ஷாங்காய் ஒப்பந்த அமைப்பு சந்திப்பு
பெரிய ஏழு நாடுகள் சந்திப்பு
டிரம்ப் - கிம் சந்திப்பு
சந்திப்புகள் சொல்லும் சர்வதேசச் செய்திகள்
எஸ்.குமாரசாமி
அய்க்கிய அமெரிக்காவின் 72 வயது அதிபர் டிரம்பும் 34 வயது வட கொரிய தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் சென்டோசா தீவில் கேபல்லா ரிசார்ட் என்ற அய்ந்து நட்சத்திர விடுதியில் ஜுன் 12 அன்று சந்தித்ததுதான் உலகம் முழுவதும் இருந்து திரண்ட 3,000 ஊடகவியலாளர்களின் முதன்மையான கவனத்தைப் பெற்றது.
சனிக்கிழமை நடந்த ஜி 7 சந்திப்பு, ஞாயிறு நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் சந்திப்பு பின்னுக்குச் சென்றுவிட்டன.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளில் இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து 8 நாடுகள் உள்ளன. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் சேர்ந்து உள்ள எட்டு நாடுகளின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 42% ஆகும். இவர்களிடம் உலக உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20% உள்ளது.
(அய்க்கிய நாடுகளில் (யுஎன்) இடம் பெற்றுள்ள நாடுகள் 193. அவை தவிர போப்பாண்டவரின் வாடிகன், பாலஸ்தீன் சேர்த்தால் 195 நாடுகள் வரும்).
சீனம் சர்வதேச உறவுகளில் நல்ல முதிர்ச் சியைக் காட்டுகிறது. இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் இந்தச் சந்திப்பில் கை குலுக்கிக் கொள்ள வாய்ப்பு உருவானது. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு மூலம் கூட இந்திய பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தச் சந்திப்பில் டோக்லம் பின்னுக்குச் சென்றது. சீனத்தின் பெல்ட் ரோடு முன்முயற்சியில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தாலும், இந்தியா சீனா உறவுகள் மேம்படுவதுதான் உலகிற்கு நல்லது. சீன அதிபர் ஜி பெங் நாம் பனிப்போர் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும் எனவும் நாடுகள் அணிகளாக மோதிக் கொள்வதை நிராகரிக்க வேண்டும் என்றும் சொன்னார். வடகொரியா, அய்க்கிய அமெரிக்கா மோதல் தணிப்புக்கு உதவிய சீனம், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு மூலம் இந்தியா பாகிஸ்தான் உறவுகள் பலப்படவும், சீன இந்திய உறவுகள் பலப்படவும் உதவ வேண்டும். இந்தியா ஒரு பக்கம் பாகிஸ்தானோடு பகை வளர்ப்பதைக் கைவிட்டு நட்பு கொள்ளவும், மறுபக்கம் அய்க்கிய அமெரிக்க மிரட்டல்களுக்கு ஆளாகாமல் சீனத்துடன் நல் உறவு கொள்வதும் நல்லது.
கனடாவின் கியூபெக்கில், பெரிய பணக்கார ஏழு நாடுகளான அய்க்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி சந்திப்பு நடந்தது. டிரம்ப் மீண்டும், ஏற்கனவே ஒரு முறை பாரீசில் செய்ததுபோல், கூட்டறிக்கையில் கையொப்பம் போடாமல் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த ஏழு நாடுகளிடம் உலகின் மொத்த நிகர செல்வத்தில் 62%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 46% உள்ளன. அய்க்கிய அமெரிக்கா முதலில், அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்கள், வரி செலுத்துவோர், விவசாயத்துக்கு முதன்மை இடம் என தேசியவாத பாதுகாப்புவாத நாடகமாடும் டிரம்ப், அய்ரோப்பா, கனடா மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு கூடுதலாக 25% வரியும் அலுமினியத்திற்கு கூடுதலாக 10% வரியும் போட்டார். பாதிக்கப்பட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி தருவோம் என்றார்கள். டிரம்ப் நம் நாட்டின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை ரூ.52 லட்சம் கோடி என்றும், உலக நாடுகளில் நண்பர்களோ பகைவர்களோ அய்க்கிய அமெரிக்காவை ஏமாற்றி அனுபவிக்க விட மாட்டேன் என்றும் சொன்னார்; அய்ரோப்பிய நாடுகள், அய்க்கிய அமெரிக்காவில் தாங்கள் தாம் அதிகமாய் முதலீடு செய்துள்ளதாவும் அய்க்கிய அமெரிக்காவின் அதிக சேவைகளை தாங்களே வாங்குவதாகவும் அதிகமான அய்க்கிய அமெரிக்கர்களை தாங்களே வேலைக்கு வைத்துள்ளதாகவும் பதில் சொன்னார்கள்.
உலகின் மிகப் பெரிய இறக்குமதியாள ரான அய்க்கிய அமெரிக்கா, தன் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிப்பதாகக் குற்றம் சுமத்தி, இந்தியாவோடு வர்த்தகம் நிறுத்தப்படும் என மிரட்டியுள்ளது. அது நடந்தால், இந்திய ஜவுளி, பொறியியல் உற்பத்தி பொருட்கள், நகை, விலைஉயர் கற்கள் ஏற்றுமதிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
பெரிய பணக்கார நாடுகள், சுத்தமான காற்று, சுத்தமான நீர், சுத்தமான சூழல், என்பவற்றை நோக்கிச் செல்ல உறுதி ஏற்க வேண்டும், அனைவருக்கும் ஆரோக்கியமான, வளமான, நிலைக்கத்தக்க, நியாயமான எதிர்காலத்திற்காக பாடுபடுவோம் என ஒரு கூட்ட றிக்கை தயாரித்தனர். அதில் கையெழுத்திடாமல் டிரம்ப் வெளியேறினார். டிரம்ப் கைகட்டி அமர்ந்திருக்க, மற்ற 6 நாடுகளின் தலைவர்கள் அவரைச் சூழ்ந்து நிற்க, நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை என்ற தோற்றத்துடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் டிரம்பை முறைத்துப் பார்ப்பது, சமகால உலகின் ஒரு கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
டிரம்ப்பும் டிரம்ப் தரப்பினரும் அநாகரிக பேச்சுக்கு, அநாகரிக நடத்தைக்கு முன்மாதிரி யாக இருந்தார்கள். கனடாவின் பிரதமர் ஜஸ் டின் டிருடோ தம்முன் கூட்டத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்ததாகவும் தாம் சென்றவுடன் அய்க்கிய அமெரிக்க வரிகள் துரதிர்ஷ்டமானவை என்று பேசியதாகவும், ட்ரூடோ நேர்மை இல்லாதவர் பலவீனமானவர் எனவும் டிரம்ப் சாடினார். அய்க்கிய அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, டிரம்ப் பிடம் தவறான எண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு, முதுகில் குத்துபவர்களுக்கு நரகத்தில் சிறப்பானதோர் இடம் காத்திருப்பதாகச் சொன்னார்.
நியாயமான வர்த்தகம் என்பது முட்டாள் வர்த்தகமாக்கப்பட்டுவிட்டது என டிரம்ப் ஆவேசப்பட்டார். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் (நேட்டோ) இராணுவச் செலவுகளை பெருமளவில் அய்க்கிய அமெரிக்கா பார்ப்பதாகவும், அய்ரோப்பாவோ, தமக்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி விட்டு தம்மைப் பார்த்து சிரிப்பதாகச் சாடினார்.
கனடா பிரதமர், தங்கள் நாட்டவர்கள், மரியாதையானவர்கள் நியாயமானவர்கள் ஆனால் யாரும் தம்மை இழுத்துப் புரட்ட இடம் தரமுடியாது என்றார். பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரனின் அலுவலகம், திடீர் திடீர் எனக் கோபம் கொள்வது, மனம் போன போக்கில் வார்த்தைகளை அள்ளி வீசுவது, சர்வதேச உறவுகளுக்கு நல்லதல்ல என்றது. ஜெர்மனியின் ஹெர்கோமாஸ், அய்க்கிய அமெரிக்கா கூட்டறிக்கையில் இருந்து வெளியேறியது, அவர்களுக்கும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான நம்பிக்கை நிறைந்த உறவில் பாதியை முடித்துக் கட்டிவிட்டது எனப் புகார் கூறினார்.
ஏகாதிபத்திய முகாமில் பெரிய விரிசல், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் ஒத்திசைவு, பல்துருவ உலகிற்கு, உலக அமைதிக்கு நல்ல அறிகுறிகளே. அய்க்கிய அமெரிக்காவின் கூட்டாளிகளை, ஷாங்காய் ஒப்பந்த நாடுகளை, ஈரானுக்கு இணக்கமாகவும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக நிற்குமாறும் இந்தியா வற்புறுத்த வேண்டும்.
ஏழு பெரிய பணக்கார நாடுகளில் தாம் மட்டும் தனிமைப்பட்ட டிரம்ப்புக்கு, வட கொரியாவுடன் பேச்சு வார்த்தைகள் வெற்றி எனக் காட்ட வேண்டிய பெரிய தேவை இருந்தது. தென் கொரிய அதிபர் மூனும் சீனாவும் மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கிய சகஜ நிலையை, அய்க்கிய அமெரிக்க போர் கழுகுகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் துணை அதிபர் மைக் பென்சும் கிட்டத் தட்ட கெடுத்துவிட்டார்கள். ஜான் போல்டன், டிரம்ப் கிம் பேச்சு வார்த்தை, லிபியா தன்மை கொண்டது எனச் சொல்ல, மைக் பென்சோ, வடகொரியா தாங்கள் சொன்னபடி நடக்காவிட்டால் அவர்களுக்கும் லிபியாவுக்கு நேர்ந்த கதியே என மிரட்டினார். (லிபியாவில் அணுமயமகற்ற கடாஃபி ஒப்புக் கொண்ட பிறகு, சென்றோம் கண்டோம் கொன்றோம் என கடாஃபியைச் கொன்றது அய்க்கிய அமெரிக்கா). இந்தப் பின்னணியில் வடகொரியா கடுமையாகப் பதிலடி தந்தது. டிரம்ப்பும், மே 25 கடிதம் மூலம் ஜ÷ன் 12 பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தார்.
மீண்டும் தென் கொரிய மூனும் சீனாவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய பிறகு, ஜ÷ன் 12 பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தையில், போக்கிரி நாடு (ரோக் ஸ்டேட்) என தான் அழைத்த வடகொரியாவை, சமத்துவமாக நடத்த வேண்டிய அவசியம் ட்ரம்ப்புக்கு வந்தது. ஒரு பக்கம் ரூ.117 லட்சம் கோடி (18 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை, 13 லட்சம் போர் வீரர்களைக் கொண் டுள்ள இராணுவத்தை வழிநடத்தும், தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள 28,500 இராணுவத்தினருக்கு பொறுப்பான 72 வயது ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்ட் ஜே டிரம்ப் இருந்தார். மறுபக்கம் 34 வயது நிரம்பிய (வட கொரியாவின்) கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின், 40 பில்லியன் டாலர் (ரூ.2,60,000 கோடி) பொருளாதாரத்தை வழிநடத்தும் 12 லட்சம் ராணுவத்தினருக்கு தலைமை தாங்கும், கிம் ஜாங் உன் இருந்தார்.
ஏகாதிபத்திய பொருளாதாரத் தடைகளால் வடகொரியா கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்றபோதும், போர் பொருளாதாரம் அதற்கு மிகவும் கடினமானதுதான் என்றபோதும், வடகொரியா உள்ளுக்குள் வெடிக்கும் நிலையில் இல்லை. மக்கள் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், வீதிகளில் வாடகை கார்கள் ஓடியதாகவும் அரிசியும் மக்காச் சோளமும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் மேற்கத்தியப் பார்வையாளர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
முழுமையான, சோதித்து அறியக்கூடிய, திரும்பச் செல்ல முடியாத அணுமயமகற்றுதல் வடகொரியாவில் வேண்டும் என பேச்சுவார்த்தைகளில், பல வருடங்களாக, அய்க்கிய அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது காக்கும், தாக்கும் அணு ஆற்றல் குடையை அய்க்கிய அமெரிக்கா விரித்துள்ள நிலையில், டெர்மினல் ஹை ஆல்டிடியுட் ஏரியா டிபன்ஸ் (தாட்) என்ற அதி உயர் ஆயுத முறையை சீனத்துக்கு எதிராக அய்க்கிய அமெரிக்கா நிறுவியுள்ள நிலையில், போர் விளையாட்டுகள் என்ற பெயரால் அய்க்கிய அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளின் படையினர் 1 லட்சம் பேர் போர் தயாரிப்புக்களை திரும்பத் திரும்ப செய்த நிலையில், வட கொரியா, தென் கொரியாவும் கொரியாக்களின் கடல் பரப்பும் சேர்ந்த கொரிய தீபகற்பத்தை அணுமயமகற்றுதலுக்கு ஆளாக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தது.
டிரம்ப், தான் கிம்முடன் பேசத் துவங்கிய சில நிமிடங்களிலேயே தொடர்ந்து பேசுவதா வெளியேறுவதா என முடிவு செய்து விடுவேன் எனச் சவடால் விட்டார். டிரம்ப் கிம்மை குட்டையான குண்டன், ராக்கெட் மேன், தன்னையும் தன் நாட்டையும் தற்கொலைப் பாதையில் அழைத்துச் செல்பவர் எனப் பேசியிருந்தார். கிம், டிரம்பை, மன நலம் பாதிக்கப்பட்ட கிழட்டுப்பயல் என்றார். டிரம்ப், கிம்மிடம், எங்களுடைய அணு ஆயுதப் பொத்தான் உங்களுடையதை விடப் பெரியது, சக்தி வாய்ந்தது எனச் சொல்ல, கிம், டிரம்ப் பேச்சை, வெறிநாயின் குரைப்பு என்றார். இப்படி கருத்து பரிமாற்றங்கள் நடந்ததா எனக் கருதும் விதம், இருவரும் ஜ÷ன் 12 அன்று சந்தித்து 13 விநாடிகள் கை குலுக்கிக் கொண்டனர். கிம், உலக மக்கள், நடப்பதெல்லாம் ஓர் அறிவியல் புனைக்கதை திரைப்படத்தின் ஒரு காட்சி எனக் கருத வாய்ப்புண்டு என்றார்.
ஜ÷ன் 12, டிரம்ப், கிம் சந்திப்பு கூட்டறிக் கையின் நான்கு அம்சங்கள்
1. வட கொரியா, அய்க்கிய அமெரிக்கா நல்உறவுகள் நிலை நாட்டப்படும்.
2. கொரிய தீபகற்பத்தில் நீடித்து நிலைக்கிற அமைதியின் ராஜ்ஜியம் நிறுவப்படும்.
3. முழுமையாக அணுஆயுத ஆற்றல் அகற்றப்பட்ட ஒன்றாக கொரிய தீபகற்பத்தை மாற்ற இரு தரப்பினரும் கடமைப்பட்டுள்ளனர்.
4. இரு தரப்பினரும் தத்தம் நாடுகளில் உள்ள போர்க் கைதிகளின், போரில் காணாமல் போனவர்களின் உடைமைகள், உடல்களில் மிஞ்சியவற்றைப் பரிமாறிக் கொள்வார்கள்.
டிரம்ப், பொருளாதாரத் தடைகள் என்றாலும், போர் விளையாட்டுகள் நிறுத்தப்படும் என்றார். காலம் கடந்த ஞானோதயத்துடன் இந்தப் போர் விளையாட்டுகள், ஆத்திரமூட்டக் கூடியவை, ஏராளமான பணச் செலவு உண்டாக்குபவை என்றார்.
வடகொரியா வசம், 10 அணு குண்டுகளை வீசும் அளவிற்கான 50 கிலோ புளுட்டோனியம் இருப்பதாக, தென் கொரியா சொன்னது. வடகொரியா, 2006, 2009, 2013, 2016, 2017ல் அணு ஆயுத சோதனைகள் நடத்தி உள்ளது. வடகொரியாவிடம் 3,500 கி.மீ செல்லும் முசுடான், 4,500 கி.மீ. செல்லக் கூடிய ஹ்வாடாங் 12, 10,000 கி.மீ. செல்லக் கூடிய ஹ்வாடாங் 14, 15,000 கி.மீ. செல்லக் கூடிய ஹ்வாடாங் 15 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் (அய்சிபிஎம்) ஏவுகணைகள் உள்ளன. அய்க்கிய அமெரிக்கா அயல் விவகாரத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வட கொரியா அணு ஆற்றல்மயமகற்ற 2020 வரை ஆகும் என்கிறார். டிரம்ப் படிப்படியாக நடக்கும் என்கிறார். கூட்டறிக்கை, தனியாக வடகொரியா பற்றிப் பேசவில்லை என்பதும், அய்க்கிய அமெரிக்க அணு ஆயுதங்கள் உள்ள கொரிய தீபகற்பம் பற்றிப் பேசுகிறது என்பதும் காணத்தக்கது.
டிரம்ப், பிரமாதம் பிரமாதம், அற்புதமான உறவு ஏற்பட்டுள்ளது என்றார். ஓர் ஊடகவியலாளர் டிரம்ப்பிடம் கேட்டார்: ‘கிம் சொன்னபடி செய்யாவிடில் என்ன செய்யப் போகிறீர்கள்?’ டிரம்ப் பதில் சொன்னார்: ‘இல்லை அவர் செய்வார் என நான் நினைக்கிறேன். நான் அவர் எல்லாவற்றையும் சொன்னபடி செய்வார் என உண்மையில் நம்புகிறேன். ஒரு வேளை நான் நினைப்பது தவறு என்றால், 6 மாதங்களுக்குப் பிறகு, உங்கள் முன் நின்று ஏய் நான் சொன்னது தவறு என்பேன்’. பிறகு தமாஷ் செய்தார்: ‘நான் அப்படி ஒப்புக்கொள்வேனா என்று தெரியவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிடுவேன்’.
கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச தயாராக உள்ள டிரம்ப், இனி ஆபத்தில்லை என்றும், தாம் அதிபர் ஆன பிறகு இப்போதுதான் பாதுகாப்பாக உணர்வதாகவும் சொன்னார்.
அலாஸ்காவை, கலிபோர்னியாவை அய்க்கிய அமெரிக்காவின் பல பகுதிகளை, அணு குண்டு வீசித் தாக்கும் ஆற்றல் உள்ள வட கொரியாவுடன் பேசிய டிரம்ப், ஈரானுடனான, சர்வதேச அணு ஆற்றல் ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைபட்சமாக வெளியேறியது அநியாயமானது. டிரம்ப்பிடமிருந்து, அய்க்கிய அமெரிக்காவிடமிருந்து ஆபத்தில்லை என உலகம் உணரும் நாள் வர வேண்டும்.