COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, June 16, 2015

சிந்தையைத் தூண்டும்
சில தகவல்கள்

2010ல் உலக மக்கள் தொகை 690 கோடி.
1.            கிறிஸ்தவர்கள் 220 கோடி பேர் (21%).
2.            இசுலாமியர்கள் 160 கோடி பேர் (23%).
3.            மத வழிபாடு இல்லாத/கடவுள் கும்பிடாதவர்கள் 110 கோடி பேர்.
4.            இந்துக்கள் 100 கோடி பேர்.

2050ல் இது எப்படி மாறும் என ஓர் உத்தேசக் கணக்கு உள்ளது.
1.            கிறிஸ்தவர்கள் 290 கோடி பேர் (31%).
2.            இசுலாமியர்கள் 280 கோடி பேர் (30%).
3.            இந்துக்கள் 140 கோடி பேர் (14.9%).
4.            மத வழிபாடு இல்லாத/கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் 123 கோடி பேர் (13.2%).

இங்கிலாந்தின் ஆர்க் பிஷப் ஆப் கேண்டர்பரி தமக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது என்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் 1983ல் எம்மதமும் இல்லாதவர்கள் 1 கோடியே 28 லட்சம் பேர், 31% என இருந்தனர்.
2003ல் இது 43% ஆனது இப்போது 2014ல் கடவுள் வழிபாடு இல்லாதவர்கள் 49%, அதாவது 2கோடியே 47 லட்சம் பேர் இருந்தனர்.
1983ல் 0.6% என இருந்த இசுலாமிய மக்கள் தொகை 2014ல் கிட்டத்தட்ட 5% ஆகி உள்ளது.

லண்டன் மாநகரில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முதற் பெயரில் மிகவும் பொதுவான பெயர் முகமது ஆகும்.
அய்க்கிய ராஜ்ஜியம் (யுகே) வேல்ஸ் நெடுக இந்த வகை பொதுப் பெயரில் முகமது என்ற பெயர் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது .
அய்ரோப்பா நெடுகப் பரவுகிறது
இசுலாமிய எதிர்ப்பு உணர்வு
             அய்ரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் இருக்கும் நேரத்திலேயே, அய்ரோப்பா எங்கும் இசுலாமியர் மீதான வெறுப்பும் பரவுகிறது. இத்தாலியர்களில் 61% பேர், போலந்துக்காரர்களில் 56% பேர், ஸ்பெயின்காரர்களில் 42% பேர் வலுவான இசுலாமிய எதிர்ப்பு உணர்வு கொண்டுள்ளனர்.
             பிரான்சிலும் ஜெர்மனியிலும் நான்கில் ஒருவர் இசுலாமியர் இருப்பால் சங்கடப்படுகிறார்கள். இருப்பதிலேயே இங்கிலாந்துகாரர்கள்தான் இசுலாமியர் தம் சமூகத்தில் இருப்பது தொடர்பாக கூடுதல் நேர்மறை (பாசிட்டிவ்) உணர்வு கொண்டுள்ளனர். 19% பேர் மட்டுமே இசுலாமியரை தாம் நேர்மறையாகப் பார்க்க வில்லை எனச் சொல்லி உள்ளனர். சார்லி ஹெப்டோ நிகழ்ச்சிக்குப் பிறகு, 2015ல் பிஈடபிள்யு ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தந்துள்ளது.
             ஸ்பெயினில் 52% பேர் இசுலாமியர் பற்றி நேர்மறை (பாசிட்டிவ்) கருத்து கொண்டுள்ளனர். பிரான்ஸ் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினின் 18 வயது முதல் 29 வயது உள்ளவர்கள், 50 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களைக் காட்டிலும் இசுலாமியர் பால் சாதகமான கருத்து கொண்டுள்ளனர்.     போலந்தில் இசுலாமியர்க்குச் சாதகமான கருத்து உடையவர்கள் 30% என்றால் பாதகமான கருத்து உடையவர்கள் 56% ஆவார்கள். இத்தாலியில் இது 31:61 என கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது.
             அய்எஸ்அய்எஸ்சிற்கு மேற்கு ஆசியாவில் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் அல்லாமல் அய்ரோப்பாவிலிருந்தும் படையாட்கள் சேர்கிறார்கள்.
             இசுலாத்தை சாத்தான்மயமாக்குவது இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்பவற்றை எவ்வளவுதான் ஏகாதிபத்தியம் முடுக்கி விட்டாலும், விரிவுபடுத்தினாலும், அவை வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
             2010 கணக்குப்படியான கிறிஸ்தவர்கள் 220 கோடி பேர், கடவுளைக் கும்பிடாதவர்கள் 110 கோடி பேர், இந்துக்கள் 100 கோடி பேரில் அதாவது 430 கோடி பேரில், கணிசமான பெரும்பான்மையினர் 160 கோடி         இசுலாமியருக்கும் எதிரான போர் என்பதை நிச்சயம் ஆதரிக்க மாட்டார்கள். 160 கோடி 40 வருடங்களில் 280 கோடி பேர் ஆகும்.
             உலகில் அமைதி நிலவ மக்கள் வாழ்வில் முன்னேற்றம் வர, ஏகாதிபத்தியமும் மதவாத மும் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
இந்தியாவில்,
சச்சார் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோருவோம்.
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எஸ்சி, எஸ்டி அந்தஸ்து கோருவோம்.
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் இசுலமாமியர்களுக்கும் எஸ்சி, எஸ்டி அந்தஸ்து கோரி ரிட் மனு எண் 180/2004 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அய்முகூ அரசு பத்தாண்டுகளில் அந்த வழக்கில்      சாதகமான நிலை எடுக்கவில்லை. மோடி அரசை, ரிட் மனு எண் 180/2004ல் ரங்கநாத் குழு பரிந்துரையை ஏற்க வலியுறுத்துவோம்

Search