நிலப்பறி
மசோதா கைவிடப்பட வேண்டும்அவிகிதொச ஆர்ப்பாட்டம்
நிலப்பறி மசோதா கைவிடப்பட வேண்டும்,
நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி பாக்கி
வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பனார்கோயில் ஒன்றியத்தில்
அனைத்திந்திய விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஜூன் 26 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. 150 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் அவிகிதொச ஒன்றியச் செயலாளர்
தோழர் கருணாநிதி தலைமை தாங்கினார். இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர்
எஸ்.இளங்கோவன், அவிகிதொச மாநிலத் தலைவர் தோழர்
டி.கே.எஸ்.ஜனார்த்தனன், மாநிலக் குழு உறுப்பினர் வீரச்செல்வன்
கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தோழர்கள் துணைகோட்டாட்சியரிடம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இகக
(மாலெ) நெல்லை நகர் உள்ளூர் மாநாடு
இகக(மாலெ)யின் நெல்லை நகர் உள்ளூர்
மாநாடு 20.6.2015 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு
தோழர்கள் கருப்பசாமி, சுந்தர்ராஜ், சங்கர் ஆகியோர் கொண்ட தலைமைக்குழு தலைமை தாங்கியது. கட்சியின்
மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.
நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினார். ஏஅய்சிசிடியு
மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கே. கணேசன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் 4 பெண் தோழர்கள் உட்பட 11 பேர் கொண்ட
புதிய உள்ளூர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. உள்ளூர் கமிட்டி செயலாளராக தோழர்
சுந்தர்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்,.இகக(மாலெ) கட்சியில் முன்னணிகளாகச் செயல்பட்டு வரும் சலவைத்
தொழிலாளர் தோழர்கள் மீது சாதி ஆதிக்க தாக்குதல்கள் நடத்தி வருபவர்கள் மீது புகார்
கொடுத்தால் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக மாலெ கட்சித் தோழர்கள் மீதே பொய் வழக்குப்
போடும் நெல்லை நகர் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடிப்படை
வசதிகளை உறுதிப்படுத்து
அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட
உப்புகாரமேடு, சந்திரசேகரபுரம், கல்யாணபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் வசதியில்லாமல்,
பகுதி மக்கள் பெரும்துன்பத்துக்கு
ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்பான்மையானவர்கள் தலித்
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதால் இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை உறுதி
செய்வதில் அம்பத்தூர் நகராட்சி அலட்சியம் காட்டுகிறது. பகுதி மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பான
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்
22 அன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பத்தூர்
நகராட்சியை முற்றுகையிட்டனர்.
கல்வி
கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து
அரசு பள்ளிகளை மேம்படுத்திடு, தனியார் கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடு ஆகிய
முழக்கங்களுடன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின்
மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக வடிவேல் தலைமையில் புரட்சிகர இளைஞர் கழகம் ஜூன் 24 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில
பொதுச் செயலாளர் தோழர் தனவேல், மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ராஜசங்கர்,
மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள்
விமல்ராஜ், செவிச்செல்வன் கண்டன உரையாற்றினார்கள்.