பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவதில்
விவசாயிகள் ஒற்றுமை மிகப்பெரிய சக்தியாக இருக்கும்
நவம்பர் 29, 30 தேதிகளில் டில்லியில் நடந்த விவசாயிகள் பேரணியில்
இககமாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய உரை
நண்பர்களே,
அய்ந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர் தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த அய்ந்து மாநிலங்களிலும் விவசாயிகள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறை ஏவப்பட்டது.
மத்தியபிரதேசத்தின் மான்ட்சாரில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த தியாகத்துக்குப் பிறகுதான் இன்று இந்த விவசாயிகள் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளின் கோரிக்கைகள் இந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரதானமானவையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் மற்ற விசயங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த மாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. இங்கு அனுமன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களிடம் கேட்கப்படுகிறது. கடுமையாக உழைக்கும் விவசாயிகளாகிய நாங்கள் தொழிலாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல நாம் இங்கு வந்திருக்கிறோம். இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களாகிய நீங்கள், மொத்த உலகமும் ஒதுக்கித் தள்ளிவிட்ட ஹிட்லர் பாணி சர்வாதிகாரத்தின் வாரிசுகள். இன்று இங்கு நாம் பார்க்கிற விரிந்து பரந்த ஒற்றுமை, வலிமை, துணிவுதான் இப்போதைய தேவை.
இந்த ஒற்றுமை, இந்த வலிமை, இந்தத் துணிவு நமக்கு விவசாயிகளிடம் இருந்து கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன். விலைவாசி விண்ணைத் தொடும்போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை மலிவானதாகிவிட்டது. விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்ளும்போதும் அதனால் நாட்டின் கொள்கைகளை மாற்றியமைக்க முடியவில்லை.
நாட்டின் கொள்கைகள் விவசாயிகளுக்கு ஆதரவானவையாக இருக்க வேண்டுமானால், அவை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை களில் இடம் பெற வேண்டும் என்ற மிகச் சரியான முடிவை நீங்கள் இன்று எடுத்துள்ளீர்கள். அதே நேரம் நாட்டின் அரசியலிலும் மாற்றம் இருக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என இந்த நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பிரிவினரை மய்யங்கொண்டதாக அந்த மாற்றம் இருக்க வேண்டும். அது போன்ற ஓர் அரசியல் மாற்றம் வர நாம் நமது போராட்டங்களை இன்னும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வருகிற நாட்களில் நாம் தேர்தல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தத் தேர்தல்களில் விவசாயிகளும் தொழிலாளர்களும்தான் பேசுவார்கள் என்று நீங்கள் இன்று முடிவு செய்துள்ளீர்கள். இந்த நாட்டின் சாமான்ய மக்களின் குரல் இந்தத் தேர்தல்களில் வலுவாக எழுப்பப்படும். விவசாயிகள் விரோத கொள்கைகளை உருவாக்கி அமலாக்கியவர்கள் வெளியேறுவதற்கான காலம் வந்து விட்டது. எனவே, இந்தக் கூட்டம் அவர்களுக்கு எச்சரிக்கை மணி மட்டுமின்றி அவர்களை வெளியேற்றுவதற்கான இறுதி மணியும் ஆகும். வரும் நாட்களில், உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மய்யமாகக் கொண்டவர்களே இந்த நாட்டை ஆள்வார்கள்.
அவர்கள் முறியடிக்கப்படுவது மட்டும் போதாது, அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்க வேண்டும் என்று மிகச்சரியாகவே இங்கு சொல்லப்பட்டது. நாட்டின் தொழிலாளர்களைப் பார்த்து, சாமான்ய மக்களைப் பார்த்து, அவர்களின் ஜனநாயக விருப்பத்தைப் பார்த்து அவர்கள் அச்சம் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கங்கள் மக்கள் அச்சப்பட வேண்டும் என்று விரும்புகின்றன; ஆனால் ஜனநாயத்தில் அரசாங்கம்தான் மக்களைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையின் முன், நேர்மையின் முன், உழைக்கும் மக்களின் குரலின் முன் இந்த அரசாங்கம் அச்சப்பட்டாக வேண்டும். நமது இயக்கம் அந்த அச்சத்தை உறுதி செய்யட்டும். நாம் இப்போது வேண்டாம் என்று சொல்கிற கொள்கை கள் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என நமக்குத் தெரியும். தனியார்மயக் கொள்கைகள் நம் மீது திணிக்கப்பட்டு நாடு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த நாட்டின் நிலம், நீர், வனம் எல்லாம் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. நமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு மிகச்சில முதலாளிகள் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. 20, 30 ஆண்டுகளாக இது நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, நாட்டில் உள்ள தொழிலாளர்களும் இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் நம்முடன் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். வருகிற புத்தாண்டில், ஜனவரி 8, 9 தேதிகளில் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட, அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் அனைவரும் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் பேரணியில் நீங்கள் நாட்டு மக்கள் மத்தியில் பேசியதுபோல், தொழிலாளர்களும் 2019, ஜனவரி 8, 9 தேதிகளில் நாட்டு மக்கள் மத்தியில் பேசப் போகிறார்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உறுதியாக நின்றதுபோல் நீங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என நான் வேண்டு கோள் விடுக்கிறேன். இப்படியான நாட்டின் தொழிலாளர் வர்க்கம் மத்தியில் ஒரு பரந்து விரிந்த, உறுதியான ஒற்றுமை கட்டியெழுப்பப்படும். இந்த ஒற்றுமையைத்தான் ராமர் கோயில் போன்ற பிளவுவாத பிரச்சனைகள் கொண்டு அவர்கள் உடைக்கப் பார்க்கிறார்கள்.
தென்னிந்தியாவில் சபரிமலையில் கோயில் பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்க அவர்கள் தயாராக இல்லை. இங்கு அவர்கள் அயோத்தி பிரச்சனையை எழுப்புகிறார்கள். எப்போதெல்லாம் தேர்தல்கள் வருகின்றனவோ அப்போதெல்லாம் அவர்கள் கோயில் பிரச்சனையை எழுப்புகிறார்கள். நவம்பர் 25 அன்று அம்பானியின் விமானத்தில் மகாராஷ்டிராவில் இருந்து பறந்து அயோத்திக்கு வந்தார்கள். அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றார்கள். உத்தரபிரதேசத்தின் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா வுக்குப் போனால், பீகாரின் தொழிலாளர்கள் குஜராத்துக்குப் போனால், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். இன்று அதே தலைவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து அயோத்திக்கு அம்பானியின் விமானத்தில் வந்து அயோத்தியில் கலகம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அயோத்தி அவர்களுக்கு சரியான பதிலடி தந்துவிட்டது. அவர்களது அயோத்தி பிரச்சாரம் தோற்றுப் போனது; தங்கள் உரிமைகளுக்காக குரலெழுப்ப விவசாயிகள் டில்லிக்கு வந்துவிட்டார்கள்.
வரும் நாட்களில் நாட்டின் அரசியல் கோயில் பற்றி பேசுவதாக இருக்கக் கூடாது. விவசாயிகளின் பிரச்சனைகள், தொழிலாளர்களின் உரிமைகள், பெண்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவம், மாணவர், இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை மய்யங்கொண்டதாக அரசியல் இருக்க வேண்டும்.
200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இந்த பொது மேடைக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது, கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த இயக் கத்தின் மிகப் பெரிய சாதனை ஆகும். நாட்டில் ஓர் அரசியல் சக்தியாக மாறியிருக்கிற இந்த பரந்து விரிந்த விவசாயிகள் ஒற்றுமை, ஜனநாயகத்தையும், அரசியல்சட்டத்தையும் பாதுகாக்க பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவதில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்த சக்தியை கட்டியெழுப்பி பேணிக் காக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். ஜெய் பீம். செவ்வணக்கம்.
விவசாயிகள் ஒற்றுமை நீடூழி வாழ்க!