COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 31, 2018

கொள்ளையர்களிடம் இருந்து கொலைகாரர்களிடம் இருந்து  
தாய்நாட்டை மீட்க வேண்டியுள்ளது

எட்டு வழிச்சாலைக்கு 90 சதம் நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன, 9 சதம் பேர்தான் நிலம் தர ஆட்சேபணை தெரிவித்துள்ளனர் என்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் பழனிச்சாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
கால் பந்து உலகக் கோப்பை

எஸ்.குமாரசாமி

இறுதிப் போட்டி
பிரான்சும் குரோஷியாவும்தான் கால் பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்த முறை விளையாடின. பிரான்ஸ் பொருளாதாரம், உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரமாகும்.
தோழர் பக்ஷி: சில நினைவுகள்

எஸ்.குமாரசாமி

தோழர் பக்ஷியின் இறந்த உடல் முன் நானும் தோழர் என்கேயும் அஞ்சலி செலுத்திய பிறகு, எனக்கும் தோழர் திபங்கருக்கும் ஒரே நேரம், ஒரே நினைப்பு வந்தது.
நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இன்று, பேஸ்புக் பக்கங்களை நீங்கள் ஆக்கிரமித்திருக்கிறீர்கள்.
எல்லா மரணங்களும் சமமானவையல்ல! 
செவ்வணக்கம் தோழர் பக்ஷி!

தோழர் பக்ஷி. முகம் சுளித்திருக்கிறாரா? கடிந்து பேசியிருக்கிறாரா? குரல் உயர்ந்திருக்கிறதா? கோபப்பட்டிருக்கிறாரா?
8 வழிச் சாலை எதிர்ப்பு பிரசுர வெளியீடும் 
8ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றமும்

வே.சீதா

8 வழிச்சாலையை எதிர்த்து, தங்களின் நிலங்களை அரசிடமிருந்து பாதுகாக்க, தமிழக மக்கள் கொலைகார கொள்ளைக்கார அரசாங்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பற்றி இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது, ஓர் அருந்ததியர் பெண் சமையலர்க்கு எதிராக சாதி ஆதிக்கம் மேற்கொண்ட புறக்கணிப்பை காண நேர்ந்தது. ஆதிக்கத்திற்கு எதிரான, கவிஞர் சுகிர்தராணியின் ‘தயவுசெய்து தற்கொலை செய்துகொள்’ என்ற சீற்றம் தெறிக்கும் கவிதையை சமூக ஊடகத்தில் வாசித்தேன். அதை மாலெ தீப்பொறி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

தயவு செய்து தற்கொலை செய்து கொள்

நாங்கள்
சமையலராக இருக்கிறோம்
நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்

நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்

செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்

பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்

பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டிடத்தை நீயே கட்டிக் கொள்

வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்

முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்

ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக் கொடு

ஓட்டுனராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்

கூலியாக இருக்கிறோம்
உன் சுமையை நீயே தூக்கிக் கொள்

மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்

சாக்கடை வாருபவர்களாக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்

கலப்பு மணம் புரிந்தவராக இருக்கிறோம்
உன்னை நீயே புணர்ந்து கொள்

நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவராக இருக்கிறோம்

இதுவும் உனக்கு
வேண்டாமெனில்

தயவு செய்து தற்கொலை செய்து கொள்
குத்தகையாளர்களுக்கே 
நிலம் சொந்தமாக வேண்டும்!

என்.குணசேகரன்

சாணியைச் சுட்டு சாம்பலாக்கி, வாயில் போட்டு சிவசிவா எனச் சொல்லும் பண்டார சன்னதிகளுக்கு ஒண்ணேகால் லட்சம் ஏக்கர் நிலம் ஏன்
“10 ஆண்டுகளுக்கு முன்னால நான் ஒரு விவசாயி... 
இன்னிக்கு நான் என்னன்னு எனக்கே தெரியல....”

புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபை கூட்டம் 24.07.2018 அன்று கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.
மோடி அரசாங்கத்துக்கு எதிராக 
நாடாளுமன்ற வீதிகளில்
விவசாயிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்

ஜுலை 20 அன்று நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிரதமர் மோடியின் அரசாங்கம் தோற்கடித்து வெற்றி பெற்றது.

Tuesday, July 17, 2018


வருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள் மட்டுமல்ல 
பெரிய வெற்றிகளின் காலங்கள் கூட

ஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை என்று சொல்வார்கள். ஒரு முறை பட்டுவிட்டதால் அடுத்த முறை எச்சரிக்கையாக இருப்பார்கள் என பொருள்.

மக்கள் நலனே கட்சியின் நலன்

- சாரு மஜும்தார், (12 மார்ச் 1918 - 28 ஜுலை 1972)

தற்போதைய சூழலில் நமது கடமைகள்
ஜனவரி 28, 1966

அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டு, உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற இந்திய முதலாளித்துவத்தால், ஜனநாயகத்தை படுகொலை செய்வதைத் தவிர வேறு எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதிர்ப்புப் போராட்டங்கள் காலத்தின் கட்டாயம்

எஸ்.குமாரசாமி

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எடுவர்டோ கலியானோகிட்டத்தட்ட நம் அனைவரின் கதைகள்என்ற துணை தலைப்புடன், ‘முகம் பார்க்கும் கண்ணாடிகள்’ (மிர்ரர்ஸ்), என்ற நூல் எழுதி உள்ளார்.

திருபெரும்புதூரில் 13 நாட்கள்

வே.சீதா

போராட்ட தயாரிப்புகளில் இணைவது
தமிழ்நாட்டில் மூலதனம் குவிந்துள்ள பகுதி, திருபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம் பகுதியாகும்.

ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா....?”

அது என்ன வேலை? அண்ணாநகரின் மற்ற குடும்பங்களின் நிலை என்ன? வார்த்தைகளில் முழுவதுமாக விளக்குவது சற்று சிரமம் என்றே படுகிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)
என்னத்ததான் சொல்றது...? விவசாயம் இல்லை... வேலை இல்லை.... ஓஎன்ஜிசி வந்து தண்ணி வீணாப் போச்சு... எந்த வருமானமும் இல்ல... வறும கோட்டுக்கு கீழதான் எங்க வாழ்க்க... எப்படி வாழறதுன்னே தெரியல...

மோடியின் புதிய இந்தியாவில்
காப்பீட்டு நிதி, கல்வி நிதி எல்லாம்
 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே

எல்அய்சி நிறுவனத்தில் உள்ள மக்கள் பணத்தை அபகரித்துவிட மோடி அரசு திட்டமிட்டுவிட்டது. வாராக்கடன்கள் அதிகம் இருக்கும் அய்டிபிஅய் வங்கியின் 51% பங்குகளை எல்அய்சி நிறுவனம் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது

குடிமக்களை கொலை செய்யும் குடியரசு
வெறுப்பையும் வன்முறையையும்
வளர்த்துவிடும் மத்திய அமைச்சர்கள்

2002 குஜராத்தில், தன்னை விட்டுவிடுமாறு இரண்டு கைகளையும் கூப்பி கண்களில் நீர் வர கெஞ்சிய முகம் மோடியின் குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலையின் அடையாளமாக வரலாற்றில் நின்றது.

Search