ஜுன் மாத பயணக் குறிப்புகள்
எஸ்.குமாரசாமி
பிரிக்காலில் அறிவிக்கப்படாத அவசரநிலை
கோவை பிரிக்காலில் சம்பள உயர்வு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான புதிய ஒப்பந்தம் 01.07.2018 முதல் கையொப்பம் ஆக வேண்டியுள்ளது.
02.07.2014 ஒப்பந்தப்படி, ஒப்பந்தம் முடிகிற 30.06.2018க்கு 6 மாதங்கள் முன்பாகவே, அடுத்த ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை தரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம், ஒப்பந்தம் முடிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. பிரிக்கால் நிர்வாகம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் உலகில் பல நாடுகளிலும் கால் பரப்பியுள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு பற்றி அதிகம் பேசப்படுகிற இந்த காலங்களில், 29.01.2018 அன்று சங்கம் தந்த கோரிக்கைகளில் ஒப்பந்த தொழிலாளர்கள், மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் மத்தியில் இருந்து 750 பேரை பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரப்பட்டது. (தற்சமயம் 1,500க்கும் குறைவாக நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்). பிரிக்காலில் ஏஅய்சிசிடியு சங்கம் எடுத்த முயற்சியால் 230க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருந்தனர்.
பல பத்தாண்டுகளுக்கு பிறகு நிர்வாகம் கேட்ட உற்பத்தி தருவது, தந்த சம்பளத்தை வாங்கிக் கொள்வது என்ற நிலைமை மாற்றப் பட்டு தொழிலாளர்களின் பெரும்பான்மையினர் செல்வாக்கு கொண்டிருந்த சங்கம் மூலம் சம்பள உயர்வுக்கு வழி செய்த, உற்பத்திக்கு வரம்பு கட்டிய, ஒப்பந்தங்கள் 2012ல் 2014ல் கையொப்பமாயின. எல்லாவற்றுக்கும் மேலாக, 2007ல் இருந்து தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து சுயமரியாதையுடன் இருந்தனர்.
ஏப்ரல் 12 அன்று தமிழ்நாட்டு மக்கள் மோடியை திரும்பிப் போ என துரத்தியதால், மத்திய மாநில அரசுகள், தூத்துக்குடி துவங்கி தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு பெரும் போர் தொடுத்துள்ளன. மக்களின் வாழ்வுரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அதே போல் பிரிக்கால் நிர்வாகம் பெரும்பான்மை தொழிலாளர்க ளோடு, இகக(மாலெ) கட்சி வழி நடத்தும் ஏஅய்சிசிடியு சங்கத்தோடு பேச வேண்டிய நிலைமை வந்தது, தனக்கொரு பெரிய கவுரவக் குறைவு எனக் கருதியது. தொழிலாளர்களை தண்டிக்க வேண்டும், சங்கத்தை விரட்ட வேண்டும், தொழிற்சாலைக்குள் பீஸ் ரேட் முறையை கொண்டு வர வேண்டும் என காத்துக் கொண்டிருந்தது.
முதலில் 02.08.2014ல் சங்கத்தோடு ஒப்பந்தம் போட்ட அதிகாரிகள் வெறியேறுவதை நிர்வாகம் உறுதி செய்து கொண்டது. 03.12.2015 அன்று 8 தொழிலாளர்களுக்கு கோவை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது, நிர்வாகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது. அடுத்தடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் தயாரானது. உருட்டி மிரட்டி ஆசை வார்த்தை காட்டி கூடுதல் உற்பத்தியை நிர்ப்பந்தமாய் பெற்றுக் கொண்டது. பொய்யான குற்றச்சாட்டுகள் சொல்லி சம்பளப் பிடிப்பு, தற்காலிக பணி நீக்கம் என்ற நடவடிக்கைகளை திரும்பவும் துவக்கியது.
விவசாயிகள் தற்கொலை, விவசாய நெருக்கடி என்ற பின்னணியில் 25.04.2017 அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து மய்ய தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்புப்படி பிரிக்கால் தொழிலாளர்கள் 25.04.2017 அன்று வேலை நிறுத்தம் செய்தனர். உழவே தலை, உழவனே தலை என்று வசனம் பேசும் பிரிக்கால் நிர்வாகம் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததற்கு, ஒப்பந்தப்படி ஒரு நாள் வேலை செய்து தர சங்கம் தயாராக இருந்தபோதும், 804 தொழிலாளர்களுக்கு 8 நாட்கள் சம்பளம் தண்டனையாகப் பிடித்தது.
2018ல் சங்கம் 750 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டவுடன், கேட்கக் கூடாததை சங்கம் கேட்டுவிட்டது போல் நிர்வாகம் ஆத்திரம் அடைந்தது. தான் பணி நிரந்தரம் செய்த 150 தொழிலாளர்கள் உபரி என்றும் அந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும், சங்கம் குலுக்கல் முறையில் 150 தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து வேலையை விட்டு வெளியே போகச் சொல்ல வேண்டுமென்றும் அவர்களுக்கு சட்டப்படியான பாக்கி தவிர கூடுதலாக எதுவும் தரப்படாது என்றும் சொன்னது. சங்கம் கேட்கிற சம்பள உயர்வு மிகவும் அதிகம் என்றும் சங்க உறுப்பினர்களான ஒவ்வொரு 427 பேரின் இடத்தில் 100 பேர் இருந்தால் போதுமென்றும், ஒவ்வொரு 427 பேருக்கும் 100 பேர் போக 327 பேரை வேலையை விட்டு அனுப்ப சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இவர்களுக்கும் சட்டபூர்வமான நஷ்டஈடுகள் மட்டுமே தரப்படும் என்றது. ஆக, 750 பேரை புதிதாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சங்கம் கேட்டபோது, பிரிக்கால் நிர்வாகம் 804 பேரை (150+327+327) வீட்டுக்கு அனுப்ப சங்கம் முன்வர வேண்டும் என்றது.
இப்படியாக ஆட்குறைப்புக்கு சங்கம் வழி செய்த பிறகுதான் புதிய ஒப்பந்தம் போட முடியும் என நிபந்தனை விதித்தது.
2017ல், 2018ல் தனது ஆசியுடன் செயல்படும் மாற்று சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையை தனது அதிகாரிகள் துணையுடன் தீவிரப்படுத்தியது. பல பத்தாண்டுகளாக இல்லாத நடைமுறையாக மூத்த பெண் தொழிலாளர்களை 7 கி.மீ. தள்ளி வீசி எறிந்தது. பிளாண்ட் 3ல் இருந்து ஏறத்தாழ அனைத்து முன்னணிகளையும் பிளாண்ட் 1க்கு மாற்றியது.
வேலை நீக்கத்திற்கு எதிரான வழக்குகளில் 76 பேர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என காரணம் சொல்லி, வேலையில் இருப்பவர்களுக்கு கல்விப்படி, சீருடைப்படி, தற்செயல் விடுப்பு பணப்பயன்கள் ஆகியவற்றை தராமல் நிறுத்தியது. அடுத்த தீபாவளிக்கு முன்பாக சங்கத்தை விட்டு விலகாதவர்களுக்கு போனசிலிருந்து குறைந்தபட்சம் ரூ.42,000மும் அதற்கு மேலும் குறையும் என்றது. குழந்தைகளோடு நியாயம் கேட்டு சென்றவர்களைப் பார்த்து கொலை பயம் வந்துவிட்டதாகச் சொல்லி காவல்துறைக்கு புகார் தந்தது. தடை உத்தரவுகள் பெற்றது. 22 பேருக்கு நிலையாணைகளை மீறி 3 நாட்கள் தற்காலிக பணி நீக்க தண்டனை வழங்கியது. சங்கத்தின் பொருளாளரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணனுக்கு 3 நாட்கள் தற்காலிக பணி நீக்க தண்டனை வழங்கியது. 2013ல் சங்கத்தின் கொடி கம்பம் நிறுவப்பட்டு பெயர் பலகை திறக்கப்பட்டது. அதன் பின் அங்கே 50க்கும் மேற்பட்ட வாயில் கூட்டங்கள் நடந்துள்ளன. கடந்த காலத்தில் நிர்வாக ஆதரவு சங்கங்கள் தொழிற்சாலை சுவரிலேயே கொடி கம்பத்தை வைத்திருந்து, பெயர் பலகையும் திறந்திருந்தனர். ஆனால் நமது சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜன், நிர்வாகி தோழர் கணேசன், ஆகியோருக்கு கொடி மரத்தை அப்புறப்படுத்தவில்லை என்று சொல்லி 10 நாட்கள் தற்காலிக பணி நீக்க தண்டனை வழங்கியது.
குழந்தைகள் தெரிவித்த எதிர்ப்புக்கு சங்க நிர்வாகிகளான தோழர்கள் நடராஜன், பாபு, துரைசாமி தண்டிக்கப்பட்டனர். நிர்வாகிகளுக்கே தண்டனை என்றால் நம் கதி என்ன என தொழிலாளர்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என நிர்வாகம் விரும்பியது
ஜுன் 15 முதல் 26 வரை
தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருந்த இந்த பின்னணியில்தான் தொழிலாளர்களோடு சேர்ந்து எதிர்ப்பு போராட்டம் கட்டமைக்க ஜுன் 15 முதல் ஜுன் 26 வரை கோவை சென்றிருந்தேன்.
ஜுன் 15 இரவு கட்சி மற்றும் சங்க நிர்வாகிகளுடன் திட்டமிடுதல் கூட்டம் நடந்தது.
ஜுன் 16 காலை 6.15 மணியளவில் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாலை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஜுன் 17 அன்று நாள் முழுவதும் தொழிலாளர் முன்னணிகளோடு சந்திப்புகள் நடந்தன. ஜுன் 18 காலை, 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் தொடர்பான வழக்கை தொழிலாளர் நீதிமன்றம் தாமதிப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட வழக்கறிஞராக நீதிமன்றம் செல்ல நேர்ந்தது. ஜுன் 19, 20 தேதிகளில் பெண் தொழிலாளர்களோடு சந்திப்பும், உரையாடலும் நடந்தது. ஜுன் 21 அன்று காலை கரூரில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. அன்று அங்கு நடந்த கட்சி மாவட்ட தலைமைக்குழு கூட்டம் முடிந்த பிறகு, மாலை மின்வாரிய ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
ஜுன் 22 அன்று பிரிக்கால் பிளாண்ட் 1ன் 2வது ஷிப்ட் முதலாவது ஷிப்ட் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அன்று மாலை, 150 நாட்கள் தாண்டி தங்கள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக தொடர்வதை எல்ஜிபி ரோலன் தொழிலாளர்கள் 2 இனிப்புகள், காரம், காப்பி வழங்கி கொண்டாடியதோடு அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளையும் தீர்மானித்தார்கள்.
ஜுன் 23 அன்று பிரிக்கால் பிளாண்ட் 3ன், 2வது ஷிப்ட் முதலாவது ஷிப்ட் தொழிலாளர்களோடு சந்திப்பு நடந்தது. ஜுன் 24 அன்று கட்சியின் கோவை மாவட்ட குழு, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட எல்ஜிபி, பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டங்கள் மற்றும் மாவட்ட ஏஅய்சிசிடியுவை பலப்படுத்துவது, கோவையில் மதவெறி அரசியலை எதிர்கொள்வது, சாதி ஆதிக்கத்தை சந்திப்பது, அகில இந்திய மக்கள் மேடையை உருவாக்குவது, ஜுலை 28 பெருந்திரள் கூட்டம் நடத்துவது, போன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜுன் 25 அன்று பிளாண்ட் 1ல், 2ஆவது மற்றும் 1ஆவது ஷிப்ட் தொழிலாளர்களோடு சந்திப்பு நடந்தது.
ஜுன் 26 அன்று, பிரிக்காலில், தமிழ்நாட்டில், இந்தியாவில் நிலவுகிற அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக மாலையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களோடு நானும் உரை நிகழ்த்தினேன்.
இந்த 11 நாட்களில் 825 பேர் உறுப்பினர்கள் இருக்கிற நமது சங்கத்தில், 125 பெண் தொழிலாளர்கள், 125 பிளாண்ட் 3 ஆண் தொழிலாளர்கள், 375 பிளாண்ட் 1 ஆண் தொழிலாளர்கள் என 625 தொழிலாளர்களை சந்திக்க முடிந்தது.
சந்திப்புகளில் முன்வந்த கருத்துகள்
இந்திய தண்டனைச் சட்டத்தில் காயமுண்டாக்குதல், கொடுங்காயம் உண்டாக்குதல் என்ற இரண்டு வகை குற்றங்கள் உள்ளன. 2007 முதல் 2011 வரை பிரிக்கால் நிர்வாகம் கொலை வழக்கு, இருவர் ஆயுள் தண்டனை, 25க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளில் 100 நாட்கள் வரை சிறைவாசம், 8 நாட்கள் சம்பளப் பிடித்தம், பதவி இறக்கம், பகுதி கதவடைப்பு, சம்பளப் பிடித்தம், 2007 ஏப்ரல் முதல் 2009 செப்டம்பர் வரை சம்பள உயர்வு மறுப்பு போன்ற கொடுங்காயங்களை ஏற்படுத்தியது. அவற்றோடு ஒப்பிட்டு பார்க்கையில் 2017, 8 நாட்கள் சம்பளம் பிடித்தம், பிளாண்ட் 1, பிளாண்ட் 3, மற்றும் தற்காலிக பணி நீக்கம் போன்றவை சாதாரண காயங்கள். கொடுங்காயங்களை சந்தித்தவர்களுக்கு சாதாரண காயங்கள் ஒரு பொருட்டல்ல எனத் தெரிவித்தனர்.
திருவாளர்கள் தா.பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப ஜுன் 12 அன்று, மாற்று சங்கத்தின் பொதுப் பேரவைக்கு வந்திருந்தபோதே, பெரும்பான்மை தாருங்கள் ஒப்பந்தம் முடிக்கிறோம் என பேசினார்கள். இதற்காக சலுகைகள் மறுப்பு, போனஸ் குறைப்பு மிரட்டல்களும் பணியிட அச்சுறுத்தல்களும் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம் அடிபணிந்து கெஞ்ச மாட்டோம் என அழுத்தம் திருத்தமாய் தெரிவித்தனர்.
ஏஅய்சிசிடியு சங்கம் இல்லையென்றால் மீண்டும் நிர்வாகம் சாட்டையைக் கையில் எடுக்கும், கேட்ட உற்பத்தியை தரச் சொல்லும், தருவதை வாங்கிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கச் சொல்லும் எனவும், தொழிலாளர்களை, டிஸ்கிரேட் தொழிலாளர்களைப் போல், இடம் பெயர்ந்த தொழிலாளர்களைப் போல் மாற்றிவிடும் எனவும் தொழிலாளர்கள் உணர்ந்திருந்தனர். வரலாற்றையும் வலியையும் மறக்காத தாங்கள் வாழத் தகுதியானவர்களே எனப் பிரகடனம் செய்தனர்.
நிர்வாகம் விசாரணை இன்றி வேலை நீக்கம் என 76 பேரை பின் மண்டையில் தாக்கி குத்துயிரும் குலையுயிருமாக வீசி எறிந்துள்ளது. அவர்கள் வழக்காடக் கூடாது என்று சொல்வதன் மூலம் வேலையில் இருப்பவர்களை ஆளுக்கொரு குத்து, நீயும் ஒரு குத்து குத்து என்று சொல்கிறது.
மொத்தத்தில் பிரச்சனைகள், துன்பங்கள், தற்காலிக சோர்வு எல்லாம் தாண்டி தொழிலாளர்கள் போராடவும், வெற்றி பெறவும் தயாராகி உள்ளனர்.
பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டம் நமது வர்க்கப் போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள் போராட் ம் நம்பிக்கையும் உற்சாகத்தையும் துணிச் சலையும் தந்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாட் ல் மக்கள் மீது மோடி பழனிச்சாமி அரசுகள் போர் தொடுத்துள்ள நிலையில் ஜனநாயகத் க்கான போராட்டங்களின் அடிப்படையாக எதிர்ப்பு போராட்டங்களே அமையும்.
ஏப்ரல் 25, 2017 ஒரு நாள் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்ததற்காக 804 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிரான காலவரையற்ற பட்டினிப் போராட்டம் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.அரிபரந்தாமனால் சென்னையிலும் கோவையிலும் ஒரே நேரம் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது. தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் தலைமையிலான போராட்டம் 16ஆவது நாள் வரை நீடித்தது. சென்னையில் வழக்கறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தால் பேச்சுவார்த்தைகள் நடத்தி தொழிலாளர் அமைச்சரும் செயலரும் பின்வரும் இரு எழுவினாக்களை தொழிற் தகராறு எண் 121/2017படி நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பினர். 1. பிரிக்கால் நிர்வாகம் எட்டு நாட்கள் சம்பளம் பிடித்தது நியாயமா, இல்லையெனில் என்ன நிவாரணம் வழங்க வேண்டும். 2. மேற்படி எழுவினா தீர்ப்புக்கு உட்பட்டு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை முன்பணமாக வழங்க இடைக்கால தீர்வம் (இன்டெரிம் அவார்ட்) பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா?
நமக்கெதிராக, 60 பேர் வேலை நீக்க வழக்கை, நடத்தாமலேயே தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கின் அவசர தன்மையை காணத் தவறினார் என நாம் கருதினோம். நேரில் போய் கேட்டபோது எதற்கு இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பே போட்டு விடலாமே எனச் சொன்னார். அவருக்கு தொழிற் தகராறு சட்டம் 47ன் 2(பி) பிரிவின் படி தீர்ப்பு என்பது இடைக்காலத் தீர்ப்பும் சேர்ந்தே வரும் என்றும் பிரிவு 10(4)படி தீர்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ள தொழில் தகராறில் எழுவினாக்களும், தொடர்புடைய விசயங்களும் என குறிப்பிடப்பட்டுள்ளன பற்றி பேசுகிறது என்றும் பிரிவு 15ன்படி, அனுப்பப்பட்ட எழுவினாக்களில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளதையும், சுட்டிக் காட்டினோம்.
நிர்வாகம் சொல்லுவதுதான் சட்டம் என அவர் கருத வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றத்தின் ஓட்டல் இம்பீரியல் வழக்குப்படியும் சட்டப்படியும் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். என்ன வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்குங்கள், ஆனால் விரைந்து வழங்குங்கள் என வற்புறுத்தினோம். வேறு ஒரு தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நம் இடைமனுவை, விசாரிக்க சம்மதித்துள்ளார். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, யார் செத்தால் எங்களுக்கு என்ன, பணம்தான் எங்களுக்கு முக்கியம் என்று நிர்வாக வழக்கறிஞர் பேசியதாக, நீதிமன்றத்தில் இருந்தவர்கள் நெஞ்சம் பதறிக் கொண்டிருந்தார்கள்.
முதல் எழுவினாவின் தீர்ப்புக்குட்பட்டு, இரண்டாம் எழுவினாவில் இடைக்கால தீர்வம் வழங்குவது பற்றி முடிவு செய்யச் சொல்லி அரசாணை இருப்பதை நீதிமன்றம் காணாமலேயே இருந்ததோ என்ற சந்தேகம் எழுந்தது.

நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்
இன்று 8 வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம்
நாளை ஆர்த்தெழ உள்ளது பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டம்
சிந்திக்க துணிவோம்! போராட துணிவோம்! வெற்றி பெறத் துணிவோம்!