நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் கவுரவத்திற்கும்
அதற்கு உள்ளிருந்து ஆபத்தா?வெளியிலிருந்து ஆபத்தா?
எஸ் .குமாரசாமி
நீதித்துறைக்கு நல்ல வெள்ளி அல்ல
தி வயர், காரவன், தி லீப்லெட், ஸ்க்ரோல் என்ற நான்கு பத்திரிகைகள், வெள்ளிக்கிழமை (19.04.2019) அன்று
, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம், வேலை நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தந்துள்ளது பற்றி தெரிவித்து, அவரது கருத்தைக் கேட்டனர்.
உச்சநீதிமன்ற செயலர் நாயகம், அவை ஆதாரமற்ற, அவதூறான, சதி வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் என பதில் தந்தார். அந்தப் பெண் ஊழியர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கும், தலைமை நீதிபதி தொடர்பான தனது புகாரை பிரமாண வாக்குமூலமாக 19.04.2019 அன்றே அனுப்பியிருந்தார். அந்த நான்கு ஊடகங்களும் புகாரையும் வந்த மறுப்பையும் பிரசுரம் அன்றே செய்தன.
நீதித்துறையை பிடித்தாட்டிய சனி
சனிக் கிழமை உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாள். ஆனால் 20.04.2019 அன்று, தரப்பினர், வழக்கறிஞர்கள், தலைப்பு விவரம் ஏதும் இல்லாமல், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை தாங்கும் அந்த முதல் நீதிமன்ற அறையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, சஞ்சீவ் கன்னா அமர்வத்தில், நீதித் துறை சுதந்திரத்தோடு தொடர்புடைய ஒரு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
சீஃப் ஜஸ்டீசும் சிட்டிசனும் சட்டத்தின் முன் சமமா, அதாவது தலைமை நீதிபதியும் குடிமகனும் சட்டத்தின்முன் சமமா என்ற கேள்வி, அன்று, நீதிமன்றத்தின் முன், தலைமை நீதிபதியாலேயே கொண்டு வரப்பட்டது. அன்று அந்த நீதிமன்ற அறையில், மத்திய அரசின் முதன்மை வழக்கறிஞர்களான சொலிசிட்டார் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் உட்பட பல வழக்கறிஞர்கள் இருந்தனர். அனைவருக்கும் வெள்ளிக் கிழமை ஊடகங்களில் வந்த செய்தி தெரிந்தே இருக்க வேண்டும்.
அரங்கேறிய விபரீத வினோதம்
தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் முன் இல்லாத வழக்கில் புகார்தாரராகி, மன்றத்தில் இல்லாத ஒரு பெண் ஊழியர் மீது குற்றம் சுமத்தி, தமது நன்நடத்தை பற்றி நற்சான்றிதழ் வழங்கி, தம் மீதான புகார்களில் சதி இருப்பதாக உணர்த்தி, மன்றத்தைவிட்டு வெளியேறி விட்டார். அவர் அமர்வத்தில் இருந்து விலகிக் கொள்வதாக (தங்ஸ்ரீன்ள்ங்), ஏதும் சொல்லவில்லை. நீதிபதிகள் அருண் மிஷ்ராவும் சஞ்சீவ் கன்னாவும், நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கிற, சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் செய்கிற, கட்டற்ற அவதூறான புகார்களை பிரசுரம் செய்வதில் நிதானம் காட்ட வேண்டியதை ஊடகத்தினரிடமே விட்டுவிடுவதாக உத்தரவு போட்டனர்.
துரத்தும் கேள்விகள்
மு ஒருவர் தம் வழக்கில் தாமே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற எளிய அடிப்படையான கோட்பாட்டை, தலைமை நீதிபதியே மீறலாமா?
முதலைமை நீதிபதி என்ற மனிதர் மீது குடிமக்களில் ஒருவர் சுமத்திய புகார், நீதித் துறையின் உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தை எப்படி பாதிக்கும்? தலைமை நீதிபதிதான் உச்சநீதிமன்றமா?
முதலைமை நீதிபதி தம் மீது புகார் சொன்ன பெண் ஊழியர் குற்றப் பின்னணி உள்ளவர், சதி நடக்கிறது, தாம் ஊழலற்றவர் என்றெல்லாம் சொன்னபோது, எவரொருவரையும் அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்க வாய்ப்பு தராமல் தண்டிக்கக் கூடாது என்ற கோட்பாடு மீறப்படவில்லையா?
முஇல்லாத வழக்கில், தலைமை நீதிபதி தாமே தரப்பினராகி ஒரு வழக்கு நடத்தி, அதில் அவரது சக நீதிபதிகள், தீர்ப்பு இல்லாத ஓர் உத்தரவை, தீர்ப்பு போல் கண்டு அஞ்சிட வேண்டிய ஓர் உத்தரவைப் போட்டது ஏன்? இந்த உத்தரவில் தலைமை நீதிபதி ஏன் கையொப்பமிடவில்லை?
முமாட்சிமை மிகுந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கோ, சொலிசிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கோ, 20.04.2019 சனிக் கிழமை நடப்புகள், உச்சநீதிமன்றத்தின் விசாகா தீர்ப்பு மற்றும் பாஷ் சட்டத்திற்கு (பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) புறம்பானவை என்று தெரியாமல் போனதா? பிரச்சனை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல, உச்சநீதிமன்ற பாலியல் துன்புறுத்தல் கமிட்டி விசாரிக்க வேண்டிய விஷயம் என்று, அந்த மன்றத்தில் ஒரு குரல் ஒலித்திருந்தால் கூட, அது நீதிமன்ற சுதந்திரத்திற்கு, கவுரவத்திற்கு மதிப்பு கூட்டி இருக்குமே?
புகாரும் எதிர்ப் புகாரும்
2014ல் உச்சநீதிமன்றத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதியால் அக்டோபர் 2018ல் தாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும், பணியிட மாற்றல்களுக்கு, பொருந்தாத அளவுக்கு அதிகமான வேலை நீக்க தண்டனைக்கு ஆளானதாகவும், தாமும் தமது கணவரும் நெருங்கிய உறவினரும் காவல் சித்ரவதைக்கும் குற்றவியல் வழக்குகளுக்கும் ஆளானதாகவும், தங்கள் வாழ்க்கையே பெரும் சோதனையாக மாறி அச்சுறுத்துவதாகவும், புகார் சொன்னார்.
புகாரை மறுத்தது மட்டுமல்லாமல் புகார் சொன்னவர் குற்றப் பின்னணி உள்ளவர் என்றும், புகாரே சதியின் பகுதி எனவும் தலைமை நீதிபதி சொல்லி இருந்தார். அதுபோக, உத்தவ் சிங் பெயின்ஸ் என்ற ஒரு வழக்கறிஞர், தலைமை நீதிபதி மீது புகார் தர, தமக்கு ரூ.1.5 கோடி தர முன்னாள் உச்சநீதிமன்ற ஊழியர் ரோமேஷ் சர்மா முயற்சி செய்ததாகவும், புகார் தந்தவர் உள்ளிட்ட வேலை நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற ஊழியர்கள், கார்ப்பரேட் சக்திகள், பணம் கொடுத்து தீர்ப்பு பெறும் சக்திகள், தலைமை நீதிபதிக்கு எதிராகச் சதி செய்த விவரங்கள் தமக்குத் தெரியும் எனப் பரபரப்பூட்டினார். சதியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு தொடர்புண்டு என அவர் சொன்னது பரபரப்பை அதிகரித்தது. தம் உயிருக்கு ஆபத்து, தம்மேல் பாலியல் வன்முறை புகார் வர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
அடுத்து நடந்தவை
தலைமை நீதிபதி, தம் மீதான புகார் பற்றி விசாரிக்கும் பொறுப்பு, தமக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். நீதிபதி போப்டே, தாமும் நீதிபதிகள் ரமணாவும் இந்திரா பேனர்ஜியும் புகாரை விசாரிப்போம் என்றார். நீதிபதி ரமணா விலகிக் கொள்ள, நீதிபதி இந்து மல்ஹோத்ரா குழுவில் சேர்க்கப்பட்டார். விசாரணைக் குழுவில் பெரும்பான்மை பெண்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை கூட, மாண்புமிகு நீதிபதி கள் துவக்கத்திலேயே கவனிக்கவில்லை. இப்போதும், சட்ட நியாயக் கோட்பாடுகள்படி, விசாரணைக் குழு, வெளியார், சுதந்திரமானவர்கள் கொண்டு அமைய வேண்டும். நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, வழங்கப்பட்டுள்ளது என்ற தோற்றமும் மிகவும் முக்கியம் என உச்சநீதிமன்றம் பல நேரங்களில் வற்புறுத்தி உள்ள விஷயம், விசாரணைக் குழு சேர்க்கையில் வெளிப்படவில்லை.
நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வம்
உத்தவ் சிங் பெயின்ஸ் புகாரும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பானது என்பதால், அந்தப் புகார், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா அமர்வத்திற்கு அனுப்பப்பட்டது. வழக்கு துவங்கியவுடன் நீதிபதி அருண் மிஷ்ரா, விசாரிப்போம் விசாரிப்போம், பிரச்சனையின் வேரை அறியும் வரை விசாரிப்போம் என்றார். இந்த தலைமை நீதிபதி அமைப்பு முறையை சுத்தப்படுத்த விரும்புகிறார், வேறு எந்த தலைமை நீதிபதியும் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க துணியவில்லை, இந்த தலைமை நீதிபதிக்கு மட்டுமே அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உள்ளது, இந்த தலைமை நீதிபதி நடவடிக்கை மேல் நடவடிக்கை எடுப்பதாக, நீதிபதி அருண் மிஷ்ரா தெரிவித்தார்.
இதே அமர்வத்தில் அடுத்த விசாரணை நாளில் நீதிபதி அருண் மிஷ்ரா, வழக்கறிஞர்கள் நிறைந்திருந்த, சிறு ஓசையும் கேட்காத நீதிமன்றத்தில், பணக்காரர்களும் சக்திவாய்ந்தவர்களும், போட்டு தாக்கியும் மிரட்டி அச்சுறுத்தியும் உச்சநீதிமன்றத்தைப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள், அவர்கள் நெருப்போடு விளையாடுவது அவர்களுக்கு தெரியவில்லை, இந்த நாடு உண்மையை அறிய வேண்டும், உச்சநீதிமன்றத்தை பணபலம் கொண்டு அரசியல் பலம் கொண்டு எவரும் நடத்த முடியாது, இந்த அமைப்பு முறையை எவராவது சுத்தப்படுத்த முயன்றால், ஒன்று அவர் கொல்லப்படுகிறார் அல்லது அவதூறுக்கு ஆளாக்கப்படுகிறார் என இடியாய் முழங்கினார். (இவை தி இந்து செய்திகள்).இவ்வளவையும் வாயால் சொல்லி முடித்த பிறகு, வழக்கறிஞர் உத்தவ் சிங் பெயின்ஸ் சொன்னவற்றை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடும் முன்பு, அந்த விசாரணையோடு நேரடியாக தொடர்புடைய கருத்துகளை நீதிமன்றம் சொல்வது முறைதானா? தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சதி பற்றிச் சொல்கிறார். நீதிபதி அருண்மிஷ்ரா, நீதியை வளைக்கப்பார்க்கும் முயற்சிகள், கொலை என்று பேசுகிறார். சிஆர்பிசி பிரிவு 39படி, குற்றங்கள் பற்றி, குடிமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பது, ஒருவேளை நீதிபதிகள் கவனத்துக்கு வராமல் போய்விட்டதோ! மாண்புமிகு நீதிபதிகளே, நீங்கள் அறிந்த உண்மையின் கனமும் சுமையும் உங்களுக்கு மிகுந்த மன அழுத்தம் தரும். அவற்றை நீங்கள் நாட்டோடு பகிர்ந்து கொள்ளுங்கள் எனக் கேட்டு, நாடு அவர்களுக்கு உதவ வேண்டும்.
நீதிபதி ஏ.பி.பட்நாயக், தமது விசாரணை, நீதிபதி போப்டே விசாரணைக் குழு விசாரித்து முடித்த பிறகுதான் துவங்கும் என்று சொல்லி உள்ளார். நல்லது. நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வம் இரண்டும் வேறுவேறு என்று சொல்லி உள்ளது. மிகவும் நல்லது. இப்போதும் பெண் ஊழியர் புகாரை, சுதந்திரமான வெளியாட்கள் கொண்டு, ஒரு பெண் தலைமையில் விசாரிக்கும் முடிவு எடுக்கப்பட்டால், அது மிகமிகமிக நல்லதாக அமையும்.
மத்திய அரசா உச்சநீதிமன்றத்திற்கு எதிராகச் சதி செய்கிறது?
20.04.2019 அன்று, தலைமை நீதிபதி கோகோயோடு, அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் அவருக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். மறு நாளே அருண் ஜேட்லி, தலைமை நீதிபதியின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் புகழ்ந்து விட்டு, இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மாபெரும் சதி என்றார். அவரது கருத்துகளை சற்று விரிவாகக் காண்பது நல்லது. ‘கடந்த சில வருடங்களில் நிறுவனங்களைச் சீர்குலைப்பவர்கள் பெரிய அளவுக்கு உறுதிப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தாண்டக் கூடாத எந்த சிவப்புக் கோடும் கிடையாது. இந்த சீர்குலைவு நபர்கள், பெரும்பாலும் இடதுசாரி, தீவிர இடதுசாரி கருத்துடையவர்கள். இவர்களுக்கு தேர்தல் அடித்தளமோ மக் கள் ஆதரவோ கிடையாது. ஆனால், இவர்கள் கல்வி நிறுவனங்களிலும் ஊடகங்களிலும் பொருந்தாத அளவுக்கு கூடுதல் செல்வாக்கு பெற்றுள்ளனர். பிரதான நீரோட்ட ஊடகத் துறையில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இத்தகைய நான்கு டிஜிட்டல் ஊடகங்கள் தலைமை நீதிபதிக்கு எதிரான பெண் ஊழியரின் புகாரை ஊதிப் பெரிதாக்கி உள்ளனர். நிறுவனங்களை அழிக்க பொய்யை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தகைய போக்கு பரவும். சமீப காலங்களில், தங்களோடு உடன்பட மறுக்கும் நீதிபதிகளுக்கு எதிராக இந்த நிறுவன சீர்குலைப்பாளர்கள் விடாப்பிடியாய்த் தாக்குதல்கள் தொடுக்கிறார்கள்’.
ஆக, இந்த விசயத்தில் மத்திய அரசிடம் இருந்து, நீதித்துறை சுதந்திரத்தைக் காக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா காலத்தில்
2017ல் நீதித்துறை ஊழல் புகார் ஒரு பிரச்சனையாக எழுந்தது. பணி மூப்பில் இரண்டாம் நிலையில் இருந்த நீதிபதி செல்லமேஸ்வர், முதல் அய்ந்து நீதிபதிகள் ஊழல் புகார் வழக்கை விசாரிக்க 09.11.2017 உத்தரவிட்டார். 10.11.2017 அன்று தலைமை நீதிபதி தாமே மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர், தாமே அமர்வங்களை அமைக்க முடியும் எனக் கொந்தளிக்கிறார். ஆமாமாம் என்ற பல வழக்கறிஞர்கள், நீதிபதி செல்லமேஸ்வர் செய்தது மிகவும் தவறு என்றனர். புகார்தாரர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பேசக் கூட முடியாத நிலையில் வெளியேறியதாகச் சொன்னார். நீதிபதி செல்லமேஸ்வர் அமைத்த அமர்வம், செல்லாது என உத்தரவிட்ட தீபக் மிஸ்ரா, வழக்கை புதிய அமர்வத்திடம் அனுப்பினார். 12.11.2017 தேதிய தி இந்து ஆங்கில நாளேடு தலையங்கம், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் குறைகள் இருப்பதாகவும், தலைமை நீதிபதி அவர் தொடர்பான வழக்கை அவரே விசாரிக்கிறார் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என எழுதியதோடு, உச்சநீதிமன்ற நடப்புக்கள் நீதிபதிகள் தொடர்பான ஊழல் புகாரின் மீதான சிபிஅய் விசாரணையை பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தியது.
15.11.2017 தேதிய தினமணி தலையங்கம், 10.11.2017 அன்று உச்சநீதிமன்றம் இதுவரை சந்தித்திராத சோதனையைச் சந்தித்தது என்றும் அங்கு ஏறத்தாழ 75 நிமிடங்கள் நிலவிய பதட்டம் உச்சநீதிமன்றத்தின் மீதான மரியாதையையும் நம்பிக்கையையும் சிதைப்பதாக அமைந்துவிட்டது என்றும் சொன்னது.
12.01.2018 அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து பணிமூப்பில் இரண்டு முதல் அய்ந்து வரையிலான இடங்களில் இருந்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் ஊடகங்களைச் சந்தித்தனர். முன் மாதிரி இல்லாத அந்த அசாதாரண சந்திப்பில், நீதிபதி லோயா மரண வழக்கை பணி மூப்பில் 10ஆம் இடத்தில் இருந்த நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வத்திற்கு ஒதுக்கியதையும் விமர்சனம் செய்தனர். மத்திய அரசுக்கேற்ப, தேர்ந்தெடுத்த அமர்வங்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன என்றனர்.
அன்று ரஞ்சன் கோகாய், தேசத்திற்கான தமது கடமையைச் செய்துவிட்டதாகச் சொன்னார். செல்லமேஸ்வர், உங்கள் ஆன்மாவை விற்றுவிட்டு முறைகேடுகள் பற்றி கேள்வி கேட்காமல் கவனப்படுத்தாமல் இருந்து விட்டீர்களா என்ற வருங்காலத்தின் கேள்விகளுக்கு நிகழ்காலத்தில் பதில் சொல்லிவிட்டதாகப் பெருமைப்பட்டார். நீதித்துறையின் நலன் கருதி பல விஷயங்களையும் சொல்லவில்லை என அன்று நால்வரும் சொன்னார்கள்.
மாட்சிமை மிகுந்த நீதிபதிகளே,
உச்சநீதிமன்ற நடப்புக்கள் பற்றி இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. உச்சநீதிமன்ற பார் அசோசியேசன், உச்சநீதிமன்ற அட்வகேட்ஸ் ஆன் ரிகார்ட் அசோஷியேசன், விமன் இன் கிரிமினல் லா அசோசியேசன், சென்னையின் 100 வழக்கறிஞர்கள், நீதிக்காகவும் உண்மையறியவும் குரல் கொடுத்துள்ளார்கள்.
நீதித்துறையின் சுதந்திரத்திற்கு, உள்ளுக்குள்ளிருந்தே ஆபத்து வரும்போது, உள்ளுக்குள்ளிருந்தே நியாயம் கேட்கும் குரல்கள் எழும் என நம்புவோம்.