இருள்சூழ் காவிரிப் படுகையில்
புயலுக்குப் பின் அமைதி இல்லை
காவிரிப் படுகையில் கஜா புயலுக்குப் பின் அமைதி இல்லை.
கொந்தளித்துப் போயுள்ளது. மின்கம்பங்கள் மாற்றுவது தவிர, வேறு நிவாரணப் பணிகளை அடிமை ஊழல் பழனிச்சாமி அரசு செய்வதாக மக்களுக்குத் தெரியவில்லை. காவிரிப் படுகை கிராமங்கள் இருளில் உள்ளன. மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். வீடு திரும்பியவர்களும் இரவு நேரங்களில் படுத்துக் கொள்ள இடமில்லாமல் முகாம்களுக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அந்த மதிய உணவு? அதைக் கூட குழந்தைகளுக்கு உடனே தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
புயல் பாதித்து துவக்க நாட்களில் எஸ்சி முகாம்களை அடையாளப்படுத்தி அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததற்காக வருத்தப்பட்டோர் பலர் உண்டு. கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் ஒரு கிராமத்தில் எஸ்சி மக்கள் வாழும் பகுதியில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியின் ஆதிக்க சாதிப் பிரிவினரும், எந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்களோ, அந்தப் பகுதிக்குள் வந்து வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றார்கள். இதில் திருப்தி அடைய எதுவுமில்லை. புயலை விட, பழனிச்சாமி அரசின் குற்றமய அலட்சியம் மக்களை வாட்டுவதன் வெளிப்பாடு இது.
இந்தப் புயல் எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டது. எங்களையும் கொண்டு போயிருக்கலாம் என்று திருக்குவளை அருகில் உள்ள சூரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொன்னது நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அந்தப் பகுதியில் இருந்தும் ஒரு 10 கி.மீ தொலைவில் வல்லம் என்ற ஒரு கிராமத்தில் இரவு 8 மணிக்கு மேல் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காகக் காத்திருந்த மக்கள் முகங்களில் இருந்த துயரம், தவிப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரமும் தவிப்பும் சீற்றமாக மாறும்.
இன்னும் சேதம் பற்றிய முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை. புதுக்கோட்டை, கறம்பக்குடி ஒன்றியத்தில் 24 கிராம நிர்வாக அலுவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 11 பேர் மட்டுமே இருப்பதால், கணக்கெடுப்பு முதல் எந்த நிவாரணப் பணிகளையும் முழுமையாகப் பார்க்க முடியவில்லை என்று அதிகாரி கள் தரப்பில் புலம்புகின்றனர். இங்கு மட்டுமே 2 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரில் தரப்பில் சொல்லப்படுகிறது. மக்கள் திரண்டு போராடினால்தான் அவர்கள் மீது கவனம் திரும்பி அரசு ஏதாவது செய்யும் என்ற நிலைமையில்தான் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு வைத்திருக்கிறது. நல்லெண்ணம் கொண்டவர்கள் தரும் நிவாரணப் பொருட்கள்தான் வாரத்தின் சில நாட்களுக்கு உணவுத் தேவையை நிறைவேற்றுகின்றன.
சாலை வசதிகள் சரியில்லாத, தூரத்து கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வது பெரிய சவாலாக இருக்கிறது. எடுத்துச் செல்லும் வழி நெடுக பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். நிவாரண வாகனங்கள் என்று தெரிந்தால் கூடுகிறார்கள். அவர்களைக் கடந்து செல்வது கொண்டு செல்பவர்களுக்கும் வேதனையை தருகிறது. ஏதோ ஒரு தொலை தூர பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டால் அங்கு மக்கள் மத்தியில் அதை விநியோகிப்பதும், ஊருக்கே உணவு தந்தவன், உணவுக்காக கை ஏந்துவதைப் பார்ப்பதும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அனுபவிக்கிற கொடுமை.
பாதிக்கப்பட்ட மக்களின் கவுரவத்தைக் காவு கொடுக்கிற அரசு என்ன அரசு? முதலமைச்சர் சாலையோரக் கடையில் ஒரு நாள் தேநீர் அருந்துவதும் அடிகுழாயில் தண்ணீர் அடித்துக் குடிப்பதும், அவரைச் சுற்றி வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நடப்பவர்களுடனும் சேர்த்து, அதை ஒளிப்படமாக்கி போடுவதும், பிறகு புன்னகை மாறாமல் தொலைக்காட்சியில் பேட்டி தருவதும்.... இதற்கெல்லாம் கொடூரமான மனநிலை வேண்டும்.
மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு தங்களால் ஆன உதவி செய்ய நல்லெண்ணங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல ரயில்வே நிர்வாகம் ஒத்துழைக்கிறது என்று செய்தி. ஆனால் நிலைமை அதற்கு எதிரானது. குமரியில் இககமாலெ தோழர்கள் மக்கள் மத்தியில் திரட்டிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தஞ்சைக்கு ஏற்றிச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த ரயில்வே நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. நிவாரணப் பொருட்களுடனேயே, ரயில் நிலையத்திலேயே இகக மாலெ தோழர்கள் ஆர்ப்பாட்டம், பிறகு கைது, பிறகு பேச்சுவார்த்தை என கெடுபிடிகளுக்குப் பிறகே, நிவாரணப் பொருட்கள் கட்டணமின்றி தஞ்சை சென்று சேர்ந்தன.
அமைச்சர்கள் தங்கினார்கள், தொங்கினார்கள், நிவாரணப் பணிகளை நேராகப் பார்த்தார்கள் என்கிறார்கள். அமைச்சர்கள் ஒரு சில நாட்கள் முகாமிட்டிருந்த இடத்துக்கு வந்து நியாயம் கேட்டவர்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிக்கு முதலுதவியாக சில விசயங்கள் நடந்தன. பெரும்பான்மையான பாதிக்கப்பட்ட மக்கள் இந்த குறைந்தபட்ச நிவாரணத்தை கேட்டுப் பெறும் நிலையில் கூட இல்லாதவர்கள்தான்.
புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு இன்னும் அறிக்கை தரவில்லை. மாநில அரசிடம், தான் கேட்டிருந்த விவரங்களை மாநில அரசு தராததால்தான் தாமதம் என்று சொல்கிறது. மத்திய குழு வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது காலில் விழ வைத்து தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். வஞ்சகர்கள். மக்கள் எப்போதும் இவர்கள் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ரூ.354 கோடி ஒதுக்கப்பட்டதாக செய்திகளும் வந்தன.
மறுவாழ்வு, மறுகட்டமைப்பு என்ற சொற்கள் கொண்டு, கஜா புயல் மறுகட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் புத்துயிர்ப்பு திட்டம் என்ற பெயர் வைத்து ஒரு குழு அமைப்பதாக பழனிச்சாமி அரசு டிசம்பர் 3 அன்றுதான், புயல் அடித்து 18 நாட்கள் கழித்துத்தான் சொன்னது. அந்த 18 நாட்களும் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளக் கூட பழனிச்சாமி அரசு முயற்சி செய்யவில்லை. வேதாரண்யத்தில் அமைச்சர்களை விரட்டிய மக்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ய மட்டும் இந்த நெருக்கடி நேரத்தில் கூட தவறவில்லை. 63 பேர் புயலால் இறந்து விட்டார்கள் என்று சொன்ன அரசாங்கம், இப் போது 52 பேர்தான் என்று எண்ணிக்கையை குறைக்கிறது. மற்றவர்கள் எப்படி இறந்தார்கள் என்று விரைவில் சொல்வார்களாம். இந்த ஆய்வை மட்டும் எப்படி உடனே நடத்தினார்கள்?
இப்போது, நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகள் பற்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட பொது நல மனு வுக்கு பதில் அளிக்கும்போது நிவாரணப் பணிகளுக்கு ரூ.1401.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிக்கையில் சொல்கின்றனர். டிசம்பர் 3 அன்று குழு அமைத்தவர்கள், டிசம்பர் 12 அன்று நீதிமன்றத்தில் ரூ.1401 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். பத்து நாட்களில் இந்தத் தொகையை எப்படி எங்கு செலவழித்தார்கள் என்று நமக்குத் தெரியவே வரப் போவதில்லை. இந்த ரூ.1,401 கோடியில் மத்திய அரசு அறிவித்த ரூ.354 கோடியும் அடங்குமா? அல்லது இது வேறு, அது வேறா? நவம்பர் 28 அன்று வேதாரண்யத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சொன்னார். அது என்ன கணக்கு? அது இந்த ரூ.1,401 கோடிக்குள் உள்ளதா? நவம்பர் 28க்குப் பிறகு 14 நாட்களில் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் ரூ.100 கோடி கூடுதலாவது எப்படி? நவம்பர் 19க்குப் பிறகு டிசம்பர் 3 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.48.65 கோடி வந்துள்ளது. டிசம்பர் 2 அன்று மட்டும் ரூ.8.53 கோடி வந்துள்ளது. இந்தத் தொகையும் ரூ.1,401 கோடிக்குள் உள்ளதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் சென்று சேரவில்லை என்பதுதான் நமக்குத் தெரிகிறது. பிணங்களை தோண்டியெடுத்துக் கூட தின்பவர்கள் இவர்கள்.
கோழிக்கு இழப்பீடு ரூ.100 என்பதைப் பெற கோழி இழந்த அந்த குடும்பம் கோழியின் உடற்கூறாய்வு அறிக்கையை தர வேண்டும். எப்படி எங்கள் நிர்வாகம்? எப்படி எங்கள் நிவாரணம்? இது ஆடு, மாடு அனைத்துக்கும் பொருந்தும். ஈரத்தில் நனைந்து போய் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் கொஞ்சமும் நெஞ்சில் ஈரமற்று நடந்து கொள்கிறது அடிமை பழனிச்சாமி அரசு.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை தங்களால் முடிந்த அளவுக்கு தமிழக மக்கள் தந்துவிட்டார்கள். இனி அவர்கள், அவர்கள் வாழ்க்கையை இயல்பாக வாழ வழி செய்யப்பட வேண்டும். வாழ்நாள் உழைப்பில் சேமித்த அனைத்தும் போய்விட்டது. இனி புதிதாக வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். வேலை வேண்டும். நிலம் வேண்டும். வீடு வேண்டும். விவசாயம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி தடைபடக் கூடாது. சீதனத்துக்கு என்று பேசி வைத்திருந்த வாழையும் தென்னையும் புயலில் போனதால் திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் துரிதமாக நடந்தாக வேண்டும். இவை நடக்க வேண்டும் என்றால் அக்கறையற்று இருக்கும் தமிழக அரசாங்கத்தை செயல்படச் செய்ய வேண்டும். அதற்கும் போராட்ட அழுத்தம் வேண்டும்.
கஜா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாமல், வீடு, வாழ்வாதாரம் என அனைத்தும் இழந்து நிற்கும் மக்களுக்கான நிவாரண, மறுவாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்க போராட்டங்கள் கட்டமைக்க வேண்டும் என்று டிசம்பர் 1 அன்று தஞ்சையில் நடந்த இககமாலெ மாநில நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, டிசம்பர் 3 அன்று நடந்த புதுக்கோட்டை மாவட்ட கட்சி ஊழியர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றே நாட்கள் தயாரிப்பு வேலைகள் நடந்து, டிசம்பர் 7 அன்று கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கை மனுவுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டனர். டிசம்பர் 8 அன்று கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலத்தில் 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு வாழ்வாதாரத்தை, வாழ்வை மீட்க துரித நடவடிக்கைகள் வேண்டும் என வலியுறுத்தினர்.
டிசம்பர் 1 அன்று நடந்த மாநில நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்தபடி, டிசம்பர் 4 அன்று கும்பகோணத்தில் அவிகிதொசவும் அவிமசவும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தின.
டிசம்பர் 12 அன்று புதுக்கோட்டையின் குன்றாண்டார்கோயில் ஒன்றியத்தின் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண நடவடிக்கைகள் கோரி மனுக்களை அளித்தனர்.
கூருணர்வும் அக்கறையும் சற்றும் இல்லாத பழனிச்சாமி அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் போராட்டங்கள் தொடர வேண்டியுள்ளது.
(டிசம்பர் 2 முதல் 5 வரை, நாகை, புதுகை மாவட்டங்களின் சில கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில், இககமாலெ தோழர்கள் நிவாரணப் பணிகளும் அடுத்த கட்ட போராட்ட தயாரிப்புகளும் மேற்கொண்டபோது கண்ட, கேட்ட விசயங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது)
உடனடி கோரிக்கைகள்
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
வீடிழந்தவர்களுக்கு, வீடற்றவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.
வருமான இழப்பும் வேலைப் பாதிப்பும் நீங்கி சகஜ நிலை திரும்பும் வரை இழப்பை ஈடு செய்ய ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.30,000 தரப்பட வேண்டும்.
சகஜ நிலை திரும்பும் வரை ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மாதம் 50 கிலோ அரிசி, 5 லிட்டர் மண்ணெண்ணெய், 2 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட வேண்டும்.
உழவர் பாதுகாப்பு அட்டை, நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் வங்கிக்கடன், சுயஉதவிக் குழு கடன் மற்றும் தனியார் கடன்களை மதிப்பிட்டு எல்லா கடன்களையும் அரசே ஏற்று கட்ட வேண்டும். கட்டாயமாக கடன் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தென்னை, முந்திரி, வாழை, கரும்பு, மக்காச் சோளம், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்கள், மரங்கள், செடிகளுக்கும் சந்தை மதிப்பில் நட்ட ஈடும் மறுசாகுபடி செய்ய 100% மானியமும் தரப்பட வேண்டும்.