COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

உடல் மண்ணுக்கு உயிர் ஜியோவுக்கு
மோடி உரக்கச் சொல்கிறார் நாட்டுக்கு

நட்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவ னத்தை மீட்க நிர்வாகமும் தொலைதொடர்பு துறையும் துரிதமான செயல்பாடுகளில் இருப்பதாக தோற்றம் ஏற்படுத்துகின்றனர்
. நோக்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்பதல்ல, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை, குறிப்பாக, ஜியோவை வளர வைப்பதுதான் என்று நிர்வாகம் முன்வைக்கிற சில ஆலோசனைகளில் தெளிவாகத் தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,12,100 கோடி கடனில் உள்ளது. இதில் ரூ.21,000 கோடி அரசுக்கு செலுத்த வேண்டிய அலைக்கற்றை கட்டணம். ஏர்டெல் நிறுவனத்தின் கடன் ரூ.1.06 லட்சம் கோடி. வோடாபோன் நிறுவனத்தின் கடன் ரூ.1,15,000 கோடி. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் ரூ.15,000 கோடிதான். திவாலாகிவிட்ட அனில் அம்பானியின் தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத் துக்கு ரூ.700 கோடி பாக்கி வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் வாங்கியிருக்கிறார். ஆக ஜியோ நிறுவனம் ரூ.700 கோடி பிஎஸ்என்எல்லுக்கு தர வேண்டும். மத்திய அரசும் பிஎஸ்என்எல்லுக்கு ரூ.6,500 கோடி பாக்கி வைத்திருக்கிறது. ஆக, சந்தை நிலைமைகளில் பிற தொலை தொடர்பு சேவை நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் வலுவானதாகவே இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தலைகீழான தோற்றத்தை முன்னிறுத்தி, பொதுத்துறை நிறுவனத்தின் சொத்துகளை விழுங்கப் பார்க்கிறார்கள். அந்த பொய்த் தோற்றத்தின் பெயரால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள 7.5 லட்சம் கி.மீ (ரூட் கி.மீ) அளவிலான கண்ணாடி இழை கம்பிகளின் (ஆப்டிக் ஃபைபர் கேபிள்) மதிப்பு ரூ.50,000 கோடி என்றும் பயன்படுத்தப்படாமல் இருப்பவற்றை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால்  ரூ.6,500 கோடி அளவுக்கு வருமானம் வரும் என்றும் சொல்லப்படுகிறது. (பிஎஸ்என்எல் போட்டியாளர்களான ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களிடம் மொத்தமாக 7.35 லட்சம் கி.மீ அளவிலான கண்ணாடி இழை கம்பிகள் உள்ளன. ஒட்டுமொத்த உள்கட்டுமான வசதிகளைப் பொறுத்தவரை, தனியார் நிறுவனங்கள் எவை யும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போட்டி போட முடியாது).
இந்த அரிய உள்கட்டுமான வசதியை பயன்படுத்தி, நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்தி போட்டியில் முன்னே செல்வது பற்றி திட்டமிடாமல், அதை தனியாருக்கு வாடகைக்கு விட்டு அதில் வரும் நிதியில் இருக்கிற ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம் போடும் அதிகாரிகள் எந்த விதத்தில் திறமையானவர்கள்? இவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வேலை செய்கிறார்களா? இல்லை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, ஜியோவுக்கு வேலை செய்கிறார்களா?
இவ்வளவு பெரிய சொத்து இருக்கிறபோது, அதுவும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக ஒப்புக்கொள்ளும் அதிகாரிகள், 2018 நிதியாண்டில் நட்டம் ரூ.7,900 கோடி, 2019ல் ரூ.7,500 கோடி, 2018ல் வருவாய் ரூ.25,070 கோடி, 2019ல் ரூ.23,000 கோடி என கணக்கு காட்டுகிறார்கள். 2018ல் ஊழியர் சலுகைகளை வெட்டியதன் மூலம் ரூ.2,500 கோடி மிச்சம் பிடித்ததாக பெருமை வேறு பேசுகிறார்கள்.
பிஎஸ்என்எல்லின் அரிய உள்கட்டுமானம் ஜியோவுக்குத்தான் வாடகைக்கு விடப்படும் என்று இன்றைய நிலைமைகளில் சொல்லாமல் விளங்கும். மக்கள் சொத்தை பயன்படுத்தி, ஜியோ லாபம் பார்க்கும். பொதுத்துறை நிறுவனம் மேலும் சீரழியும். ஜியோ மிகப் பெரிய வேட்டைக்குத் தயாராகிறது.
உடல் மண்ணுக்கு, உயிர் ஜியோவுக்கு என மோடியின் கார்ப்பரேட் விசுவாசம், அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டது.

Search