பீடிக்
கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிராக வெற்றிகரமான முற்றுகைப் போராட்டம்
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மய்யப்
பகுதியில் இயங்கி வந்த தாமோதர் பீடிக் கம்பெனியின் கிளைக் கடையை போக்குவரத்து வசதியில்லாத பக்கத்தில் உள்ள
கிராமமான குருவன்கோட்டைக்கு சட்ட விரோதமாக இடமாற்றம் செய்ய நிர்வாகம் முயற்சி செய்தது.
அதை அறிந்த பீடிப் பெண் தொழிலாளர்கள் 300 பேர் ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச்
செயலாளர் தோழர் கணேசன் தலைமையில் 14.05.2015 அன்று கம்பெனியை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து வட்டாட்சியர்,
காவல் உதவி ஆய்வாளர் மற்றும் உள்ளூர்
கவுன்சிலர்கள் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பீடிக் கடையை
குருவன்கோட்டைக்கு மாற்றக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2015 அன்று சமாதானக்
கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர்
தோழர் கணேசன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட
பெண்கள் கலந்து கொண்டனர். சமாதானக் கூட்டத்தில் பீடிக் கடையை குருவன்கோட்டைக்கு
மாற்றக் கூடாது என்றும் ஆலங்குளத்திலேயே தொடர்ந்து செயல்பட நிர்வாகம் நடவடிக்கை
மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.