நாம் அனைவரும் ரகசியமாய் ஆண்கள்தான். காலையில்
கவனமாக மீசையை ஷேவ் செய்து விடுகிறோம்.
ஒரு பெண்ணாக இருந்தபோதும் நான் சுவாசிக்கிறேன்.
உயிரோடு இருக்கிறேன். இந்த நாட்டில் வாழ்கிறேன். இதுவே மாபெரும் சாதனை.
ஒரு பெண்ணாக இருந்தபோதும் கங்கனா ரனாவத் நன்றாக
நடிக்கிறார். நல்ல நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார்.
நான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட ஒரு டீ போட்டு
குடித்துவிட்டு சில மெயில்களையும் பார்த்து விட்டேன்.
(ஒபாமா ஒரு பார்க் பெஞ்சில் அமர்ந்திருப்பதையும், அவருக்கு முன்பு
ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நின்று கொண்டிருக்கும் படத்தைப் போட்டு) ஒபாமா
ஒரு செக்ஸிஸ்ட்... இவ்வளவு பெரிய பெஞ்சில் அவரே முழுமையாக உட்கார்ந்து
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். பாவம் ஒரு பெண்ணாக இருந்தும் மெர்க்கல் நின்று
கொண்டிருக்கிறார்.
மோடி ஒரு ஆணாக இருந்தாலும் கூட, எல்லை தாண்டி
மியான்மருக்குள் சென்று தீவிரவாதத்துக்கு எதிராக சண்டை போட முடிகிறது.
இது மோடியின் தவறு அல்ல.அவர் ஆர்எஸ்எஸ்லிருந்து
வந்தவர். அங்கு தலைவர்களின் பாதங்களை பெண்கள்தான் கழுவ வேண்டும்.
அன்பான மோடிஜி, பெண்ணாக இருந்தாலும் கூட இன்று உரிய நேரத்தில்
அலுவலகம் வந்து விட்டேன். நான் பதக்கம் பெற தகுதியானவர் என நினைக்கிறேன்.
ஆர்எஸ்எஸ் சகாக்களில் பெண்களிடம் நீங்கள்
பலவீனமானவர்கள். உங்களால் உலகத்தோடு போட்டி போட முடியாது என்றுதான் சொல்லித்
தரப்படுகிறது.
எப்படி இவ்வளவு பேர் மோடிக்கு ஓட்டுப்
போட்டார்கள்? பாஜகவிலும் இருக்கிறார்கள். ஆச்சரியம்தான் போங்கள்.
பெண்கள் மீது வெறுப்பு இருந்தாலும் ஏராளமான
பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை பிரதம மந்திரிக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.
அய்எஸ்அய்எஸ்க்கு எதிரான குர்தீஸ் இனப்
பெண்களின் போராட்டம் மோடிக்கு தெரியவில்லை
ஒரு பெண்ணாக இருந்தும் கூட மேரி க்யூரி
இயற்பியல் மற்றும் வேதியிலுக்கான நோபல் பரிசை வென்றார்.
நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, நான் நினைத்தபடி
எனக்குப் பிடித்தபடி செயல்படுவேன். அடுப்பங்கரையில் நேரத்தை செலவிட மாட்டேன்.
நண்பர்களுடன் இரவு நீண்ட நேரம் வரை வெளியில் செல்வேன். என்னுடைய வாழ்க்கையை நான்
வாழ்வேன்.
நான் பெண்ணாக இருந்தாலும் கூட, பொறுத்துக்
கொள்வேன், மன்னிப்பேன், இன்னொரு வாய்ப்பு
தருவேன், புன்முறுவல்
செய்வேன். சிரிப்பேன்.அழுவேன்.காயப்படுத்துவேன்.குணப்படுத்திக் கொள்வேன், கொண்டாடுவேன், நம்பிக்கையோடு
இருப்பேன், பிரார்த்திப்பேன்.