ஒரு நக்சலைட்டாகிய நான்....
...அவர்கள் எல்லோரும்
ஒரே குற்றத்தைச் செய்தார்கள்
அநீதிக்கு எதிராகப் பேசினார்கள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகப் பேசினார்கள்
நீதிதான் நமது காலத்தின் பயங்கரவாதம் என்று
அவர்களுக்கு இப்போது சொல்லப்படுகிறது
கைதுகள் இத்தோடு நிற்கப் போவதில்லை
அடுத்தது நானாக இருக்கலாம்
அல்லது நீங்களாக இருக்கலாம்
பயப்படுகிறீர்களா?
அதுதான் அவர்கள் விரும்புவது
அவர்கள் விரும்புவதை
தயவுசெய்து அவர்களுக்குத் தராதீர்கள்
அவர்கள் நம் இதயத்தில்
எதை அழிக்க விரும்புகிறார்களோ
அதை நாம் இன்னும் பெரிதாக்க வேண்டும்....
பெரிய கலகம் வரப்போகிறது
....அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது
அச்சம் அவர்களை நிதானமிழக்க வைக்கிறது
மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறார்களை மூதாட்டிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறு புல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
போராட்டம் என்ற சொல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
பொம்மை அரசனின்
பொம்மைப் படைகள்
வயல் வெளிகளில்
பயிர்களுக்குத் தீ வைக்கின்றன
பாறைகளுக்கு வெடி வைக்கின்றன
பறவைகள் சிதறிப் பறக்கின்றன
மக்கள் அப்படி சிதற மாட்டார்கள்
பெரிய கலகம் வரப்போகிறது.
(மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இருந்து)
...அவர்கள் எல்லோரும்
ஒரே குற்றத்தைச் செய்தார்கள்
அநீதிக்கு எதிராகப் பேசினார்கள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகப் பேசினார்கள்
நீதிதான் நமது காலத்தின் பயங்கரவாதம் என்று
அவர்களுக்கு இப்போது சொல்லப்படுகிறது
கைதுகள் இத்தோடு நிற்கப் போவதில்லை
அடுத்தது நானாக இருக்கலாம்
அல்லது நீங்களாக இருக்கலாம்
பயப்படுகிறீர்களா?
அதுதான் அவர்கள் விரும்புவது
அவர்கள் விரும்புவதை
தயவுசெய்து அவர்களுக்குத் தராதீர்கள்
அவர்கள் நம் இதயத்தில்
எதை அழிக்க விரும்புகிறார்களோ
அதை நாம் இன்னும் பெரிதாக்க வேண்டும்....
பெரிய கலகம் வரப்போகிறது
....அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது
அச்சம் அவர்களை நிதானமிழக்க வைக்கிறது
மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறார்களை மூதாட்டிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறு புல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
போராட்டம் என்ற சொல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
பொம்மை அரசனின்
பொம்மைப் படைகள்
வயல் வெளிகளில்
பயிர்களுக்குத் தீ வைக்கின்றன
பாறைகளுக்கு வெடி வைக்கின்றன
பறவைகள் சிதறிப் பறக்கின்றன
மக்கள் அப்படி சிதற மாட்டார்கள்
பெரிய கலகம் வரப்போகிறது.
(மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இருந்து)