில், சொற்களில், வாழ்க்கையில் துயரம்தான் உறைந்து போய் கிடக்கிறது.
இங்கு 74 வீடுகள் உள்ளன. 65 வீடுகளில் இருப்பவர்களிடம் பேச முடிந்தது. முதலில் பார்த்த வீட்டில் குடும்பத் தலைவர் அன்று வேலைக்குப் போயிருந்தார். அன்று மற்றவர்களையெல்லாம் சந்தித்துவிட்டு, இரவு 7 மணிக்கு மீண்டும் அந்த வீட்டுக்கு வந்தபோது, வேலையில் இருந்து திரும்பிய அவர் வீட்டு வாசலில் உணவருந்தி முடித்திருந்தார். மதியம் சாப்பிட்டீர்களா என்று நேரடியாகவே கேட்டபோது இரவில் மட்டும்தான் சாப்பிடுவதாகவும் எப்போதுமே இப்படித்தான் என்றும் சொன்னார். அவருக்கு வயது 55க்கும் மேல் இருக்கும். மிகவும் ஒடிசலான தேகம். எலும்பு மற்றும் தோல். அவ்வளவுதான். மணல் அள்ளும் மாட்டு வண்டி ஓட்டுகிறார். நாள் முடிவில் ரூ.150 கிடைக்கும், வேலை கிடைக்கும்போது செய்துவிட வேண்டும் என்று சொல்கிறார். அவரது மகன் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிதளப் பொறுப்பாளராக இருக்கிறார். சராசரியாக மாதம் ரூ.1,860 வருமானம். இதில் 5 பேர் கொண்ட குடும்பம் ஓட வேண்டும். இந்த வேலை போக பழையாறு வேலை கிடைக்கிற போது மாலை நேரத்தில் சென்று வருவதாகச் சொல்கிறார்.
அது என்ன வேலை? அண்ணாநகரின் மற்ற குடும்பங்களின் நிலை என்ன? வார்த்தைகளில் முழுவதுமாக விளக்குவது சற்று சிரமம் என்றே படுகிறது. அடுத்த இதழில் பார்க்கலாம்..