COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டை
வெற்றி பெறச் செய்வோம்!


ஒருமைப்பாடு மன்ற கூட்டங்களில் தீர்மானம்

 செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டிற்கான தயாரிப்பு கூட்டம், மறைமலைநகரிலும் வல்லக்கோட்டையிலும், ஆகஸ்ட் 29 அன்று நடந்தது. அந்தந்த பகுதி தொழிற்சாலைகளின் தொழிலாளர் முன்னோடிகள் கலந்து கொண்ட கூட்டங்களின் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
  • செப்டம்பர் 28, அன்று திருபெரும்புதூரில் நடக்கவுள்ள தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டை வெற்றிகரமாக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தொழிற்சாலை வாயிலிலும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து  பிரச்சாரம் செய்ய வேண்டும்.
  • ஒரு லட்சம் பேரை அணி திரட்ட வேண்டும்.
  • தொழிலாளர்கள் குடும்பங்களை அழைக்க வேண்டும்.
  • தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலாளர்களையும் இணைக்க வேண்டும்.
  • விடுமுறை நாட்களில் மாநாடு திட்டமிடலாம்.
  • சமூக வலைத்தளங்களில் காணொலி, பதாகைகள் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்
  • வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களையும் சந்திக்க வேண்டும்
  • 75 சதவீதம் தொழிற்சாலைகளை பங்கேற்க செய்ய வேண்டும்
  • கோவிட் பாதுகாப்பு சம்மந்தமான (தனிமனித இடைவெளி, முக கவசம், கையுறை, சானிடைசர்) முன்னேற்பாட்டோடு மாநாட்டை நடத்த வேண்டும்
  • 5%லிருந்து 10% வரையிலான தொழிலாளர்களை திரட்ட வேண்டும்
  • ஒருமைப்பாடு மன்றம் பற்றிய செய்தியை அனைவருக்கும் தெரியும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்
  • மய்ய சங்க தொழிலாளர்களையும் வர்க்க உணர்வோடு கலந்து கொள்ள வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வேலைத் திட்டம் வகுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தொழிற்சங்கத்தையும் நேரடியாக அணுக வேண்டும்.
  • சமூக வலைத்தளங்களில் பக்கங்களை உருவாக்க வேண்டும்.
  • சுவரெழுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
  • உண்டியல் நிதி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
  • பகுதிவாரியாக பொறுப்பாளர் நியமித்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.


Search