தமிழக தொழிலாளர் வர்க்க இயக்க முன்னோடிகளான பிரிக்கால் தொழிலாளர்கள் மீது மீண்டும் ஒரு 302
துணை முதலமைச்சர் தலையீட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளையும் மதிக்காத பிரிக்கால் நிர்வாகம்
உழைத்துக் கொடுத்த தொழிலாளர்களை, இன்றைய ரூ.5,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கித் தந்த தொழிலாளர்களை, அவர்களது குடும்பங்களை துன்புறுத்துவதில், இன்னும் மன்னர் காலத்து மனநிலையிலேயே இருக்கும் பிரிக்கால் நிர்வாகம், தனி இன்பம் காண்கிறது
. அதற்காக புதிய புதிய வழிகளை கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறது. அடக்கு முறைக்கு அஞ்சிட மாட்டோம், அடிபணிந்து கெஞ்சிட மாட்டோம் என்று தொழிலாளர்கள் முடிவு செய்து ஏஅய்சிசிடியு தலைமையில் முன் செல்லத் துவங்கிய இந்த பதினோரு ஆண்டு காலத்தில், இந்தத் துன்புறுத்தலை பிரிக்கால் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 3, 2015 பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு நாள். அன்றுதான் பிரிவு 302 பொய் வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டு பிரிக்கால் தொழிலாளர்கள் எட்டு பேர் சிறை சென்றார்கள். இன்னும் இரண்டு பேர் ஆயுள் தண்டனையில் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். அவர்கள் சிறை சென்ற மூன்றாவது ஆண்டு நாளான டிசம்பர் 3, 2018 கூட பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டத்தில் முக்கியமான ஒரு நாளாக மாறியுள்ளது.
2018 ஜ÷லை முதல் அடுத்த ஊதிய உயர்வு தர வேண்டிய நிலையில் பெரும்பான்மை பிரிக்கால் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள, அவர்கள் கொண்டாடுகிற, ஏஅய்சிசிடியு தலைமையிலான சங்கத்துடன் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது என நிர்வாகம் முடிவு எடுத்துவிட்டது. நெருக்கடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்தபோது, விவசாயிகள் நலன் காக்க வலியுறுத்தி 2017 ஏப்ரலில் தமிழக எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த ஒரு நாள் முழுவேலை நிறுத்தத்தில் பிரிக்கால் தொழிலாளர்கள் முறையான அறிவிப்பு தந்து கலந்து கொண்டனர். சமயம் பார்த்துக் கொண்டிருந்த பிரிக்கால் நிர்வாகம் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள் மீதான தனது வேட்டையை துவங்கியது. சிறுதுளி என பெயரில் நீராதாரம் காப்பதாக, விவசாயம் காப்பதாக வேடமிடும் பிரிக்கால் நிர்வாகம், செத்து மடியும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பளப் பிடித்தத்தை பரிசாகத் தந்தது.
இந்த தண்டனைக்கு எதிர்ப்பு காட்டாமல் இருக்க முடியுமா? 2017 ஏப்ரலில் நடந்த இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அந்த எதிர்ப்புக்கு தண்டனை, அந்தத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த எதிர்ப்புக்கு தண்டனை என சங்கிலித் தொடராக அடுத்தடுத்த தண்டனை நடவடிக்கைகளை பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது ஏவி, தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தம் செய்வதை நோக்கித் தள்ளியது. 2017 ஏப்ரல் பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பிறகு ஒரு நாள் கூட பிரிக்கால் தொழிலாளர்களுக்கு சாதாரணமான ஒரு நாளாகக் கழியவில்லை. பிரிக்கால் தொழிலாளர்கள் மீது பிரிக்கால் நிர்வாகத்துக்கு அப்படி ஒரு வன்மம்.
வேலை நிறுத்த அறிவிப்பு தரப்பட்ட போது, வேலை நிறுத்தம் நடக்கும் ஒவ்வொரு நாளைக்கும் எட்டு நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் மிரட்டியது. வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய பின், தொழிலாளர் துறையில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு வராமல் இருப்பது, வந்தால் அரை குறை கருத்துகள் சொல்வது என இழுத்தடிக்கும் உத்தியை கையாண்டது. சீருடைப் படியை நிறுத்தி வைத்தது. சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு, தனது விசுவாசத் தொழிலாளர் களுக்குத் தந்ததை விட ரூ.40,000 வரை குறைவான போனஸ் தந்தது.
நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு வரவ ழைக்கவே பிரிக்கால் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்த நேர்ந்தது. கோவையிலேயே நடக்க வேண்டியிருந்த ஒரு பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கக் கூட தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்த நேர்ந்தது. தொழிலாளர் துறை என்ற பெயர் கொண்ட முதலாளிகள் ஆதரவு துறை, நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு வர வைக்க, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தொழில் அமைதியை நிலை நாட்ட அவசியமான அறிவுரையை நிர்வாகத்துக்கு வழங்க, இந்த கால கட்டத்தில் நடந்த யமஹா, என்பீல்ட், எம்எஸ்அய் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் நடந்தது போல, பொருத்தமான ஆர்வம் காட்டவில்லை.
யமஹா, என்பீல்ட், எம்எஸ்அய் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அந்தந்த நிர்வாகங்களுக்கு அறிவுரை தந்ததுபோல், பிரிக் காலில் தர வாய்ப்பில்லை என்று தொழிலாளர் துறையின் அணுகுமுறை இருப்பதால்தான், அரசாங்கம் தனக்குச் சாதகமாக இருப்பதாக பிரிக்கால் நிர்வாகம் கருதுகிறது. அதற்கேற்ப தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்கிறது.
தொழிலாளர்கள் தவறு செய்து வீழ்வார்கள் அல்லது சோர்ந்து போய் வீழ்வார்கள், மண்டியிட்டு வேலை நிறுத்தத்தை முடித்துக் கொள்வார்கள் என்று பிரிக்கால் நிர்வாகம் எதிர்ப்பார்த்தது. இரண்டையும் தீவிரப்படுத்த அடுத்தடுத்த தாக்குதல் தொடுத்தது. தொழிலாளர்கள் கவுரவமாக போராட்டத்தை முடித்துக் கொண்டு ஆலைக்குள் தலை நிமிர்ந்து செல்ல மட்டுமே தயாராக இருந்தார்கள். 144 பேருக்கு பகுதி கதவடைப்பு செய்யப்பட்டபோது, மன்னிப்பு கடிதம் எழுதித்தந்துவிட்டு அவர்கள் வேலைக்கு வரட்டும் என்று முதலில் சொன்ன நிர்வாகம், தொழிலாளர்கள் தங்கள் சட்டபூர் வமான போராட்டங்களை தீவிரப்படுத்தியபோது, அப்படி எந்த நிபந்தனையும் இன்றி அந்த பகுதி கதவடைப்பை ரத்து செய்தது.
பிரிக்கால் தொழிலாளர்கள் தங்களது கடுமையான வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஊடேயே, போராட்டத்தில் இறங்கிய யமஹா, என்பீல்ட் தொழிலாளர்களைச் சந்தித்தார்கள். ஒருமைப்பாடு தெரிவித்தார்கள். தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கும் நிலையாணைகள் திருத்தச் சட்டத்துக்கு விதிகள் இயற்றக் கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு, நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தோழர் குமாரசாமி தலைமையில் காலவரையற்ற பட் டினிப் போராட்டம் நடத்தினார்கள்.
பிணையில் வெளியில் வந்து மீண்டும் தங் கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். சட்டமன்ற உறுப்பினரை, அமைச்சரை, துணை முதலமைச்சரை, தொழிலாளர் செயலாளரை, ஆணையரை சந்தித்தார்கள். தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நிர்வாகத்துக்கு பொருத்தமான அறிவுரைகள் தர தலையீடு செய்ய வலியுறுத்தினார்கள்.
100 நாட்களுக்கும் மேல் நடந்த இந்தத் தொடர்ச்சியான விடாப்பிடியான முயற்சிகளுக்குப் பிறகு, துணை முதலமைச்சர் தலையீட்டின் பேரில், நவம்பர் 29 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்து அங்கு வழங்கப்பட்ட, இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட அறிவுரையின் அடிப்படையில் 103ஆவது நாள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு, எப்போதும் அமைதியையே விரும்பும் தொழிலாளர்கள் டிசம்பர் 3 அன்று பணிக்குத் திரும்பினார்கள். பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இருக்காது, இந்த சங்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஒப்புக்கொண்ட நிர்வாகம், மீண்டும் ஆலைக்குள் சென்ற பிரிக்கால் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தந்தது.
302 பேருக்கு மகாராஷ்டிரா, உத்தர்கண்ட், ஆந்திரா மாநிலங்களில் உள்ள ஆலைகளில்தான் வேலை, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இல்லை என்றது. கோவை ஆலைகளில் அடிக்கடி வேலை நிறுத்தம் நடப்பதால், வேறு வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் உற்பத்தியை வேறு ஆலைகளுக்கு மாற்றினால்தான் வேலை தருவதாக வாடிக்கையாளர்கள் சொல்வதாகவும் அதனால் உற்பத்தியை வெளி மாநில ஆலைகளுக்கு மாற்றிவிட்டதாகவும் அதனால் கோவை ஆலைகளில் தற்போது வேலை இல்லை என்றும் அதனால் தொழிலாளர்களை வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற் றம் செய்வதாகவும் காரணங்கள் சொன்னது. நீ வேலை நிறுத்தம் செய்தாய், அதனால் உன்னை தண்டிப்பதற்காக பணியிட மாற்றம் செய்கிறேன் என்று நேரடியாகத்தான் நிர்வாகம் சொல்கிறது. இந்த பணியிட மாற்றம் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்ததால் அவர்களுக்கு நிர்வாகம் தந்துள்ள தண்டனை.
கோவை பிரிக்கால் ஆலைகளில் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் பிரிக்கால் நிர்வாகம் ஈடுபடுத்துகிறது. நாளும் உற்பத்தி நடக்கிறது. ஷிப்ட் ஷிப்டாக உற்பத்தி நடக்கிறது. அப்படியிருக்க 302 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு பணி இல்லை என்று நிர்வாகம் எப்படிச் சொல்ல முடியும்?
இது அப்பட்டமான சட்டவிரோதமான பழிவாங்கும் நடவடிக்கை. துணை முதலமைச்சர் அறிவுறுத்தலில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தைகளை மதிக்கவில்லை என்றால் நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் வலுவான ஆதரவு இருக்கிறது என்றுதான் முடிவுக்கு வரவேண்டியுள்ளது. செய்யாத குற்றத்துக்கு தொழிலாளி சிறை வரை செல்ல நேர்கிறது. ஆனால் முதலாளி திட்டமிட்டு சட்டமீறல் செய்யும்போது, அது பற்றி புகார் எழுப்பினாலும், போராட்டம் நடத்தினாலும் அதற்காக முதலாளிகள் யாரும் எந்த தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவதில்லை.
இந்த பணியிட மாற்றம் தொழிலாளர்களை மீண்டும் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டும் என்று நிர்வாகம் நம்புகிறது. இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ள தேதியும் (டிசம்பர் 3) பணியிட மாற்ற வடிவில் தண்டனை தரப்பட்டுள்ள தொழிலாளர் எண்ணிக்கையும் (302) நிர்வாகம் எந்த அளவுக்கு தொழிலாளர்கள் துன்பத்தில் இன்பம் காண்கிறது என்பதை அய்யத்துக்கு இடமின்றி மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த தேதி, இந்த எண்ணிக்கை மூலம் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு, உங்களை ஒழித்துக்கட்டுவதுதான் எனக்கு முதல் வேலை என்று செய்தி சொல்கிறது.
பிரிக்கால் தொழிலாளர்கள் இப்போது பழி வாங்கும் பணியிட மாற்ற நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தங்கள் அடுத்தச் சுற்று ஓட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். காலில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்ற குண்டு கட்டப்பட்டுள்ளது. சமமற்ற போட்டி. ஆடு களமும் ஒரு பக்கம் சாய்வானது. நவதாராளவாதக் கொள்கைகள் தொழிலாளர்களை வேட்டையாடும்போது போராட்டம் நடத்துவதே வெற்றிதான். போராட்டத்தில் வெற்றி பெறுவது போனஸ்தானே தவிர இறுதியல்ல. மூர்க்கமான மூலதனத்துக்கு எதிரான பிரிக்கால் தொழிலாளர் நடத்தும் வீரமிக்க போராட்டம் வெல்லட்டும்.