‘மத மாற்றம் தொடர்பான விவாதங்கள்’
குறுநூல்
வெளியீடு நிகழ்ச்சிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் அரசியல் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்ட ‘மத மாற்றம் தொடர்பான விவாதங்கள்’ என்கிற குறுநூல் வெளியீடு நிகழ்ச்சிகள் சென்னை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில்
நடத்தப்பட்டன.
சென்னையில் மே 23 அன்று நடைபெற்ற அரங்க கூட்டத்தில், அகில இந்திய மக்கள் மேடையின் பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர்
அ.மார்க்ஸ் வெளியிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல்
தலைமைக் குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர்
வீரபாண்டியன் பெற்றுக்கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்றினர்.
கூட்டத்தில் உரை நிகழ்த்திய தோழர்கள் அனைவரும், மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்ள
இடதுசாரி சக்திகள் ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தினர். நிகழ்ச்சிக்கு சென்னை
மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார். திருவள்ளுர் மாவட்டச்
செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் முன்னிலை வகித்தார்.
கோவையில் மே 23 அன்று நடைபெற்ற அரங்க கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுந்தரம் நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்
தோழர் கே.எம்.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் தோழர் வி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் ஆர்.தாமோதரன் கருத்துரையாற்றினர். எழுத்தாளர் முருகவேல்
வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர்
பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார்.
திருநெல்வேலியில் மே 17 அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு மாலெ தீப்பொறி ஆசிரியர் குழு
உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின்
மாவட்டச் செயலாளர் தோழர் டி. சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் தோழர்
கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்
செயலாளர் தோழர் எஸ்.காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இரா.நாறும்பூநாதன் ஆகியோர் கருத்துரை
வழங்கினார்கள். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்
கே.கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இடதுசாரிக் கட்சிகளின் தோழர்கள் மற்றும்
பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நேபாள நிலநடுக்க நிவாரணத்துக்குத்
தமிழ்நாட்டில் இகக மாலெ திரட்டிய நிதி விவரங்கள் மே 15 - 31 மாலெ தீப்பொறி இதழில்
வெளியிடப்பட்டன.
குமரியில் கூடுதலாக ரூ.11,000, கோஆப்டெக்சில் கூடுதலாக ரூ.5,500, சென்னையில் கூடுதலாக ரூ.560,
கோவையில் கூடுதலாக ரூ.2,420 திரட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. (மொத்தம் ரூ.1,20,130).
சாலை
பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் - இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத சாலைப் பாதுகாப்பு
மசோதாவை ரத்து செய்யக் கோரி புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும்
மே 26 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில் நடந்த இந்த
ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் கண்டன
உரையாற்றினர்.
கல்வி
உரிமைச் சட்ட அமலாக்கம் பற்றி
தமிழக
அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்!
கல்வி உரிமைச் சட்டத்தின் பெயரில்,
மக்கள் பணத்தை தனியார் கல்வி முதலாளிகளுக்கு
அள்ளித் தருவதற்கு எதிராக, கல்வி உரிமைச் சட்ட அமலாக்கம் பற்றி
தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்,
அரசுப் பள்ளிகளில் கழிப்பறை முதல் வகுப்பறை வரை முறையான வசதிகள்
வேண்டும், அனைத்து தனியார் பள்ளிகள், கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்,
அமிர்த்தா ஓட்டல் மேலாளுமை கல்லூரியின் கட்டணக்
கொள்ளையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி மே 25 அன்று சென்னையில் புரட்சிகர இளைஞர்
கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் ஆர்ப்பாட்டம் நடத்தின.
கவர்ச்சிகரமான
விளம்பரங்கள் வெளியிடும் சென்னை அமிர்த்தா கல்லூரியின் கட்டணக் கொள்ளையால்
பாதிக்கப்பட்ட மாணவர்களும், பாரதி மகளிர் கலைக்கல்லூரி மாணவர்களும்
அம்பத்தூரைச் சுற்றியுள்ள ராமசாமி, பிரிட்டானியா, வெங்கடேஸ்வரா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர். புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில்
நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா
கண்டன உரையாற்றினார்கள்.