COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய உள்சுவர்களால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையில் ஆழத்தில்
இருந்து வருகின்றனவோ
எங்கே விடாப்பிடியான முயற்சி
கச்சித நிலை நோக்கி
தன் கைகளைச் செலுத்துகிறதோ
எங்கே பண்டைய பழக்கம் என்ற
வறண்ட பாலை மண்ணில்
அறிவின் தெளிவான நீரோட்டம்
வழி தவறாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிவடையும்
சிந்தனையை செயலை நோக்கி
முன்னகர்த்தி வழிநடத்தப்படுகிறதோ
எந்தையே, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில்
எனது நாடு விழித்துக் கொள்ளட்டும்
ரவீந்திரநாத் தாகூர்

Search