COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

சட்டத்தை ஜனநாயகத்தை மனித நேயத்தை குழிதோண்டி புதைத்த கறம்பக்குடி காவல்துறை

பழ.ஆசைத்தம்பி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதியில் 12.04.2019 அன்று இரவு 11.00 மணியளவில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஏற்படுத்திய விபத்தில்
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பலத்த காயம் அடைந்தனர். பக்கத்தில் இருந்த பிலாவிடுதி தலித் மக்கள் திரண்டு விபத்தில் சிக்கியயவர்களை தூக்கி முதல் உதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த கறம்பக்குடி காவல்துறை கூடி நின்ற மக்களை விரட்டிவிட்டு விபத்தில் சிக்கிய டூ வீலரை எடுக்க முயற்சித்தது. விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரியை பிடிக்க வேண்டுமென பொது மக்கள் வலியுத்தினர்.
எனக்கு சட்டம் சொல்லி தாரியா என காவல்துறை மக்களை மிரட்ட, உதவி செய்ய வந்த எங்களை ஏன் மிரட்டிரீங்க, இந்த கோபத்தை மணல் கொள்ளையர்களிடம் காட்டுங்க, அந்த வண்டியை புடிங்க என்றதும், கோபமடைந்த காவல்துறை, சட்டை கூட போடாமல் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்த சிபிஅய்எம்எல் மாவட்டக்குழு உறுப்பினர் வி.விஜயன் மற்றும் 3 தலித் இளைஞர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கறம்பக்குடி காவல் நிலையம் கொண்டு சென்றது.
காவல் ஆய்வாளர் கழனியப்பன் மூங்கில் கம்பால் விஜயனை கையை காட்டச் சொல்லி கடுமையாக தாக்கியுள்ளார். துணை ஆய்வாளர் நீதான் சட்டம் பேசியவனா என்று சொல்லிக் கொண்டே விஜயனின் ஆள்காட்டி விரûலை பிடித்து மடக்கி ஒடித்துள்ளார். வலியால் துடித்தவரை காலால் உதைத்து, மிதித்ததுடன் ஷ÷வைக் கழட்டி கன்னத்தில் அடித்துள்ளார், அதில் விஜயனின் கண் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மற்ற மூவரும் கூட இதே போல் தாக்கப்பட்டுள்ளனர்.
எந்த குற்றமும் செய்யாதவர்களை, உதவி செய்ய வந்தவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து உணவு, தண்ணீர் எதுவும் தராமல் காவல் நிலையத்திற்கு அருகில் மருத்துவமனை இருந்தும் 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு 4 பேரையும் கொண்டு சென்று மது போதை பரிசோதனை செய்யாமலே கையெழுத்து கேட்டு உள்ளனர். தோழர் விஜயன் என்னை இரத்த பரிசோதனை செய்யுங்கள் நான் குடிக்கவில்லை என கையெழுத்து போட மறுத்துள்ளார். அவரை மிரட்டி கையொப்பம் பெற்று கொண்டு மீண்டும் கறம்பக்குடி காவல் நிலையம் வந்து இரவு 3.00 மணிக்கு ஒரு தேநீர் கொடுத்து இரவு முழுவதும் லாக்கப்பில் அடைத்துள்ளனர்.
அதிகாலையில் பிலாவிடுதி மக்கள் வந்து பேசியும், வெளியில் விட மறுத்து 4 பேர் மீது சிஆர்.நம்பர் 85/19ல், 294(பி), 353, 506( 1 ), 4(1) டிஎன்பி ஆக்ட் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் விபரத்தை கேட்டறிந்த நீதிபதி வழக்கில் உண்மை தன்மை இல்லை என கூறி காவல்துறையை கண்டித்து, தனது சொந்த ஜாமீனில் 4 பேரையும் பிணையில் விடுவித்தார்.
மனித நேயத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 4 பேரையும் சட்டை கூட இல்லாமல் காவல் நிலையம் கொண்டு சென்று கேவலமாக பேசி ஷ÷வால் அடித்து, உதைத்து கை விரலை ஒடித்து, உணவு தண்ணீர் கூட தராமல் ஆலங்குடிக்கு பரிசோதனை என அலைக்கழித்து, மது போதையில் இருந்ததாக மிரட்டி கையொப்பம் வாங்கி இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து பொய் வழக்கு ஜோடித்து சிறையில் அடைக்க முயற்சித்த... விபத்து நடத்திய வண்டியை பிடிக்காமல் வழக்கு பதிவு செய்யாமல், சம்பந்தப்பட்ட இடத்தை மாற்றி தாறுமாறான தகவல் தந்து பெண் எஸ்அய்யை புகார்தாரர் ஆக்கி, சட்டத்தை, நீதியை, ஜனநாயகத்தை, மனித நேயத்தை குழிதோண்டி புதைத்த கறம்பக்குடி காவல் ஆய்வாளர் கழனியப்பன் உதவி ஆய்வாளர் ரூபினி ஆகியோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் கறம்பக்குடி காவல்துறையை கண்டித்து மே 23க்கு பிறகு இந்தப் பிரச்சனையில் போராட்டம் நடத்த இகக மாலெ திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தாக்கிய, சட்டத்தை கடைபிடிக்க தவறிய, விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகளை சட்டத்தின் முன்நிறுத்த சட்டரீதியான போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எளிய மக்களை காப்பாற்ற, நீதியை நிலைநாட்ட
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்!
தப்பானவர்களை தண்டிப்போம்!
தமிழக அரசே! மாவட்ட காவல் துறையே!
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட கறம்பக்குடி காவல் ஆய்வாளர் கழனியப்பன்,
உதவி ஆய்வாளர் ரூபினி ஆகியோர் மீது
உரிய நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்!
விபத்து ஏற்படுத்திய வண்டியின் மீது வழக்கு
பதிவு செய்து விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு
உரிய இழப்பீடு வழங்கு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
கறம்பக்குடி ஒன்றியம்

Search