பசுமையை அழித்து, விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாயிகளை அழித்து, விவசாயத்தை அழித்து பசுமை வழிச்சாலை வேண்டாம்!
எட்டு வழிச்சாலை திட்டம் வரவிருக்கும் செய்தி வெளியானதில் இருந்து விவசாயத்தை, விவசாயிகளை, அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தின் ஆபத்துகள் பற்றி, இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் பற்றி இககமாலெயும் அஇவிமசவும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றன.
இந்த முயற்சிகளின் மய்யமாகச் செயல்படுகிற சேலம் இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் அய்யந்துரை அந்த முயற்சிகள் பற்றி முன்வைத்துள்ள தொகுப்பு இங்கு தரப்படுகிறது. போராட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே, காவல்துறை கெடுபிடிகள் மத்தியில் இந்தக் குறிப்புகளை தீப்பொறி இதழுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
பசுமை வழிச்சாலை வேண்டாம், எங்கள் பிணங்கள் மீதுதான் நீங்கள் அதை போட முடியும் என்று காஞ்சிபுரம் முதல் சேலம் வரை உள்ள விவசாயிகள் உறுதியாகச் சொல்கிறார்கள். இழப்பீடாக தரும் பணத்தில் நான் என்ன செய்வது, எனக்கு விவசாயத்தைத் தவிர வேறென்ன தெரியும், நிலத்துக்குப் பதில் நிலம் தருவார்களா என்று கேட்கிறார்கள். நாங்களா அந்தச் சாலையில் போகப் போகிறோம், எங்கள் விவசாயம்தான் எங்களுக்கு முக்கியம் என்கிறார்கள். பழனிச்சாமியின் காதுகளில் இந்தக் குரல்கள் விழவில்லை. பசுமை வழிச்சாலை வந்தே தீரும் என்று சட்டமன்றத்தில் ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்கிறார்.
பழனிச்சாமியின் உறவினர்கள், சாலைக்கான ஒப்பந்தம் பெற்று ஊழல் செய்துள்ளனர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனை எழுப்புகிறார். கடப்பாரையை விழுங்கிப் பழகியிருப்பதால் அந்தக் கேள்வியும் பழனிச்சாமியை அசைக்கவில்லை. காவிரி, நீட், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற விசயங்களில் உறுதி காட்டாத முதலமைச்சர் இந்த ரூ.10,000 கோடி திட்டத்தை அமலாக்குவதில் மிகவும் உறுதியாக இருப்பதற்கும் இந்தச் சாலை ஒப்பந்தங்களுக்கும் அவற்றை பெறவிருப்பவர்களுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்றும், 277 கி.மீ சாலைக்கு ரூ.10,000 கோடி செலவு எப்படி ஆகும் என்றும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழத் துவங்கிவிட்டபோதும் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
விவசாயிகளை, விவசாயத்தை கடுமையாக பாதிக்கவுள்ள எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவாக சங் பரிவார் கும்பல்கள் கூச்சலிடத் துவங்கிவிட்டனர். அடிமை முதலமைச்சருக்கு இந்த சமிக்ஞை போதும். திட்டம் வேண்டாம் என்று சொன்னாலே, திட்டம் அமலானால் போராடுவோம் என்று சொன்னாலே, நிலம் தர மாட்டேன் என்று சொன்னாலே கைது நடவடிக்கை பாய்கிறது. இந்த அளவுக்கு அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது பழனிச்சாமி அரசு. குறைந்த பட்ச உரிமைகளையும் போராடித்தான் பெற முடியும் என்ற நிலை நிலைத்து, இப்போது, சாதாரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் போராட வேண்டும் என்ற நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கிவிட்டார்கள்.
முதலமைச்சர் உறுதியாக இருக்கும் அளவு, விவசாயிகளும் உறுதியாக இருக்கிறார்கள். திட்டத்துக்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திட்டமிடத் துவங்கிவிட்டார்கள்.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தின நிகழ்ச்சியை ஒட்டி குப்பனூரில் நடந்த தெருமுனைக் கூட்டத்திலும் பூவனூரில் இருந்து நடந்த பேரணியிலும் எட்டு வழிச்சாலையின் ஆபத்துகள் பற்றியும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதாயம் பற்றியும் பேசப்பட்டது.
மே 1 மே தின விழா கொடியேற்று நிகழச்சியில் பருத்திகாட்டில் இருந்து குப்பனூர் வரை 2 கிமீ தூரத்துக்கு பேரணி நடந்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிரான முழக்கங்களுடன் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
மே 7 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஇவிமச சார்பாக எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் தர மறுத்து 150 மனுக்கள் கொடுத்தோம்.
மே 20 அன்று எட்டு வழிச்சாலைக்கு அர சாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளை ஒருங்கிணைக்க ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், மின்னாம்பள்ளி ராமலிங்கபுரம் நிலவாரப்பட்டி, பூலாவரி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நிலம் காக்க போராட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.
மே 28 அன்று சட்டப்படியான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தர 500க்கும் மேற்பட்டோர் அஇவிமச தலைமையில் அணி திரண்டனர். காவல்துறை கெடுபிடிகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து மனு தரப்பட்டது. இககமா தோழர்களும் நமது பேரணி முயற்சியில் இணைந்து கொண்டனர்.
ஜ÷ன் 3 அன்று இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பாதிக்கப்படக் கூடிய விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொது நல வழக்கு தொடரவும் போராட்டங்களில் சட்டப்படியான வேலைகளை முன்னெடுக்கவும், சட்ட ஆலோசனை குழுவும் தொழில்நுட்ப குழுவும் தகவல் தொடர்பு குழுவும் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. 10 ஊராட்சிகளில் பாதயாத்திரை மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
06.06.2018 அன்று ஆச்சங்குட்டப்பட்டியில் நிலம் அளக்கும் நடவடிக்கைகளை பகுதி விவ சாயிகள் ஒன்றுதிரண்டு தடுத்து நிறுத்தினர். அதே நாளில் மாலை 6 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் என அறிவித்தார்கள். முறையான கால அவகாசம், அறிவிப்பு இன்றி திடீரென நடத்தப்படும் கூட்டத்தை ஏற்க முடியாது என கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
ஜுன் 7 அன்று, ஆச்சாங்குட்டப்பட்டியில் திடீரென வந்த அரசு அதிகாரிகள் முகாமிட்டனர். காவல்துறை சார்ந்தவர்கள் 35 பேர் எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளவு எடுத்து கல் போடுவதாக அறிவித்தனர். விவசாயிகள் அனைவருக் கும் தகவல் தெரிவிக்காமல், கூட்டம் நடத்தாமல், அவர்களது எதிர்ப்புக் கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் முட்டுக்கல் போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அந்த முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜுன் 8 அன்று ஆச்சாங்குட்டப்பட்டியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதி காரிகள், காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நிலம் தர மறுத்து வட்டாட்சியரிடம் மனு வழங்கினார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டார்கள்.
தர்மபுரியில் நிலம் தர மறுத்து விவசாயிகள் தந்த மனுக்களுக்கு பதில் தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தருமபுரி இககமா அலுவலகத்தில் தோழர் கள் ஆர்.குழந்தைவேலு, ராமமூர்த்தி, டெல்லி பாபு, அய்யந்துரை, மல்லையா கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. ஜுன் 20 அன்று திருவண்ணாமலையில் 500 ஊழியர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தி, அதில் போராட்டக் குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப் பது என தீர்மானிக்கப்பட்டது.
ஜுன் 9 அன்று அதிகாலை 4 மணிக்கு தோழர் முத்துக்குமார், நாராயணன், கந்தசாமி, பழனியப்பன், வடிவேல், ராஜா ஆகிய தோழர் கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் ரவி மாரியப்பன், ரவிச்சந்திரன், முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சீற்றமுற்ற விவசாயிகள் குடும்பத்தினருடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முறையீடு செய்தனர். 100க்கு மேற்பட்டவர்கள் அம்மாபேட்டை காவல்நிலையத்திலும் 50 பேர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திலும் 100 பேர் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மனு கொடுத்தனர். போராடும் விவசாயிகளை அச்சுறுத்தக் கூடாது என முறையிட்டனர். தோழர் முத்துக்குமார் தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு, தோழர் முத்துக்குமார் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு அந்தப் பகுதியில் நிலம் இருக்கிறது, ஆனால் தோழர் முத்துக்குமாருக்கு அங்கு நிலம் இல்லை, அவர் ஏன் போராட வேண்டும் என அதற்கு காவல் துறை தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.
குள்ளம்பட்டி, உடையாப்பட்டி கிராமங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். எட்டு வழிச் சாலையால் விவசாயிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள், இழப்புகள் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது.
காவல்துறையினர் கிராமம்கிராமமாக நிறுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு, அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் இருப்பதாக தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம், வருவாய் துறை அதிகாரிகளிடம் சுதந்திரமாக தெரிவிக்க முடியாமல் காவல்துறையினரால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் காவல்துறையினர் இதுபோன்ற முயற்சியை கை விட வேண்டும் என்று வலியுறுத்தி, போராட முன்வரும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறை ஏவி அச்சுறுத்தக் கூடாது என வலியுறுத்தி, இகக மாலெ, இகக, இககமா மாவட்டச் செயலாளர்கள் இணைந்து மாவட்ட கண்காணிப்பாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் ஆணையரிடமும் மனு கொடுத்தனர்.
விவசாயிகள் தங்கள் ஆட்சேபணைகளை ஆட்சியரிடம் தெரிவிக்க கடைசி நாளான ஜுன் 14 அன்று விவசாயிகள் பெரும்எண்ணிக்கையில் திரண்டு, நிலம் தர மறுத்து, பசுமையை அழித்து பசுமை வழிச்சாலை வேண்டாம் எனச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர்.