வேகமாக சிதைக்கப்படும் கூட்டாட்சி முறையும் அரசியலமைப்பு உரிமைகளும்
ஆர்.வித்யாசாகர்
கிரேக்க புராண கதைகளில் இக்காரஸ் என்ற ஒரு கதா பாத்திரம் உண்டு. அவனுடைய தந்தை தேடலுஸ் மனிதன் உயரே பறக்க, பறவையின் இறகுகள் மற்றும் மெழுகை கொண்டு இறக்கைகளை கண்டுபிடித்தான். அதைக்கொண்டு இக்காரஸ் பறக்க முயன்ற போது, மிக உயரத்தில் பறந்ததால் சூரிய வெப்பத்தால் மெழுகு உருகி இறகுகள் விழுந்துவிடும் என்று தேடலுஸ் எச்சரித்தான். மேலே பறக்க ஆரம்பித்த இக்காரஸ் மேலே பறக்க பறக்க தனக்கு ஏதோ புதிய அதிகாரம் வந்துவிட்டது போல் எண்ணிக்கொண்டு அந்த அதிகார போதையில் மிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தான். அந்தோ பரிதாபம்! சூரிய வெப்பத்தால் இறகுகள் உருகி விட நடுக்கடலில் போய் விழுந்தான்.
அதே போல பெரும்பான்மை ஆதரவு என்ற அதிகார போதையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சி முறைக்கு எதிராக , மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் வண்ணம் மோடி அரசு, அரசியல் அமைப்பு சட்ட வரை முறைகளை மீறி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில், மக்களின் வெறுப்பு என்ற சூரிய வெப்பம் இறகுகளை உருக்க ஆரம்பித்திருக்கிறது.
2001 முதல் 2014 வரை, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, அப்பொழுது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் அரசு அதிகாரங்களை தன்னகத்தே குவித்துக்கொண்டிருக்கிறது என்று கூவிக்கொண்டிருந்தார். 2014ல் மோடி நாட்டின் பிரதம மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பொழுது மாநிலங்களுடைய அதிகாரங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றார். பா.ஜ .க. தேர்தல் அறிக்கையும் இதை கூறியிருந்தது. ஆனால் பா.ஜ .க., ஒன்றிய அரசு ஆட்சியில் அமர்ந்த கடந்த ஏழு ஆண்டுகளில், அக்கட்சிக்கு கிடைத்த மிகப்பெரும்பான்மை என்ற அதிகார போதையில் மாநிலங்களின் நிதி மற்றும் அதிகார உரிமைகளை படிப்படியாக ஒன்றிய அரசில் குவித்துக்கொண்டிருப்பதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். ன் வகுப்பு வாத கார்ப்பரேட் ஆதரவு பாசிசக் கொள்கைகளை இந்திய மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில், தேசிய பேரிடர் மேலாளுமை சட்டத்தின் துணையோடு, கொரோனா நிவாரணம் என்ற போர்வையில், ஜனநாயகத்திற்கு எதிராக, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் மோடி பல நடவடிக்கைகைகளை மேற்கொண்டிருக்கிறார். கொரோனா தடுப்பூசி கொள்கைகளில் மாநிலங்களின் (குறிப்பாக எதிர் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின்) உரிமைகளை பறிக்கும் போக்குதான் அதிகமாக காணப்பட்டது. கொரோனா நெருக்கடி, ஏற்கனவே மோடியால் மாநில உரிமைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் விரிசலை மேலும் ஆழமாக ஆக்கியிருக்கிறது.
தமிழ் நாட்டில், தற்போதைய தி.மு.க. அரசு பயன்படுத்தும் ஒன்றிய அரசு (மத்திய அரசு என்பதற்கு பதிலாக), தமிழ் நாடு போன்ற சொல்லாடல்கள், பாசிச சர்வாதிகார ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், சங்கிகளை அதீத கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 1 லேயே "பாரத் என்கிற இந்தியா என்பது மாநிலங்களின் ஒரு ஒன்றியம்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறுவது கூட்டாட்சி என சட்டம் உறுதிப்படுத்துகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்ற நினைக்கும் சங்கிகளால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியின் ஆரம்ப முதலே மக்களின் அடிப்படை உரிமைகள், மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது போன்ற நடவடிக்கைகளே விரவி இருக்கிறது. மோடி ஆட்சியின் முதல் பருவத்தில் ஆரம்பித்த இது போன்ற அழிவுக்கொள்கைகள் தொடர்ந்து இரண்டாம் பருவத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
கூட்டாட்சிக்கு குழிதோண்டிய மோடியின் முதல் ஆட்சி காலம்:
ஹிந்துத்வா மத வெறி கலாச்சாரத்தில் ஊறி திளைத்திருக்கும் மோடி அரசு ஒரு போதும் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்ட அரசல்ல. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி என இந்திய மக்களின் பன்முகத்தன்மையை, கலாச்சார வேறுபாடுகளை, மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக்கட்டி ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதே அவர்களின் நோக்கம். பா.ஜ . க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்ற தவறியதில்லை.
மோடியால் தலைமை தாங்கப்படும் ஒன்றிய அரசு, மாநிலங்களை சமமான அதிகாரம் கொண்டவர்களாகவோ அல்லது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதில், மாநிலங்களுக்கும் முழு பொறுப்பு இருப்பதாகவோ ஒரு போதும் கருதுவது இல்லை
2014ல் மோடி ஆட்சிக்கு வந்து சில வாரங்களிலேயே, ஆகஸ்ட் 15 அன்று தனது முதல் சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசின் திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு ஜனவரி 2015ல் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய திட்டக் குழு, ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் என்பதோடு இந்திய ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும், மாநிலங்களின் தேவைக்கேற்ப செயல்படக்கூடிய, திட்டங்களை தீர்மானிக்கும். இந்த திட்டங்கள் எல்லாம் தற்போது வெட்டப்பட்டு விட்டது. இதில் நகை முரண் என்னவென்றால், ஒன்றியம் மற்றும் மாநிலங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, நிதி ஆயோக் ஆலோசனை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசின் அதிகாரக்குவிப்பு போக்கால் இந்த பிரச்சனைகள் ஆழமாக்கப்பட்டிருக்கிறது. நிதி ஆயோக் ஒரு மிகவும் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் போன்ற, தன்னுடைய புகைப்படத்தையும், தன்னையும் முன்னிலை படுத்தும் திட்டங்களுக்கே அதிக நிதி செலவிடப்பட்டது. மாநிலங்களுக்கு அளித்த பங்கைவிட, பெரும்பங்குதிட்டம் குறித்த ஊடக விளம்பரங்களுக்கு செலவழிக்கப்பட்டது. மாநிலங்களின் மற்ற திட்டங்களுக்கான நிதி வெட்டப்பட்டது.
அதிகமான வரி வருமானம் ஒன்றிய அரசிடம் குவியும் பட்சத்தில், அவற்றை மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கான தகவமைப்புகள் - 1. ஒன்றிய அரசின் நிதி ஆதரவில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள், 2. நிதிக் குழு, 3. திட்டக்குழு. இந்த மூன்றுமே மோடியால் மாற்றி அமைக்கப்பட்டு மாநிலங்களின் நிதி ஆதாரமும் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாது இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட்ட, உச்ச நீதி மன்றம் முதல் ரிசெர்வ் வங்கி வரை, மத்திய புலனாய்வுத்துறை முதல் தேர்தல் கமிஷன் வரை, முக்கியமாக ஊடகத்துறை போன்றவற்றை மோடி அரசு மாநிலங்களை மிரட்டும் வகையில், தனக்கு ஆதரவான அமைப்புகளாக மாற்றிவிட்டது.
ஜனவரி 2018ல் சில உச்ச நீதி மன்ற நீதிபதிகளே , வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பத்திரிக்கை கூட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மத்திய புலனாய்வுத்துறை எங்கள் மாநிலங்களின் வழக்குகளை விசாரிக்கத்தேவையில்லை என பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கன்ட், மஹாராஷ்டிரா, கேரளா, சட்டிஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு தடை போட்டன.
மாநிலங்களின் நிதி சுதந்திரத்தையும் ஒழித்துக்கட்டும் வகையில், வரி வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை ஒன்றிய அரசிடமே வைத்துக்கொள்ளும் வகையில் நிதிக்குழுவின் கொள்கைகள் மாற்றப்பட்டது. 2015ல் 14வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்த வரி வருமானத்தில் மாநிலங்களின் பங்கு 32 லிருந்து 42 சதவிகிதமாக மாற்றப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து, மாநிலங்களில் மானியத் தொகைகளில் வெட்டு, ஒன்றிய அரசு திட்டங்களுக்காக செலவிடப்படும் நிதியில் மிக அதிகமான வெட்டு, போன்றவை மாநிலங்களின் பங்கை முன்பிருந்த நிலைக்கே கொண்டுவந்துவிட்டது.
வரி வசூலில் மாநிலங்களின் பங்கை குறைக்க மோடி கடைபிடித்த மற்றொரு தந்திரம், நிதிக் குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு உரிமை இல்லாத உப வரியை (சர் சார்ஜ்) அதிகரித்து வரி வசூலில் பெரும்பகுதியை தன வசம் வைத்துக்கொள்வதாகும். உதாரணமாக பெட்ரோல், டீசல் வரியில், ஒன்றிய அரசிற்கு செல்லும் இந்த சர் சார்ஜ் மிக அதிகம். இது போன்ற தந்திரங்களால் மாநிலங்களின் பங்கு என்பது வெறும் 34 சதவிகிதம்தான். மாநிலங்களின் பங்கை உயர்த்துவது என்பது வெறும் கேலி கூத்தாக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய, மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில தடாலடி முடிவுகளை மோடி எதுத்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை கலந்து கொள்ளாமல் 2016ல் ஒருநாள் நள்ளிரவில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதனால் நாட்டுமக்கள் அனுபவித்த கொடுமைகள் நாம் அறிந்ததே. கருப்புப்பணத்தை ஒழிக்கிறோம், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில், 90 சதவிகிதத்திற்கும் மேலாக உழைப்பாளர்கள் பணி செய்யும், முறைசாரா தொழில்களை முடமாக்கி போட்டதுதான் மிச்சம். அப்பொழுது அடி வாங்கிய சிறு குறு தொழில்களால் இன்னும் கூட எழுந்திருக்க முடியவில்லை.
விற்பனை வரி வசூல் உரிமைகளை தன்னகத்தே கொண்ட மாநில அரசாங்கங்களுக்கு , மக்களின் தேவைக்கேற்ப வரி விதிக்கும் உரிமை இருந்தது. ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் 2016ம் ஆண்டு, 101 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் நாடு முழுவதற்குமான "சரக்கு மற்றும் சேவை வரி " (GST) கொண்டுவரப்பட்டது. இது மாநிலங்களின் உரிமைகளை அதிகம் பறித்ததுடன் மாநிலத்திற்கு சேரவேண்டிய பங்கை முறையாக அளிப்பதிலும் சரியாகச் செயல் படவில்லை. மேலும் மக்கள் மிக அதிகமான வரிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். "சரக்கு மற்றும் சேவை வரி " தொடர்பான முடிவுகளை எடுக்க மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தோடு கூடிய கவுன்சில் இருக்கிறது. மக்கள் தொகை, வரி வருமானம் போன்றவை கணக்கில் கொள்ளப்படாமல் ஒரு மாநிலத்திற்கு ஒரு வோட்டு என்ற விதத்தில், 75% வோட்டு போடப்படும் அம்சங்கள் முடிவாக்கப்படும் என்றிருக்கிறது. இதனால் பா.ஜ.க. . ஆட்சியிலில்லாத மாநிலங்களின் தேவைகள் நிறைவேறுவது மிகவும் கடினம்.
பா.ஜ .க ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோடி தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த உத்தராகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் 2016ல் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி, மோடி-ஷா கூட்டு சதியால், கொண்டுவரப்பட்டது. உச்ச நீதி மன்ற தலையீட்டால் இந்த நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது நாம் அறிந்ததே.
2018 ஆகஸ்ட் மாதம் கேரளா மாநிலத்தில் பேரழிவு வெள்ளம் ஏற்பட்ட பொழுது, யுனைடெட் அராப் எமிரேட்ஸ் கேரள மாநிலத்திற்கு வழங்க முன் வந்த ரூ.700 கோடி நிதி உதவியை பெற கேரளாவிற்கு மோடி அரசு தடை விதித்தது.
கூட்டாட்சிக்கு தீவிரமாக முடிவு கட்ட முயற்சிக்கும் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலம்
2019ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே குலைக்கும் வண்ணம் ஆகஸ்ட் மாதம் , ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாநிலமே இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக துண்டாடப்பட்டு ஜனநாயகம் படு கொலை செய்யப்பட்டது.
அதே ஆண்டில் நீட் நுழைவுத்தேர்வு என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஏழை, பட்டியலின, பழங்குடி மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை தட்டிப்பறித்து, 2020ல் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாநிலங்களுக்கு கல்வித் துறையில் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, ஹிந்தியை திணிக்க முயற்சித்தது, விவசாயத்துறையில் மாநிலங்களுக்கு இருந்த உரிமைகளை குழி தோண்டி புதைக்கும் வண்ணம், கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்கள் , மின்சார திருத்த சட்டம் போன்றவற்றை நாடாளுமன்ற மரபுகளை கேலி கூத்தாக்கி கொண்டுவந்தது, போன்றவை கூட்டாட்சி தத்துவத்திற்கு சமாதி கட்டும் தீவிர முயற்சிகளாகும். (விவசாய சட்டங்களுக்கு எதிராக எட்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியை முற்றுகை இட்டு போராடும் விவசாயிகளை இதுவரை மோடி சந்திக்க வில்லை). இன்னும் இதுபோல் பல நடவடிக்கைகள் உள்ளன. அவற்றில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானெர்ஜீயின் ஆட்சிக்கு எதிராகவும், மக்களை பற்றியோ மாநிலங்களின் உரிமைகள் பற்றியோ கவலையே இல்லாமல் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கவை.
2021 சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க, வெற்றி பெற்ற மம்தா அரசாங்கத்தை பழிவாங்கும் அரசியலைச் செய்து வருகிறது. தேர்தலுக்குப்பின் நடந்த வன்முறை சம்பவங்களை சாக்காக வைத்துக்கொண்டு, தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகிவற்றின் குழுக்கள் ஆய்வு செய்ய அனுப்பப்பட்டன. பா.ஜ .க தலைவர்களும் மற்றவர்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருணாமுல் காங்கிரசை கண்டித்து எழுதினர். இதன் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தொல்லைகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் வேறு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது மோடி அரசு.
"யாஸ்" புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒடிஷாவிற்கு அடுத்து மேற்கு வங்கம் சென்றார் மோடி. அவர் மேற்கு வங்க முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், ஆய்வுக் கூட்டத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயாவும் 30 நிமிடங்கள் தாமதமாகவே ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்தார். புயல் பாதிப்பு குறித்த அறிக்கைகளை சமர்பித்துவிட்டு, வேறு பணிகள் இருப்பதாகக் கூறிவிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார் மம்தா.
இதனால் சீற்றமுற்ற மோடி -ஷா இரட்டையர் உடனே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயா மே 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதாக இருந்தது. `கொரோனா தடுப்பு பணிகளை மனதில் கொண்டு தலைமைச் செயலாளருக்கு மூன்று மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தார் மம்தா. இதையடுத்து அவருக்கு மூன்று மாத கால பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது ஒன்றிய அரசு. இந்தநிலையில், பணி நீட்டிப்பு வழங்கிய நான்கே நாள்களில் அவரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் பயிற்சி மையத்துக்கு மாற்றி உத்தரவிட்டது ஒன்றிய அரசு. ஆனால் அவரை ஒன்றிய அரசுப்பணிக்கு மம்தா அனுப்பவில்லை. ஏற்கனவே உள்ளபடி அவர் மே 31 பணி ஒய்வு பெற்று, மம்தாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுவிட்டார்.
கூட்டாட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி அரசியல்
2021 ஜனவரி மாதம் முதல் முன்களப்பணியாளர்களுக்கும், பிறகு 45 வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தாக்குதல்
ஏற்பட்டதால், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகம் தேவைப்பட்டன.
கார்ப்பரேட் லாப வெறியையே தன்னுடைய நோக்கமாகவும்
கொண்ட மோடி அரசு, வெறும் இரண்டு நிறுவனங்களுக்கே
தடுப்பூசி தயாரிக்கும் உரிமைகளை வழங்கி இருந்த மோடி அரசு,ஏப்ரல் 19, 2021 அன்று ஓர்
அதிரடி முடிவெடுத்தது. ‘இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளில் 50 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். 45 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு இவற்றைச் செலுத்தலாம். 25 சதவிகிதத்தை மாநில அரசுகளே நேரடியாக வாங்கி
18-44 வயதில் இருப்பவர்களுக்கு அளிக்கலாம். 25 சதவிகிதம் தனியார் மருத்துவ மனைகளுக்கு’
என்றது. ஒன்றிய அரசு, மாநில அரசு, தனியார்
மருத்துவ மனைகள் ஆகிய மூவருக்கும் தனித்தனி விலை. மே முதல் தேதியில் இது அமலுக்கு வந்தது.
மோடி அரசின் இந்த கொள்கைக்கு பெரும் எதிரிப்பு
எழுந்தது..
எல்லோருக்கும்
தடுப்பூசி
போடும்
பொறுப்பை
ஒன்றிய அரசு
தட்டிக்
கழித்து,
மாநிலங்களின்
தலையில்
சுமையை
ஏற்றுவதாக
எதிர்க்கட்சிகளைச்
சேர்ந்த முதல்வர்கள்
குற்றம்
சாட்டினர்..
உலக அளவில் டெண்டர்
விட்டு
வெளிநாட்டு
நிறுவனங்களிடம்
வாங்க
தமிழ் நாடு
உள்ளிட்ட
சில
மாநிலங்கள்
முயன்றன.
ஆனால்,
வெளிநாட்டு
நிறுவனங்களோ
‘மத்திய அரசுக்கு மட்டுமே நேரடியாக விற்க முடியும்’
என்றன.
இந்நிலையில் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இணைந்து, ‘தடுப்பூசி விநியோகத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘நாம் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ஆகியோரும் இதேபோலக் கடிதம் எழுதினர். இது மத்திய அரசுக்குப் பெரும் அழுத்தமாக மாறியது.
இந்த சமயத்தில் உச்ச நீதிமன்றமும்
களத்தில்
இறங்கியது.
நீதிபதிகள்
சந்திரசூட்,
நாகேஸ்வரராவ்,
ரவீந்திர
பட்
ஆகியோர்
அடங்கிய
அமர்வு,
தடுப்பூசி
விவகாரத்தைத்
தானாகவே
முன்வந்து
பொதுநல
வழக்காக
எடுத்துக்கொண்டது.
“ஒரே தடுப்பூசியை மருந்து நிறுவனங்கள் மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் என மூன்று தரப்பினருக்கும் வெவ்வேறு
விலைக்கு
ஏன்
விற்கின்றன?’’
என
ஒன்றிய அரசின்
சொலிசிட்டர்
ஜெனரல்
துஷார்
மேத்தாவிடம்
நீதிபதிகள்
கேட்டனர்.
‘`நாங்கள்
நிறைய
தடுப்பூசிகள்
வாங்குவதால்
எங்களுக்கு
விலை
குறைவாகத்
தருகிறார்கள்’’ என்றார் அவர். ‘`அப்படியென்றால் எல்லாத் தடுப்பூசிகளையும் நீங்களே
குறைந்த
விலைக்கு
வாங்கி
மாநிலங்களுக்குப்
பிரித்துத்
தரலாமே?’’
என்று
நீதிபதிகள்
கேள்வி
கேட்டனர்.
நீதிபதிகள்
கேட்ட
இன்னொரு
கேள்வியும்
முக்கியமானது.
“45
வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு
இலவசமாக
மத்திய
அரசு
தடுப்பூசி
தருகிறது.
18 முதல்
44 வயது
வரை
உள்ளவர்களுக்கு
அப்படித்
தர
மறுக்கிறது.
அவர்கள்
பணம்
கொடுத்து
தடுப்பூசி
போட்டுக்கொள்ள
வேண்டுமா...
எல்லோருக்கும்
சம
உரிமையை
உறுதிசெய்யும்
அரசியல்
சட்டத்தின்
14-வது
பிரிவை
மீறும்
செயல்
அல்லவா
இது?’’
என்பதாகும்.
ஒரு கட்டத்தில், “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால், “மக்களின் அடிப்படை உரிமைகளை அரசின் கொள்கை முடிவுகள் பறிக்கும்போது, நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’’ என்று சொன்ன நீதிபதிகள், “மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது, பொருத்த மில்லாதது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
அத்துடன் நீதிமன்றம் நின்றுவிடவில்லை. “பட்ஜெட்டில் தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை எப்படிச் செலவு செய்தீர்கள், எத்தனை பேருக்குத் தடுப்பூசி போட்டீர்கள், மீதிப் பேருக்கு எப்போது போடவிருக்கிறீர்கள், எவ்வளவு
தடுப்பூசிகள்
வாங்கினீர்கள்,
எந்தெந்தத்
தேதிகளில்
வாங்கினீர்கள்,
மாநிலங்களுக்கு
எவ்வளவு
கொடுத்தீர்கள்,
இன்னும்
எவ்வளவு
தடுப்பூசி
வாங்குவீர்கள்,
அவை
எப்போது
வரும்...
எல்லாவற்றுக்கும்
உரிய
ஆவணங்களுடன்
இரண்டு
வாரங்களுக்குள்
பதில்
கொடுங்கள்’’ என்று மே 31-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஜூன் 2-ம் தேதி வெளியானது.
ஒரு
பக்கம்
மாநில
முதல்வர்கள்,
இன்னொரு
பக்கம்
உச்ச
நீதிமன்றம்
என
இரட்டை
நெருக்கடிகளால்
வேறு
வழியின்றி
பணிந்தது
ஒன்றிய அரசு.
ஜூன்
7-ம்
தேதி
புதிய தடுப்பூசி கொள்கையை அறிவித்த மோடி
‘இனி மாநிலங்கள் தடுப்பூசி வாங்க வேண்டியதில்லை. மத்திய அரசு மொத்தமாக வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்’
என
அறிவித்தார்.
இந்தியா மாநிலங்களின் கூட்டரசு. மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது, வலுவான எதிர்ப்பை கட்டமைப்பதன் மூலம் அதை எதிர்க்க முடியும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் போன்றவை மோடி அரசின் ஆதிக்கத்தால் மீண்டும் மிக வலுவாக இந்திய அரசியல் தளத்தில் முன்னுக்கு வந்திருக்கின்றன. ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த போராட்டங்களால் மட்டுமே இந்த சூழலை முறியடிக்கமுடியும்.