ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில்
கர்நாடகா
அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!
அவிகிதொச
மாநில மாநாடு தீர்மானம்
2015, மே 15 அன்று சிதம்பரத்தில் நடந்த அனைத்திந்திய விவசாய கிராமப்புறத்
தொழிலாளர் சங்க 5ஆவது மாநில மாநாட்டில் பின்வரும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நில அபகரிப்பு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஜ÷ன் 30 அன்று அவிகிதொச நடத்தவுள்ள நாடு
தழுவிய போராட்டத்தை தமிழ்நாட்டில் வெற்றி பெறச் செய்ய அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
ஊழல், துரோக அதிமுக ஆட்சிக்கெதிராக, மக்கள் விரோத அதிமுக ஆட்சியை தோற்கடிக்க தொடர் அரசியல் பிரச்சார
கிளர்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
முடக்கி வைக்கப்பட்டிருக்கும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை
பழைய முறையிலேயே உடனடியாக செயல்படுத்த வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளுக்கும்
திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மாதக் கணக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எந்த அரசு
நலத்திட்டத்திற்கும் தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கக்
கூடாது.
அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கிராமப்புற தொழிலாளர்
குடும்பங்கள் அனைத்துக்கும் வீட்டுமனை, வீடு, வழங்கிட வேண்டும்.
கோவில், மடம், அறக்கட்டளை, சிறப்பு பொருளாதார மண்டல நிலங்களை
நிலமற்ற தொழிலாளர் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.
கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய சாமானிய மக்களின்
வருமானம் வாழ்க்கையை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தனியதிகாரியை நீக்கம் செய்துவிட்டு
உடனடியாக துணை வேந்தர் பதவியை செயலுக்குக் கொண்டு வர வேண்டும். பெண் மாணவர்களுக்கு
பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த
தொழிலாளர் 10,000 பேர்களை உடனடியாக
நிரந்தரப்படுத்திட என்எல்சி
நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் செய்யும்
உரிமையை தடை செய்யும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
விவசாயத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கடும் அச்சுறுத்தலான கடலூர் -
நாகை பெட்ரோலிய ரசாயன வளாகத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில்
திட்டமிடப்பட்டுள்ள மீத்தேன் திட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
ஆந்திராவில் தமிழக பழங்குடி தொழிலாளர்களை போலி மோதலில் கொன்ற
காவல்துறை, வனத்துறை அதிகாரிகள், டிஜிபி அனைவரும் கொலைக் குற்றத்தின்படி தண்டிக்கப்படும் வகையிலும்
கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும் உயர்நிலை நீதிபதிகளைக்
கொண்ட விசாரணை கமிசன் அமைக்கப்பட வேண்டும். ஆந்திர சிறைகளில் உள்ள தமிழகத்
தொழிலாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
மாநாட்டை ஒட்டி அவிகிதொச மாநிலத்
தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் தலைமையில் நடந்த பேரணியில் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இகக மாலெ கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தனவேல்
வரவேற்புரையாற்றினார். அகில இந்தியத் துணைத் தலைவர் தோழர் பங்கார் ராவ் துவக்க
உரையாற்றினார். புதுச்சேரி இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம்,
ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராசன்,
அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக் குழு
உறுப்பினர் தோழர் சிம்சன்
வாழ்த்துரையாற்றினர். தமிழ்நாடு இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுந்தரம் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் மாநிலத் தலைவராகவும் தோழர்
எஸ்.ஜானகிராமன் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.