காவிரிப் படுகையை கட்டியெழுப்ப
வெண்மணியின் பெயரால் உறுதியேற்போம்!
2003, டிசம்பர் 25 அன்று மயிலாடுதுறையில் தனது பயணத்தைத் துவக்கிய அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கம் 2018 டிசம்பர் 25, 26 தேதிகளில் மயிலாடுதுறையில் தனது ஆறாவது மாநில மாநாட்டை நடத்துகிறது.
2004ல் சுனாமி, 2011ல் தானே, 2018ல் கஜா என இயற்கைப் பேரிடர்களால் காவிரிப் படுகை நாசமாகிவிட்டது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் போட கூடிய சட்ட மன்றம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப் படுகை மக்கள் படும் துயர் பற்றி பேச மறுக்கிறது. ஆட்சியாளர்கள் காவிரிப் படுகை பொருளாதாரத்தை, விவசாயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்குப் பதிலாக, பேரிடர்களை வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இறால் பண்ணைகளும் அனல்மின் நிலையங்களும் கொண்டு வந்து சோறு போடும் நிலத்தையும் வேலை வாய்ப்பையும் பறித்துக் கொண்டார்கள்.
காவிரிப் படுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளில் ஒப்படைக்க மோடி, பழனிச்சாமி அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் போடுகின்றன. வேதாந்தாவும் ஓஎன்ஜிசியும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதித்து காவிரிப் படுகையை பாலைவனமாக்க சதி செய்கிறார்கள். செல்லாத பணம் என்று சொல்லி விவசாயத் தொழிலாளர்களின், விவசாயிகளின் கைகளில் இருந்த கடைசி காசையும் பிடுங்கிக் கொண்டுவிட்டு, கார்ப்பரேட் பேரழிவுக்கு கதவைத் திறந்து விடும் ஆட்சியாளர்களே பெரிய பேரிடர்கள். பட்டினிச் சாவுகளால், தற்கொலைச் சாவுகளால், அதிர்ச்சி மரணங் களால் நிறைகிற காவிரிப் படுகையின் விவசாய சமூகம் கஜா புயலுக்குப் பிறகு பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளது.
பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்த நெல் ஜெயராமன் மரணத்துக்கு தமிழகம் அஞ்சலி செலுத்துகிறது. நாமும் அவரை நினைவுகூர்கிறோம். கார்ப்பரேட் சேவகர்கள் நெல் விளையும் மண்ணை அழிக்கிறார்கள். காற்றை, நீரை நஞ்சாக்குகிறார்கள். ஆண்டவர்கள், ஆள்பவர்கள், ஆளத் துடிப்பவர்கள் அனைவரும் அழிக்கும் இந்த மண்ணை தொழிலாளர் விவசாயி ஒற்றுமை, போராடுகிற இடதுசாரி சக்திகள், கார்ப்பரேட் எதிர்ப்பு ஜனநாயக முற்போக்கு சக்திகள், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடுவோர் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்.
வெண்மணியின் அய்ம்பதாவது ஆண்டு நாள், ஓலமிடும் நாள் அல்ல. உரிமைப் போராட்டத்தைத் தொடர, அதில் வெற்றி பெற உறுதியேற்கும் நாள். வெண்மணிக்குப் பிறகு பதானி தோலா, லக்ஷ்மண்பூர் பாதே, சுண்டூர், கரம்சேடு என நாட்டின் பல கிராமங்கள் எரிந்தன. நிலஉடைமையாளர்களுக்கும் விவசாய கூலிகளுக்கும் இடையிலான உச்சகட்ட மோதலாக வெண்மணி இருந்தது. விவசாய கூலிகள் மீது ஓர் இறுதி கட்டப் போர் நடத்தி அவர்களை வீழ்த்திவிட ரத்த வெறிபிடித்த நிலஉடைமையாளர்கள் மூர்க்கத்தனமாக முயற்சி செய்தனர். அன்றைய முதலமைச்சர் அண்ணாத்துரை, 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டதை கெட்ட கனவாகக் கருதி மறந்துவிடச் சொன்னார். அண்ணாவின் தம்பிகள், தங்கைகள் காலத்திலும் போராட்டம் தொடர்கிறது.
அன்றைய பண்ணையார்கள் இடத்தில் இன்று கார்ப்பரேட் பண்ணையார்களும் அஇஅதிமுக, திமுக கட்சிகளின் புதுப்பண்ணையார்களும் வந்துவிட்டார்கள். அன்றைய விவசாயக் கூலிகளின் இன்றைய தலைமுறைகள், கார்ப்பரேட் நிறுவனங்களால் அழிக்கப்பட்ட விவசாயத்தால் வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள், நிலம் பறிக்கப்பட்ட ஏழை விவசாயிகள் திருபெரும்புதூரில், திருப்பூரில் கொத்தடிமைக் கூடங்களில், குறைந்த கூலிக்கு வியர்வை சிந்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நகர்ப்புற தொழிலாளர்கள் நாட்டுப்புற தொழிலாளர்களுடன் சேர்ந்து களம் காண்கிறார்கள்.
காவிரிப் படுகையில், தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு முடிவு கட்டப்பட வேண்டும். மடாதிபதிகளின், ஆதினங்களின் கொட்டத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும். காவிரிப் படுகையின், தமிழ்நாட்டின் கோவில், மட நிலங்கள், தலித்துகளுக்கும் மிக வும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் விவசாயிக ளுக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தலித்துகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பண்ணைகளின் நிலங்களோடு கட்டப்பட்டிருந்த விவசாய கூலிகளின் இன்றைய தலைமுறை விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள், கந்துவட்டி கடன், நுண் கடன், நிறுவன கடன் ஆகிய சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளனர். இந்தச் சங்கிலிகள் நொறுக்கப்பட வேண்டும். கந்து வட்டி, நுண்கடன் நிறுவனங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
சொந்தமாக தீப்பிடிக்காத கான்கிரீட் வீடு என்ற கோரிக்கை 1968 வெண்மணி நெருப்பில் பிறந்தது. ராமனுக்கு வீடு இல்லை என கவலைப்படும் பாஜக, ராமசாமிக்கு, அந்தோணிக்கு, அப்துல்லாவுக்கு வீடு இல்லை என்று கவலை கொள்வதில்லை. இன்று சுனாமியும் தானேயும் கஜாவும் அடித்துப் போட்ட வீடுகள் இருந்த இடத்தில் 500 சதுர அடியில் கண்ணியமாக வாழத்தக்க கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.
பொது சுடுகாடு, சுடுகாட்டுக்குப் பொதுப்பாதை என்ற கோரிக்கையை திருநாள்கொண்டசேரி எழுப்பியது. அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட தன்னிறைவு கிராமங்கள் வேண்டும் என்று நாம் முழங்க வேண்டும். சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் முடிவு கட்டியவர்களின் வாரிசுகளான நாம் திருநாள்கொண்டசேரியை பொறுத்துக் கொள்ள முடியாது.
உழைத்துப் பிழைக்க நிலம் இல்லாததும் உழைக்கும் கரங்களுக்கு வேலை இல்லாததும் காவிரிப் படுகையின் பெரும் துயரம். இதனால் நமக்கு மலிவான உழைப்பு கிடைக்கும் என்று நோக்கியா, ஹ÷ண்டாய் முதலாளிகள் கொண்டாடினர். மாற்று வேலைக்கான இடதுசாரிகள் போராட்டத்தில் வந்தது நூறு நாள் வேலைத் திட்டம். சாதி கடந்து பெரும்எண்ணிக்கையில் திரளும் தொழிலாளர்களைக் கண்டு அச்சமுறும் ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தை ஒழித்து விடப் பார்க்கிறார்கள். அன்று உழைப்புக்கேற்ற நெல் கூலி கேட்டோம். இன்று ஆண்டு முழுவதும் உழைக்க வேலை கேட்கிறோம்.
வெண்மணியில் எரிக்கப்பட்டவர்கள் தலித் விவசாயக் கூலிகள். அவர்களை எழுந்து நின்று தலை நிமிர்ந்து போராடச் சொன்னவர் சீனிவாச ராவ். அடித்தால் திருப்பி அடி என்று சொல்லித் தந்த அவர் தலித் இல்லை. மயிலாடுதுறையின் தோழர் சங்கரும் சந்திரகுமாரும் சந்திரசேகரும் கை கட்டாதே, துண்டை தோளில் போடு என்று சொன்னார்கள். நீதிமன்றம் விடுவித்த பண்ணையாரை தண்டித்தவர் கள் வெவ்வேறு சாதிப் பின்னணி கொண்டவர்கள் என்கிறார்கள். அவர்கள் சாதியை மிதித்து எழுந்தார்கள். இன்று சாதியாதிக்கக் கொலைகளை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
வெண்மணி காட்டும் வெளிச்சம், அம்பேத்கர் காட்டிய சாதி ஒழிப்பு அரசியல், பெரியார் பேசிய பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல், வினோத் மிஸ்ராவும் நாகபூஷனும் காட்டிய வர்க்க அரசியல், கார்ப்பரேட், மதவெறி எதிர்ப்பு அரசியல். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் அரசியல்.
இயற்கைப் பேரிடர்களில் இருந்து மீண்டு எழுந்து நிற்க, காவிரிப் படுகையை மீண்டும் கட்டி எழுப்ப, மக்கள் தமிழகத்தை உருவாக்க அம்பானி, அதானி, வேதாந்தா கார்ப்பரேட் பேரிடர்களை கொண்டு வரும் மோடி, பழனிச்சாமி பேரிடர்களை அப்புறப்படுத்துவோம். காவிரிப் படுகையை, தமிழ்நாட்டை, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்ளையில் இருந்து பாதுகாப்போம்.
நிலச்சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளர், உழைக்கும் விவசாயிகள் வளர்ச்சி, முன்னேற்றம் கொண்ட புதிய காவிரிப் படுகையை, புதிய தமிழகத்தை உருவாக்குவோம்.
சாதியை அழித்தொழிக்க, ஆணாதிக்க, ஆதிக்கக் கொலைகளை, சனாதன இழிவுகளை சுட்டெரிக்கப் போராடுவோம்.
சீனிவாசராவ், வினோத் மிஸ்ரா, நாக்பூஷன், அப்பு, சந்திரகுமார், சந்திரசேகர், சுப்பு, பி.வி.சீனிவாசன், பக்ஷி, டிகேஎஸ்ஜே வழிமரபில் அணி வகுப்போம்.
கிராமப்புறத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர், உழைக்கும் விவசாயிகள் ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.
நீண்டகால காங்கிரஸ் ஆட்சிக்கு அன்றைய செங்கொடி விவசாய தொழிலாளர் இயக்கம் முடிவு கட்டியது. இந்தியா இந்து ராஜ்ஜியமாக மாறாமல் தடுக்க என்ன விலை கொடுக்கவும் வெண்மணியின் வாரிசுகள் எழுந்து நிற்போம்.
தேசம் காக்க, ஜனநாயகம் காக்க, பாசிசத்தை தோற்கடிப்போம். பாஜக ஆட்சியை விரட்டியடிப்போம். பேரிடர் அஇஅதிமுக ஆட்சியை வெளியேற்றுவோம்.
(அவிகிதொச ஆறாவது மாநில மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரசுரத்தில் இருந்து)