COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


அறிவிக்கப்படாத அவசர நிலையை கண்டித்து

நாட்டில் நிலவும் அறிவிக்கப்படாத அவசர நிலையை கண்டித்து அகில இந்திய மக்கள் மேடை ஜூன் 26 அன்று நாடு தழுவிய அளவில் நடத்திய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோவையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 400 பேர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயபிரகாஷ் நாரயணனன் வரவேற்புரை ஆற்றினார். 
இகக மாலெ அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மக்கள் குடியுரிமை கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சா.பாலமுருகன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்கே.நடராசன், அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன், சாந்தி கியர்ஸ் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாலமுருகன் உரையாற்றினர். இகக மாலெ கூடலூர் பகுதிக் குழு செயலாளர் தோழர் நடராஜ் தீர்மானங்கள் முன்வைத்தார். பெரிய நாயக்கன்பாளையம் உள்ளூர் கமிட்டிச் செயலாளர் தோழர் சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

திருபெரும்புதூரில் ஜூன் 26 அன்று கருத்தரங்கம் நடத்தப்பட்டது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய மக்கள் மேடையின் பிரச்சாரக் குழு உறுப்பினர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக் குழு உறுப்பினரும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவருமான வழக்கறிஞர் பிரகாஷ், அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக் குழு உறுப்பினரும் என்டியுஅய் தேசியச் செயலாளருமான சுஜாதா மோடி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய செயலாளர் தோழர் பாரதி, ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவஹர், யுஎல்எப் துணைத் தலைவர் தோழர் சீனிவாசன் உரையாற்றினர். டைமண்ட் இன்ஜினியரிங், சி & எப், ÷ண்டாய், நிப்பான் எக்ஸ்பிரஸ் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
ஜூன் 26 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.லால்மோகன் தலைமை தாங்கினார். இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மேரிஸ்டெல்லா வரவேற்புரையாற்றினார். இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் சிம்சன், அகில இந்திய மக்கள் மேடை தேசியக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், சமூக ஆர்வலர் ஜே.ஜெஸ்வின் ஜீசர் ஜெபநேசர், ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி தலைவர் எம்.எஸ்.ஜாக்ஸன், இகக(மாலெ) குமரி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினர். இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் டி.சங்கரபாண்டியன், முற்போக்கு பெண்கள் கழக குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.சுசீலா, ஏஅய்சிசிடியு தலைவர்கள் கணேசன், சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Search