இகக (மாலெ) அகில இந்திய பயிற்சிப் பட்டறை
2015 மே 30, 31 தேதிகளில் லக்னோ கைசர்பாக்கிலுள்ள காந்தி கூட்ட அரங்கில் இகக (மாலெ)
செயல்வீரர்களுக்கான இரண்டு நாள் அகில இந்திய அளவிலான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
23 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 200 மாவட்டங்களின் ரயில்வே, சுகாதாரம், பல்கலைக்கழகம்
உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் பல்வேறு வெகுசன அமைப்புகளில் பணியாற்றும் 700 வேர்க்கால் மட்ட
செயற்பாட்டாளர்கள் பட்டறையில் கலந்து கொண்டனர்.
மோடி அரசாங்கத்தின்
கார்ப்பரேட் மதவெறி கொள்கைகளுக்கு எதிராக, பல்வேறு மாநில அரசாங்கங்களின் மக்கள் விரோத
கொள்கைகளுக்கு எதிராகவும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த கட்சி
அமைப்பின் வலைப்பின்னலை விரிவாக்கவும், உறுதிபடுத்தவும் அதே நேரம் கட்சியின்
உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வழிவகைகளை கண்டறியும் பொருட்டும் விரிவான
விவாதங்கள் நடந்தன.
பட்டறையின்
முடிவில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், ‘ஓராண்டிலேயே
யதார்த்த வாழ்க்கை, மோடி பிரச்சாரத்தின் ஆரவாரத்தை மக்களுக்கு
அம்பலப்படுத்திவிட்டது.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கோபம் வளர்ந்து வருவதால்
பெரும் அளவிலான மக்கள் இயக்கத்துக்கான காலம் கனிந்து வருகிறது. இந்தச் சூழலில்
ஒவ்வொரு கட்சி செயல்வீரரும் கட்சியின் திட்டமிட்ட முறையான வளர்ச்சிக்கு
உணர்வுபூர்வமான வினையாற்ற வேண்டும்’ என்றார். தொடர்ச்சியான இயக்கங்கள், எதிர்ப்பு
நடவடிக்கைகள், வாக்குச் சாவடி மட்டத்தில் அமைப்பைப் பலப்படுத்துவது,
பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள்
மற்றும் விவசாயிகள் ஆகிய பிரிவினரிடமிருந்து கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை
உயர்த்துவது ஆகியவற்றின் தேவை பற்றி குறிப்பிட்டார். அடுத்த கட்சி காங்கிரசுக்குள்
உறுப்பினர் எண்ணிக்கையை 2 லட்சம் அளவிற்கு உயர்த்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது.