டிசம்பர் 18, 2018 உறுதிமொழி
பாசிச பாஜக ஆட்சியை விரட்டியடிப்போம்
இந்தியாவை பாதுகாப்போம்
இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்
இந்தியாவின் ஜனநாயகம் விரும்பும் மக்களுக்கும் மோடி ஆட்சிக்கும் இடையிலான போரின் வரையெல்லைகளை 2018 கூர்மைப்படுத்தியுள்ளது.
பாசிச சக்திகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளபோது, பாசிசத்துக்கும் ஜனநாயத்துக்கும் இடையில் நடக்கும் இந்த இதிகாசப் போரில் ஓர் உறுதியான வெகுமக்கள் அறுதியிடலை நாம் காண முடிகிறது. தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமை, இந்திய அரசின் கொடூரமான ஒடுக்குமுறை, ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம், காவி கும்பல்கள் நடத்துகிற படுகொலைகள் என பல்வேறு துன்பங்கள் நசுக்குகிறபோதும், உத்வேகம் அளிக்கும் விதத்தில் மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். இது வரை பாஜக ஆட்சி நடந்த மூன்று மாநிலங்களில் பாஜக கண்டுள்ள தோல்வியில், வெகு மக்கள் எதிர்ப்பின் அறிகுறிகளை, அதன் வலிமையை தெளிவாகப் பார்க்க முடிகிறது. சட்டிஸ்கரில் கடுமையான தோல்வியையும் ராஜஸ்தானில் மிகப் பெரிய பின்னடைவையும் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய அடியையும் பாஜக சந்தித்துள்ளது.
எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க, ஆட்சியில் தொடர பாஜக மேற்கொண்ட மூர்க்கமான, வெறித்தனமான முயற்சிகளையும் மீறி, மக்கள் மத்தியில் இருந்த சீற்றமே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சட்டிஸ்கரில் நகர்ப்புற நக்சல் என்ற பூச்சாண்டி காட்டி காவிப் படையினர் கடுமையான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். யோகி ஆதித்யநாத் மூலம் விஷத்தனமான மதவெறி பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் மிகப்பெரும் அளவில் தோல்வியுற்றது. சங் பரிவாரும் சிவசேனையும் போட்டி போட்டு நடத்திய அயோத்தி பயணத்தை உத்தரபிரதேச மக்கள் நிராகரித்துவிட்டார்கள். மாறாக, விவசாய அமைப்புகளின் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு டில்லியில் நடத்திய விவசாயிகள் பேரணிதான் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. கோரக்பூர் முதல் கைரானா வரை, இப்போது சட்டிஸ்கர் முதல் தெலுங்கானா வரை உள்ள இந்திய மக்கள், காவிப் படையின் மதவெறி பாசிச இயக்கம் வேண்டாம் என்று உரக்கக் குரல் எழுப்பியுள்ளார்கள்.
மோடியின் ஆட்சிதான் இந்தியா இதுவரை பார்த்திராத மிகப்பெரிய பேரிடர் என நாட்கள் செல்லச் செல்ல இந்திய மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். பொருளாதாரம், சமூகம், ஜனநாயக நிறுவனங்கள், அரசியலமைப்புச் சட்டப்படியான ஆளுகை, ஒரு நவீன குடியரசாக நமது இருத்தல் என அனைத்தும் இந்தப் பேரிடரால் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது. இந்தப் பேரழிவில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதுதான், இந்த பாசிச கிரகணத்தில் இருந்து குடியரசை வெளியே கொண்டு வருவதுதான், ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட, நாட்டின் மீது பற்று கொண்ட இந்தியர் அனைவரும் எதிர்கொள்கிற சவால். இந்த உடனடியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முதல் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு என்ற சவால் வரை, ஜனநாயகத்தின் மிகவும் விடாப்பிடியான, உறுதியான, பாதுகாவலர் என்ற அடிப்படையில், இந்த கட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பெரும்பங்காற்ற வேண்டியுள்ளது.
வெல்லற்கரிய மோடி - ஷா இரட்டையர் என்ற புனைக்கதையை கட்டியெழுப்பிய கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது காங்கிரஸ் மீண்டெழுந்துள்ளது என்று பேசத் துவங்கியுள்ளன. இதுவும், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஓர் இந்து பிம்பத்தைப் பெற, முன்னிறுத்த முயற்சி செய்ததால்தான் என்று சொல்லப் பார்க்கின்றன. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை, மோடி தவிர்க்கப்பட முடியாதவர் என்பதைச் சுற்றி மேற்கொள்ள பாஜக முயற்சி செய்யும்; மக்களவைத் தேர்தல்களுக்கு முன் அச்சமும் மதவெறியும் தேசவெறியும் தோய்ந்த சூழலை உருவாக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும். ஆனால், ஜனநாயக சக்திகள் மத்தியில் வளர்ந்து வருகிற பாசிச எதிர்ப்பு உறுதியை பிரதிபலிக்கிற, அந்த உறுதியை வலிமையானதாக்குகிற 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் அனைத்தையும் நெருக்கமாகப் பார்த்தால், இந்த தேர்தல் மற்றும் அரசியல் மாற்றத்தின் ரகசியம், காங்கிரசின் இந்து அணுகுமுறையில் அல்ல, மாறாக, மாணவர்கள், வேலை வாய்ப்பில்லாதவர்கள், குறைகூலி பெறும், அவமானப்படுத்தப்படும் இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர பிரிவினர் என, மோடி - ஷா - யோகி ஆட்சியால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினரின் எதிர்ப்பின் தியாகம், துணிச்சல், ஒற்றுமை, போராட்ட உறுதி ஆகியவற்றில்தான் உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். இந்த எதிர்ப்புதான் 2019ல் மோடியின் பாசிச ஆட்சிக்கு இறுதி அடி தர வேண்டும். ஜனவரி 8, 9 தேதிகளில் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம் நாடு தழுவிய மக்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற புத்தாண்டின் துவக்கம் இதை விடச் சிறந்ததாக இருக்க முடியுமா?
1970களின் கொந்தளிப்பான காலங்களில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் ஊடே இகக மாலெ தன்னை மீட்டெடுத்தது. நெருக்கடி காலத்தில் கொடூரமான ஒடுக்குமுறை இருந்தபோதும், மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காக, கவுரவத்துக்காகப் போராடுவதில் உறுதியாக நின்றது. 1990களில் பாஜக அதன் பாசிச நிகழ்ச்சிநிரலை கட்டவிழ்த்துவிட்டபோது, ஒரு சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் எதிர்த்தாக்குதலை வடிவமைக்க கட்சி வெளிப்படைக் கட்சியானது. 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில் கொல்கத்தாவில் நடந்த அய்ந்தாவது காங்கிரசில் இருந்து, அதில் இருந்து ஆறாவது ஆண்டில் லக்னோவில் நடந்த மத்திய கமிட்டி கூட்டத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொள்ளும் வரை, தோழர் வினோத் மிஸ்ரா இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் இருக்கும் இந்த மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதில் தனது அனைத்து ஆற்றலையும் கவனத்தையும் செலுத்தினார். இககமாலெயின் இந்த புகழ்மிக்க மரபை, நமது எல்லா சக்தியுடனும் நாம் இன்று உயர்த்திப் பிடிக்க வேண்டும். பாசிசத்தை முறியடித்து மக்கள் ஜனநாயகத்தின் பாதையில் இந்தியாவை முன்செலுத்த முழுமையான பங்காற்ற வேண்டும்.
- இககமாலெ மத்திய கமிட்டி