அம்பானியின்
சட்டைப் பையில் 56 இன்ச் மோடி ஆட்சி
ரிலையன்ஸ் கேஸ் ட்ரான்ஸ்போர்டேசன்
இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் முகேஷ் அம்பானிச் சொந்தமானது. இந்த நிறுவனம்
பங்குச் சந்தையில் பட்டியலில் இல்லை.
மார்ச் 31, 2015 அன்று இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.1,357 கோடி. நட்டம் ரூ.436 கோடி. முந்தைய ஆண்டில் வருமானம் ரூ.1,412 கோடி. நட்டம் ரூ.3,403 கோடி. நிறுவனம்
செலுத்த வேண்டிய கடன் பாக்கி ரூ.16,000 கோடி.
2019 - 2020க்குள் தர வேண்டிய கடனை 2030 -
2031க்குள் தரலாம் என பொதுத்துறை வங்கிகளிடம்
இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் மோடி 22 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டது. பங்களாதேஸுக்குக்
கடனாக இந்தியா ரூ.12,000 தருவது தலைப்புச் செய்தியானது. மோடி
அத்துடன் திரும்பவில்லை. அம்பானியும் அதானியும் ரூ.28,000 கோடி அளவுக்கு பங்களாதேஷில் முதலீடு செய்யவுள்ளனர். இதற்கான
பணிகளையும் செய்துவிட்டே மோடி திரும்பியிருக்கிறார். மேக் இன் இந்தியா அம்பானி,
அதானியின் மேக் இன் பங்களாதேஷாக மாறியுள்ளது.