பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?
நாங்கள் சாகவோ?
வருகிற கல்வியாண்டில் 9 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கிற 1,324 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை, தலைமை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
33 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. இந்த 1,357 பள்ளிகளை மூடிவிட அரசு தயாராகிறது.
சாமான்ய மக்களின் பிள்ளைகளின் எதிர் காலத்தில் மண் போடும் நடவடிக்கை இது. அருகில் உள்ள தனியார் பள்ளிகளை இந்தப் பள்ளிகளுடன் இணைத்து அங்கிருக்கும் மாணவர்களின் கட்டணக் கல்வியை கட்டணமில்லா கல்வியாக்கி, அங்குள்ள ஆசிரியர்களை அரசு ஆசிரியர்களாக்கி, இந்தப் பள்ளிகளின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தி, இன்னும் பல ஆசிரி யர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி வேலை வாய்ப்பு தந்து.... இப்படி நிறைய செய்யலாம். எதிர்க் கட்சிகள் உட்பட எல்லோரிடமும் கருத்துக் கேட்கிறாராம் அமைச்சர். உங்களுக்கு தெர்மாகோல் விட மட்டும்தான் தெரியும் என்றால் ஓடி விடுங்கள். எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் மண் போடாதீர்கள்.
வட மாவட்டங்களில் மட்டும் 5,472 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதென அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார். அரசு தரும் கல்வியை மேம்படுத்துவதற்குப் பதில், காலிப் பணியிடங்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் என அதற்கு அழுத்தம் தருவதையே கொள்கையாகக் கொண்டு தனியார் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சிகளையே தொடர்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளை நடத்த திறனற்ற, மனமற்ற பழனிச்சாமி அரசு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கு வதற்கான டென்டர் விடுவதில் ரூ.520 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 1,300க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுபவர்கள், ஸ்மார்ட் வகுப்பறை பற்றி ஏன் அக்கறை காட்டுகிறார்கள் என்று இப்போது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சீர்குலைத்துவிட்டார்கள். இப்போது மீதமிருப்பதையும் அழித்துவிட, அதில் உள்ள நிதியை சுருட்டிவிட தீவிரம் காட்டுகிறார்கள். எதிர்கால தலைமுறைகளை இருட்டில் தள்ளப் பார்க்கிறார்கள். இந்தக் கொள்ளையை இனியும் அனுமதிக்கக் கூடாது.